ஓர் நாள் மாலை, என் வீட்டிற்கு அருகில் உள்ள ஓர் காலி இடத்தில், நேர்த்தியான மண் வரிசைகளைக் கவனித்தேன். ஒவ்வொரு வரிசையிலும் சிறிய பச்சை இலைகளுடன் சிறிய மொட்டுகள் வெளியே எட்டிப்பார்க்கும். மறுநாள் காலை, அந்த இடத்தில் அழகான சிவப்பு டூலிப் மலர்கள் முளைத்திருப்பதைக் கண்டபோது, நான் என் பாதையில் நிலைநின்றேன்.
முந்தைய இலையுதிர்காலத்தில், ஓர் குழு சிகாகோவின் தெற்குப் பகுதி முழுவதும் காலியாக உள்ள இடங்களில் ஒரு லட்சம் டூலிப் செடிகளை நட்டது. சிறுபான்மையினர் வசிக்கும் சுற்றுப்புறங்களில் சிவப்பு நிற பூக்கள் பூக்கச்செய்வதின் மூலம் (வங்கிகளின் கடன் பாகுபாடு) சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்த அவர்கள் தீர்மானித்தனர். டூலிப்ஸ் அந்த இடங்களில் இருந்திருக்கக்கூடிய வீடுகளை அடையாளப்படுத்தியது.
தேவ ஜனங்கள் பல சவால்களைச் சகித்திருக்கிறார்கள். தங்கள் தாய்நாட்டிலிருந்து நாடுகடத்தப்படுவதிலிருந்து சிவப்பு நிறத்தைப் போன்ற பாகுபாடுகள் வரை. ஆயினும்கூட, நாம் இன்னும் நம்பிக்கையைக் காணலாம். சிறையிருப்பின் காலத்தில் இஸ்ரவேலர்களை தேவன் கைவிடமாட்டார் என்பதை ஏசாயா நினைவுபடுத்துகிறார். சாம்பலுக்குப் பதிலாக அவர்களுக்கு “அழகின் கிரீடம்” கொடுப்பதாக அறிவிக்கிறார். தரித்திரருக்கு சுவிசேஷத்தையும் (61:1), “ஒடுங்கின ஆவிக்குப் பதிலாகத் துதியின் உடையையும் கொடுக்கவும்” தேவன் வாக்குறுதி அளித்தார். இந்த உருவகங்கள் அனைத்தும் அவரது மகிமையைத் தூண்டுகின்றன. மேலும் மனச்சோர்வடைந்த இஸ்ரவேலர்கள் “கர்த்தர் தம்முடைய மகிமைக்கென்று நாட்டின நீதியின் விருட்சங்களென்னப்படுவார்கள்” (வச. 3) என்கிறார்.
அழுக்கு மற்றும் பாகுபாடு ஆகியவற்றிலிருந்து தேவனால் சிறப்பான ஒன்றை உருவாக்க முடியும் என்பதையும் அந்த டூலிப்ஸ் காட்டுகின்றன. ஒவ்வொரு வசந்த காலத்திலும் எனது சுற்றுப்புறத்திலும் பிற சமூகங்களிலும் நம்பிக்கையை புதுப்பிக்கும் டூலிப் மலர்களைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.
உங்கள் சமூகத்தில் சோர்வை மாற்றியமைக்கும் அழகை எங்கே பார்த்தீர்கள்? நம்பிக்கையற்ற இடங்களில் அழகை உருவாக்க நீங்கள் எவ்வாறு உதவலாம்?
தேவனே, என் சூழ்நிலைகள் மோசமாகத் தோன்றினாலும் நீர் என்னைப் பார்க்க அனுமதித்த அழகிற்காய் உமக்கு நன்றி.