கொரோனா பெருந்தொற்றின் நாட்களில், தங்கள் நேசத்திற்குரியவர்களை அநேகர் இழந்து வாடினர். நவம்பர் 27, 2020 அன்று, பீ கிரவுடர் என்னும் என்னுடைய 95வயது நிரம்பிய தாயார், கொரோனாவினால் அல்லாமல் இயற்கையாய் மரணமடைந்தபோது நாங்களும் அந்த வரிசையில் சேர நேரிட்டது. மற்ற பல குடும்பங்களைப்போல், தாயின் இழப்பிற்காய் துக்கங்கொண்டாடவோ, அவர்களுடைய வாழ்க்கையை நினைவுகூரவோ அல்லது ஒருவரையொருவர் ஊக்கப்படுத்தவோகூட எங்களால் முடியவில்லை. அதற்குப் பதிலாக, அவர்களுடைய அன்பான செல்வாக்கைக் கொண்டாட நாங்கள் வேறு வழிகளைப் பயன்படுத்தினோம். தேவன் அவர்களை நித்திய வீட்டிற்கு அழைத்தால், அவர்கள் செல்லத் தயாராகவும் ஆர்வமாக இருக்கிறார் என்று அவர்கள் வற்புறுத்தியதில் இருந்து எங்களுக்கு மிகுந்த ஆறுதல் கிடைத்தது. அவர்களுடைய அந்த நம்பிக்கை அவர்கள் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்கள் என்பதற்கும் மரணத்தை எவ்வாறு எதிர்கொண்டார்கள் என்பதற்கும் சான்றாக அமைந்தது.
பவுல் மரணத்தை எதிர்கொள்ளும்போது, “கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம்… ஏனெனில் இவ்விரண்டினாலும் நான் நெருக்கப்படுகிறேன்; தேகத்தைவிட்டுப் பிரிந்து, கிறிஸ்துவுடனேகூட இருக்க எனக்கு ஆசையுண்டு, அது அதிக நன்மையாயிருக்கும்; அப்படியிருந்தும், நான் சரீரத்தில் தரித்திருப்பது உங்களுக்கு அதிக அவசியம்” (பிலிப்பியர் 1:21,23-24) என்று சொல்லுகிறார். பவுல் பூமியில் தரித்திருந்து மற்றவர்களுக்கு உதவிசெய்ய எண்ணினாலும் தேவன் அவரை தன்னுடைய நித்திய வீட்டில் சேர்த்துக்கொண்டார்.
இந்த நம்பிக்கையானது, இம்மைக்குரிய வாழ்க்கையிலிருந்து மறுமையில் நாம் அடியெடுத்து வைக்கும் நம்முடைய வாழ்க்கையை வித்தியாசமாய் அணுகுகிறது. நம்முடைய இந்த நம்பிக்கையானது மற்றவர்களுடைய இழப்பில் அவர்களுக்கு ஆறுதலளிக்கக்கூடிய வகையில் அமைகிறது. நாம் நேசிப்பவர்களின் இழப்பைக் குறித்து நாம் துக்கங்கொண்டாடினாலும், கிறிஸ்தவர்களாகிய நாம் “நம்பிக்கையற்றவர்களான மற்றவர்களைப்போல” (1 தெசலோனிக்கேயர் 4:13) துக்கிக்க தேவையில்லை. மெய்யான விசுவாசமானது அவரை அறிந்தவர்களின் சொத்து.
பயமுறுத்தக்கூடிய இவ்வுலக வாழ்க்கையின் அம்சங்களை நீங்கள் எவ்விதம் எதிர்கொள்வீர்கள்? நம்பிக்கையானது எப்படி வாழ்க்கைப் போராட்டங்கள் மீதான உங்கள் கண்ணோட்டத்தை மாற்றும்?
அனைத்து நம்பிக்கையின் ஆண்டவரே, இயேசுவின் மரணத்தை வென்ற ஜெயத்தை எனக்கு நினைவுபடுத்துங்கள்.