எனது செல்பேசியின் சிறிய திரையில் ஒளிபரப்பப்படும் படங்கள், யோசனைகள் மற்றும் அறிவிப்புகளின் தொடர்ச்சியான செயல்பாடுகளால் சோர்வடைந்த நான் எனது செல்பேசியை கீழே வைத்தேன். பிறகு, அதை எடுத்து மீண்டும் ஆன் செய்தேன். ஏன்?
நிக்கோலஸ் கார், அவரது 2013இல் வெளியான புத்தகமான “தி ஷாலோஸ்” என்ற புத்தகத்தில், இணைதளம் அமைதியுடன் நமது உறவை எவ்வாறு வடிவமைத்துள்ளது என்பதை விவரிக்கிறார்: “இணையதளங்கள், என் செறிவு மற்றும் சிந்தனையின் திறனைக் குறைக்கிறது. நான் ஆன்லைனில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், வேகமாக நகரும் துகள்களின் ஓட்டத்தில் இணையதளங்கள் அதை விநியோகிக்கும் விதத்தில் தகவல்களைப் பெற வேண்டும் என்று என் மனம் எப்போதும் எதிர்பார்க்கிறது. ஒருகாலத்தில் நான் வார்த்தைக் கடலில் மூழ்கி முத்தெடுக்கம் அளவிற்கு தேறினவனாயிருந்தேன். ஆனால் இப்போது நான் கரையில் நிற்கிறேன்.”
மனரீதியாக நான் கரையில் நிற்பது ஆரோக்கியமானதாக இல்லை. ஆனால் ஆவிக்குரிய நீரோட்டத்தில் ஆழமாய் போவது எப்படி?
சங்கீதம் 131இல் தாவீது “நான் என் ஆத்துமாவை அடக்கி அமரப்பண்ணினேன்” (வச. 2) என்கிறான். தாவீதின் வார்த்தைகள் என்னுடைய பொறுப்பை எனக்கு நினைவூட்டுகிறது. என்னும் சுபாவங்களை மாற்றுவது என்பது, நான் நிலையாக நிற்பதிலிருந்து துவங்குகிறது. ஆகிலும் தேவனுடைய திருப்திபடுத்தக்கூடிய நன்மையான சுபாவங்களை நாம் அனுபவிக்கிறோம். அவரே நம்முடைய நம்பிக்கை என்பதை நம்பி, ஒரு சிறு குழந்தையைப் போல மனநிறைவுடன் நாம் இளைப்பாறக்கூடும் (வச. 3). ஆத்ம திருப்தியை எந்த ஸ்மார்ட்ஃபோன் செயலியும், எந்த சமூக ஊடகங்களாலும் தர முடியாது.
தேவனுக்கு முன்பாக அமைதியாக ஓய்வெடுக்கும் உங்கள் திறனை தொழில்நுட்பம் எவ்வாறு பாதிக்கிறது? உங்கள் மனநிறைவுக்கு உங்கள் தொலைபேசி பங்களிக்கிறதா? ஏன் அல்லது ஏன் இல்லை?
தகப்பனே, உலகம் என் ஆத்துமாவை திருப்திப்படுத்தாத கவனச்சிதறலில் மூழ்கடித்துள்ளது. மெய்யான மனநிறைவுடன் நான் இருக்க, உம்மை நம்புவதற்கு எனக்கு உதவிசெய்யும்.