இன்று சாஸ்திரிகள் இயேசுவை தரிசித்த நாள். “நாங்கள் மூவரும் கிழக்கத்திய ராஜாக்கள்” என்று மூன்று சாஸ்திரிகளும் இயேசுவின் பிறப்பை கொண்டாடும் கிறிஸ்மஸ் கேரள் பாடல் ஒன்று விவரிக்கிறது. ஆனால் அவர்கள் மூவரும் ராஜாக்கள் இல்லை. அவர்கள் கிழக்கிலிருந்து வந்தவர்களும் இல்லை. அவர்கள் மூன்றுபேராகவும் இருக்க வாய்ப்பில்லை. 

இருப்பினும், மூன்று பரிசுகள் இருந்தன. அந்த கேரள் பாடல், அவை ஒவ்வொன்றுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறது. சாஸ்திரிகள் பெத்லெகேமுக்கு வந்தபோது, “அவர்கள்… தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்த்தையும் வெள்ளைப்போளத்தையும் அதற்குக் காணிக்கையாக வைத்தார்கள்” (மத்தேயு 2:11). இந்த பரிசுகள் இயேசுவின் ஊழியத்தை விவரிக்கிறது. பொன், ராஜாவாக அவரது பாத்திரத்தை பிரதிபலிக்கிறது. பலிபீடத்தில் எரிக்கப்படும் தூபத்துடன் கலந்த தூபவர்க்கம் அவரது தெய்வத்துவத்தைக் குறிக்கிறது. இறந்த உடல்களை அடக்கம் செய்ய பயன்படுத்தப்படும் வெள்ளைப்போலம், நமக்கு இடைநிறுத்தம் தருகிறது.

கேரள் பாடலின் நான்காவது வரி, “வெள்ளைப்போலம் என்னுடையது; அது கசப்பான வாசனை திரவியம். இருளில் சூழ்ந்த ஒரு வாழ்க்கையை அது சுவாசிக்கிறது. துக்கம், பெருமூச்சு, இரத்தஞ்சிந்துதல், மரணம் என்ற கல்லறையில் வைத்து மூட்டப்பட்டது” என்று இடம்பெறுகிறது. நாம் கதையில் அத்தகைய காட்சியை எழுத மாட்டோம், ஆனால் தேவன் அதைச் செய்தார். இயேசுவின் மரணம் நமது இரட்சிப்பின் மையமானது. ஏரோது, இயேசு குழந்தையாக இருக்கும்போதே அவரைக் கொல்ல முயன்றான் (வச. 13).

கேரள் பாடலின் கடைசி சரணம் மூன்று கருப்பொருள்களை ஒன்றாக இணைக்கிறது: “இதோ மகிமையயின் ராஜா எழுந்தருளியிருக்கிறார். ராஜா, தேவன் மற்றும் தியாகம்.” இது கிறிஸ்மஸின் கதையை நிறைவு செய்கிறது. நமது பதிலை எதிர்பார்க்கச்செய்கிறது” “அல்லேலூயா, அல்லேலூயா என்று வானம் பூமியெங்கும் ஒலிக்கிறது.”