1892 ஆம் ஆண்டில், காலராவால் பாதிக்கப்பட்ட ஒரு குடியிருப்பாளர் தற்செயலாக எல்பே நதி வழியாக ஜெர்மனியின் முழு நீர் விநியோகமான ஹாம்பர்க்கிற்கு நோயைப் பரப்பினார். வாரங்களுக்குள், பத்தாயிரம் குடிமக்கள் இறந்தனர். எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஜெர்மன் நுண்ணுயிரியலாளர் ராபர்ட் கோச், காலரா நோயானது நீரின் மூலம் பரவுகிறது என்பதைக் கண்டுபிடித்தார். கோச்சின் கண்டுபிடிப்பு, பெரிய ஐரோப்பிய நகரங்களில் உள்ள அதிகாரிகளை தங்கள் தண்ணீரைப் பாதுகாக்க வடிகட்டுதல் அமைப்புகளில் முதலீடு செய்யத் தூண்டியது. இருப்பினும் ஹாம்பர்க் அதிகாரிகள் எதுவும் செய்யவில்லை. செலவுகளை மேற்கோள் காட்டி, சந்தேகத்திற்குரிய அறிவியலைக் குற்றம் சாட்டி, அவர்களின் நகரம் பேரழிவை நோக்கிக் கொண்டிருந்தபோது தெளிவான எச்சரிக்கைகளை அவர்கள் புறக்கணித்தனர்.
பிரச்சனைகளைக் கண்டும் செயல்பட மறுக்கும் நம்மைப் பற்றி நீதிமொழிகள் புத்தகம் நிறைய கூறுகிறது. “விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்துகொள்ளுகிறான்; பேதைகளோ நெடுகப்போய்த் தண்டிக்கப்படுகிறார்கள்” (27:12). ஆபத்து வருகிறது என்பதை தேவன் நமக்கு வெளிப்படுத்தும்போது, அவற்றை எதிர்கொள்வதற்கான வழிமுறைகளை ஏறெடுப்பதுதான் பொது அறிவு. துரிதமாய் செயல்பட்டால் அதின் போக்கை நம்மால் மாற்றக்கூடும். அல்லது அவர் அளிக்கும் தகுந்த முன்னெச்சரிக்கைகளுடன் நம்மை தயார் செய்துகொள்ளக்கூடும். எதுவுமே செய்யாமல் இருப்பது முட்டாள்தனம். நாம் அனைவரும் எச்சரிக்கை அறிகுறிகளைத் தவறவிடாமல், பேரழிவில் கவனம் செலுத்தி அதை எப்படியாவது தடுக்க முயற்சிக்கலாம். “பேதைகளோ நெடுகப்போய்த் தண்டிக்கப்படுகிறார்கள்” (வச. 12).
வேதாகமத்திலும் இயேசுவின் வாழ்க்கையிலும், நாம் பின்பற்ற வேண்டிய பாதையை தேவன் நமக்குக் காண்பிக்கிறார். நாம் நிச்சயமாக சந்திக்கும் பிரச்சனைகளைப் பற்றி எச்சரிக்கிறார். நாம் முட்டாளாக இருந்தால், ஆபத்தில் தலைகுனிந்து முன்னேறுவோம். மாறாக, அவர் கிருபையால் நம்மை வழிநடத்தும்போது, நாம் அவருடைய ஞானத்திற்கு செவிசாய்த்து பாதையை மாற்றுவோம்.
நீங்கள் எப்போது தேவனின் ஞானத்தை மறுத்தீர்கள்? அவருடைய எச்சரிக்கைகளுக்கு பதிலளிக்க நீங்கள் எவ்வாறு சிறப்பாகக் கற்றுக்கொள்ளலாம்?
அன்புள்ள தேவனே, உமக்கு செவிசாய்க்கவும், ஆபத்திலிருந்து விலகிச் செல்லவும் எனக்கு உதவிசெய்யும்.