“ஒளியை நோக்கி செல்வோம்!” ஒரு ஞாயிற்றுக்கிழமை மத்தியானவேளையில் நகரத்தில் இருக்கும் ஒரு பெரிய மருத்துவமனைக்கு வழிதெரியாமல் நாங்கள் திகைத்தபோது. என்னுடைய கணவர் இப்படியாய் சொன்னார். நாங்கள் ஒரு சிநேகிதரைப் பார்க்கச் சென்றிருந்தோம். நாங்கள் ஒரு லிஃப்டில் இருந்து வெளியேறியபோது, அந்த வாரயிறுதி நாட்களில் நாங்கள் செல்ல வேண்டிய திசைக்கு அந்த மங்கிய வெளிச்சத்தில் எங்களுக்கு வழிகாண்பிக்க யாரும் அங்கில்லை. எங்கள் குழப்பத்தைப் பார்த்த ஒரு மனிதரை இறுதியாக சந்தித்தோம். “இந்த நடைபாதைகள் அனைத்தும் ஒரே மாதிரியாகவே இருக்கும், ஆனால் வெளியே செல்லுவதற்கான வழி இதுவே” என்று அவர் கூறினார். அவரது வழிகாட்டுதலுடன், நாங்கள் வெளியேறும் கதவுகளைக் கண்டோம். பிரகாசமான சூரிய ஒளியை நாங்கள் வந்தடைந்தோம்.
குழப்பமடைந்த, அவிசுவாசிகளை அவர்களுடைய ஆவிக்குரிய இருளிலிருந்து தம்மைப் பின்பற்றும்படிக்கு இயேசு அழைத்தார். “நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன். என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான்” (யோவான் 8:12). அவரது ஒளியில், தடுமாற்றங்கள், பாவம் ஆகியவைகள் தென்பட்டாலும், அவற்றை அகற்றும்படிக்கு நாம் அவரிடத்தில் கேட்கும்போது, அத்தகைய இருளை நம்முடைய வாழ்க்கையை விட்டு அவர் அகற்றுவார். வனாந்தரத்தில் இஸ்ரவேலர்களை வழிநடத்திய அக்கினி ஸ்தம்பத்தைப்போல, கிறிஸ்துவின் ஒளி நமக்கு கடவுளின் பிரசன்னம், பாதுகாப்பு மற்றும் வழிகாட்டுதலைக் கொண்டுவருகிறது.
யோவான் விளக்கியது போல், இயேசுவே “மெய்யான ஒளி” (யோவான் 1:9). “இருளானது அதைப் பற்றிக் கொள்ளவில்லை” (வச. 5). வாழ்க்கையில் அலைந்து திரிவதற்குப் பதிலாக, நம்முடைய பாதையில் ஒளிகாட்டும் அவரைச் சார்ந்துகொள்வது சிறந்தது.
உங்கள் வாழ்க்கையில் எந்தெந்த பகுதிகளுக்கு கிறிஸ்துவின் சுத்திகரிப்பு ஒளி தேவை? நீங்கள் அவருடைய ஒளியைத் தேடும்போது, என்னென்ன தடைகளைத் தவிர்ப்பீர்கள்?
அன்பான இயேசுவே, இருள் நிறைந்த உலகில், என் இதயத்திலும் என் பாதையிலும் உமது மெய்யான ஒளியைப் பிரகாசிப்பியும்.