பிப்ரவரி 5, 2023 அன்று, துருக்கியில் நடந்த ஒரு போட்டியில் கிறிஸ்டியன் அட்ஸ_ தனது கால்பந்து (கால்பந்து) அணிக்கான வெற்றி இலக்கை தொட்டார். ஒரு நட்சத்திர சர்வதேச வீரர், அவர் தனது சொந்த நாடான கானாவில், வெறுங்காலுடன் ஓடும் குழந்தையாக இருந்து விளையாட்டைக் கற்றுக்கொண்டார். கிறிஸ்டியன் இயேசுவின் விசுவாசியாக இருந்தார். “என் வாழ்க்கையில் நடந்த மிகச் சிறந்த விஷயம் இயேசுவே” என்று அவர் கூறியிருக்கிறார். அட்ஸ_ சமூக ஊடகங்களில் வேதாகமத்தின் வசனங்களை அவ்வப்போது பதிவிட்டார். இயேசுவைக் குறித்து வெளிப்படையாகப் பேசினார். மேலும் ஆதரவற்றோருக்கான பள்ளிக்கு நிதியளிப்பதன் மூலம் அதை செயல்படுத்தினார்.
அவர் வெற்றி இலக்கை அடைந்த மறுநாளே, ஒரு காலத்தில் வேதாகம நகரமாயிருந்த அந்தியோகியா பட்டணத்தில் பேரழிவு தரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அட்ஸ_வின் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. அவர் மரித்து தனது இரட்சகருடன் இருக்கச் சென்றார்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, அந்தியோகியா ஆரம்பகால தேவாலயத்தின் ஊற்றுக்கண்ணாக இருந்தது: “முதல் முதல் அந்தியோகியாவிலே சீஷர்களுக்குக் கிறிஸ்தவர்கள் என்கிற பேர் வழங்கிற்று” (அப்போஸ்தலர் 11:26). அப்போஸ்தலன் பர்னபாஸ், “நல்லவனும், பரிசுத்தஆவியினாலும் விசுவாசத்தினாலும் நிறைந்தவனுமாயிருந்தான்.” கிறிஸ்துவிடம் மக்களைக் கொண்டுவருவதில் முக்கிய பங்கு வகித்தார்: “அநேக ஜனங்கள் கர்த்தரிடமாய்ச் சேர்க்கப்பட்டார்கள்” (வச. 24).
கிறிஸ்டியன் அட்ஸ_வின் வாழ்க்கையை நாம் மாதிரியாக்குவதற்காக அல்ல; மாறாக, வாய்ப்பாக பார்க்கிறோம். நம் வாழ்வில் எந்த சூழ்நிலையில் இருந்தாலும், தேவன் நம்மை எப்போது தன்னுடன் அழைத்துச் செல்வார் என்பது நமக்குத் தெரியாது. கிறிஸ்துவின் அன்பை மற்றவர்களுக்குக் காட்டுவதில் நாம் எப்படி பர்னபாஸாகவோ அல்லது கிறிஸ்டியன் அட்சுவாகவோ இருக்க முடியும் என்று நம்மை நாமே கேட்டுக்கொள்வது நல்லது. எல்லாவற்றிற்கும் மேலாக, அதுவே வெற்றியின் இலக்கு.
மற்றவர்களுக்கு பர்னபாஸாக இருப்பது என்றால் என்ன அர்த்தம்? இயேசுவைப் பற்றி பேச உங்களுக்கு என்னென்ன வாய்ப்புகள் உள்ளன?
அன்பான தேவனே, என் நம்பிக்கையைப் பகிர்ந்துகொள்ள எனக்கு வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன்.