ஷெர்மன் ஸ்மித், மியாமி பல்கலைக்கழகத்திற்காக அமெரிக்க கால்பந்து விளையாட டெலாண்ட் மெக்கல்லௌவை நியமித்த பிறகு, டெலாண்ட் ஸ்மித்தை மிகவும் நேசித்தார். டெலாண்ட்டுக்கு தகப்பன் ஸ்தானத்தில் ஸ்மித் செயல்பட்டார். டெலாண்ட், ஸ்மித் மீது மிகுந்த அபிமானத்தைக் கொண்டிருந்தார். மேலும் அவர் எதிர்பார்த்த மனிதனாக மாறுவதையே அவர் நோக்கமாகக் கொண்டிருந்தார். பல தசாப்தங்களுக்குப் பிறகு, டெலாண்ட் தன்கை பெற்றெடுத்த தாயை கண்டறிந்தபோது, அவள் “உன் தந்தையின் பெயர் ஷெர்மன் ஸ்மித்” என்ற சொல்லி அவனை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். ஆம், அதே ஷெர்மன் ஸ்மித் தான். பயிற்சியாளர் ஸ்மித் தனக்கு ஒரு மகன் இருப்பதை அறிந்து திகைத்தார். மேலும் டெலாண்ட் தன் மனதில் கற்பனை செய்த தந்தையின் உருவத்தில் இருக்கும் அதே நபரே தனது தந்தையாய் இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டார். 

அடுத்த முறை அவர்கள் சந்தித்தபோது, ஷெர்மன் டெலாண்டைக் கட்டிப்பிடித்து, “என் மகனே” என்றார். டெலாண்ட் ஒரு தந்தையிடமிருந்து அந்த வார்த்தையை இதுவரை கேட்டதில்லை. ஸ்மித் மிகுந்த பெருமிதத்தோடு அதைச் சொல்லும் இடத்தில் தான் இருக்கிறோம் என்பதை டெலாண்ட் அறிந்திருந்தான். “இவன் என் மகன்,” என்று சொல்லிவிட்டு அவர் திகைப்பில் ஆழ்ந்தார்.

நம் பரலோகத் தகப்பனின் பரிபூரண அன்பினால் நாமும் மூழ்கடிக்கப்பட வேண்டும். யோவான் எழுதும்போது, “நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்” (1 யோவான் 3:1) என்று எழுதுகிறார். ஸ்மித்தைப் போன்ற ஒருவர் தனது அப்பாவாக இருக்க முடியும் என்று நினைக்கத் துணியாத ரெனால்ட் போல நாமும் திகைத்துப் போனோம். மிகவும். அது உண்மையில் உண்மையா? ஆம் நாமும் அப்படித்தான் இருக்கிறோம் (வச. 1) என்று யோவான் சொல்லுகிறார். 

நீங்கள் இயேசுவை விசவாசித்தால், அவருடைய பிதா உங்களுக்கும் அப்பாதான். நீங்கள் உலகில் திக்கற்றவராய் உணரலாம். ஆனால் உண்மை என்னவென்றால், உங்களுக்கு ஒரு தந்தை இருக்கிறார். அவர் மிகவம் நேர்த்தியானவர். அவர் உங்களை தன்னுடைய பிள்ளை என்று அழைப்பதில் பெருமைப்படுகிறார்.