“லைஃப்” என்ற பத்திரிகையின் ஜூலை 12, 1968 அட்டைப் படத்தில் பயாஃப்ராவிலிருந்து (நைஜீரியாவில் உள்நாட்டுப் போரின் போது) பட்டினி கிடக்கும் குழந்தைகளின் கொடூரமான புகைப்படம் காட்சிப்படுத்தப்பட்டது. அதைக் கண்டு மன உளைச்சலுக்கு ஆளான ஒரு சிறுவன் அந்த பத்திரிக்கையைக் கொண்டுபோய், சபைப் போதகரிடம் காண்பித்து, “தேவனுக்கு இது தெரியுமா?” என்று கேட்டானாம். “இதை உன்னால் புரிந்துகொள்ளமுடியாது என்பது எனக்குத் தெரியும், ஆனால் இதை தேவன் அறிந்திருக்கிறார்” என்று பதிலளித்தாராம். அப்படிப்பட்ட கடவுள் எனக்கு தேவையில்லை என்று சொல்லிவிட்டு அந்த சிறுவன் வெளியேறினானாம். 

இந்த கேள்விகள் குழந்தைகளை மட்டுமல்ல, நம் அனைவருக்கும் எழுகிறது. தேவனுடைய ஆச்சரியமான வெளிப்பாட்டின் அறிவுடன், பியாஃப்ரா போன்ற இடங்களில் கூட, தேவன் தொடர்ந்து எழுதும் இதிகாசக் கதையைப் பற்றி அந்தச் சிறுவன் கேட்டிருக்கவேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். 

இயேசு தங்களை எப்படியாவது காப்பாற்றிவிடுவார் என்று எண்ணி உபத்திரவத்தில் இருந்தவர்களுக்கு இயேசு இந்த கதையைச் சொல்லுகிறார். அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு விரோதமாக, “உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு” என்று சொல்லுகிறார். ஆனால் இந்த தீமைகள் முடிவல்ல என்று இயேசு அவர்களுக்கு வாக்குப்பண்ணுகிறார். ஏனென்றால் அவர் ஏற்கனவே உலகத்தை ஜெயித்துவிட்டார் (16:33). தேவனுடைய கடைசி அத்தியாயத்தில், அனைத்து அநீதிகளும் நியாயந்தீர்க்கப்பட்டு, உபத்திரவங்கள் அனைத்தும் மாற்றப்படும். 

ஆதியாகமத்திலிருந்து வெளிப்படுத்தின விசேஷம் வரையிலும், தேவன் அனைத்து தீமைகளையும் அழித்து எல்லாவற்றையும் சரிசெய்கிறதை நாம் பார்க்கமுடியும். நம்மை அதிகமாய் நேசிக்கிற தேவனை நமக்கு பிரதிபலித்துக் காண்பிக்கிறது. “என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும்பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன்” (வச. 33) என்று இயேசு சீஷர்களுக்குச் சொல்லுகிறார். நாம் அவருடைய சமாதானத்திலும் பிரசன்னத்திலும் இன்று இளைப்பாறுதலடைவோம்.