பல ஆண்டுகளுக்கு முன்பு, ஜூலி லேண்ட்ஸ்மேன் நியூயார்க்கின் மெட்ரோபொலிட்டன் ஓபரா ஆர்கெஸ்ட்ரா என்னும் இசைக்குழுவில் முக்கிய டிரம்பெட் வாசிப்பாளர் பாத்திரத்திற்காக தேர்வு செய்யப்பட்டார். அவளை தேர்வுசெய்த நீதிபதி குழுவினரின் பாரபட்சங்களை தவிர்ப்பதற்காக, தேர்வானது, முகத்தை மறைத்து திரைமறைவில் நடைபெற்றது. லேண்ட்ஸ்மேன் தனது தேர்வில் சிறப்பாகச் செயல்பட்டு போட்டியில் வெற்றிபெற்றார். ஆனால் அவள் திரைக்குப் பின்னால் இருந்து வெளியேறியதும், சில ஆண் நீதிபதிகள் அறையின் பின்புறம் சென்று அவளைப் புறக்கணித்தனர். அவர்கள் வேறு யாரையோ தேடிக்கொண்டிருந்ததாகத் தெரிகிறது.

இஸ்ரவேலர்கள் ஒரு ராஜாவைக் கேட்டபோது, மக்களின் விண்ணப்பங்களுக்கு செவிகொடுத்து, மற்ற தேசங்களுக்கு இருப்பதுபோலவே ஒரு ராஜாவை ஏற்படுத்தினார் (1 சாமுவேல் 8:5; 9:2). ஆனால் சவுலின் ஆட்சி கீழ்ப்படியாமையினாலும் உண்மையற்ற தன்மையினாலும் அடையாளப்படுத்தப்பட்டதால், ஒரு புதிய ராஜாவை அபிஷேகம் செய்ய தேவன் சாமுவேலை பெத்லகேமுக்கு அனுப்பினார் (16:1-13). சாமுவேல் மூத்த மகனான எலியாப்பைப் பார்த்தபோது,அவன் சரீரப்பிரகாரமாக திடகாத்திரமான இளைஞனாயிருந்ததினால் அவனை ராஜாவாக ஏற்படுத்த தீர்மானித்தார். ஆனால் தேவன் சாமுவேலின் தீர்மானத்தை விமர்சித்து, “மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார்” (1 சாமுவேல் 16:7) என்கிறார். தேவன் தன்னுடைய ஜனத்தை வழிநடத்த தாவீதைத் தேர்ந்தெடுத்தார் (வச. 12).

மக்களின் திறன் மற்றும் அவரது நோக்கங்களுக்கான பொருத்தத்தை மதிப்பிடும்போது, தேவன் அவர்களது சுபாவங்கள், சித்தம் மற்றும் எண்ணங்களைப் பார்க்கிறார். உலகத்தையும் மக்களையும் அவர் பார்ப்பது போல் பார்க்க அவர் நம்மை அழைக்கிறார். தேவன் மக்களின் வெளிப்புற தோற்றங்களையும் அங்கீகாரங்களையும் பார்;க்கிறவரல்ல, அவர் இருதயத்தைப் பார்க்கிறவர்.