Archives: ஜூன் 2023

காலங்கள்

நான் சமீபத்தில் ஒரு பயனுள்ள வார்த்தையைக் கண்டறிந்தேன்: “குளிர்காலம்.” இயற்கை உலகின் பெரும்பகுதியை இந்த குளிர்காலம் அமைதிப்படுத்துவது போல, வாழ்க்கையின் “குளிர்” பருவங்களில் ஓய்வெடுக்கவும், குணமடையவும் வேண்டியதன் அவசியத்தை விவரிக்க, எழுத்தாளர் கேத்தரின் மே இந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட என் தந்தையை நான் இழந்த பிறகு இந்த ஒப்புமை எனக்கு உதவியாயிருந்தது. இது எனது ஆற்றலை பல மாதங்கள் புதுப்பித்தது. இந்த குளிரானது வலுக்கட்டாயமாய் என் வேகத்தைக் குறைத்ததால் கோபமடைந்த நான், எனது குளிர்காலத்தை எதிர்த்துப் போராடினேன். கோடைக்கால வாழ்க்கை திரும்ப வேண்டும் என்று ஜெபித்தேன். ஆனால் நான் கற்றுக்கொள்ளவேண்டியது நிறைய இருந்தது.

பிரசங்கி, “வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் ஒவ்வொரு சமயமுண்டு” என்று சொல்லுகிறார் (3:1-4). நடவும் நட்டதை பிடுங்கவும், அழவும் நகைக்கவும், புலம்பவும் நடனம் பண்ணவும் ஒவ்வொரு காலமுண்டு. இந்த வேதவாக்கியத்தை நான் பலமுறை வாசித்திருக்கிறேன். ஆனால் குளிர்காலத்தில் தான் அதின் அர்த்தம் எனக்கு விளங்கியது. அவர்கள் மீது நமக்குக் கட்டுப்பாடு இல்லை என்றாலும், ஒவ்வொரு பருவமும் வரையறுக்கப்பட்டதாக இருக்கும், அதன் வேலை முடிந்ததும் கடந்து போகும். அது என்னவென்று நம்மால் எப்பொழுதும் புரிந்து கொள்ள முடியாவிட்டாலும், தேவன் அவைகள் மூலமாக நம்மில் கிரியை செய்கிறார் (வச. 11). என் துக்கநாட்கள் இன்னும் முடியவில்லை. அது முடியும்போது நான் நடனம்பண்ணும் காலம் வரும். தாவரங்களும் விலங்குகளும் குளிர்காலத்தை எதிர்த்துப் போராடாதது போல, நானும் அதை எதிர்த்துபோராட வேண்டியதில்லை. அது அதனுடைய வேலையை செய்வதற்கு அதை முழுமையாய் அனுமதிக்கவேண்டும். 

ஒரு சிநேகிதன், “கர்த்தாவே, உம்முடைய நற்கிரியைகளை இந்த காலத்தில் ஷெரிடனுக்குள் செய்வீர்களா?” என்று சொல்லி எனக்காக ஜெபித்தான். அது என்னுடைய ஜெபத்தைக் காட்டிலும் சிறந்த ஜெபம். தேவனுடைய கரத்தில் காலங்கள் ஒரு நோக்கத்தோடு அனுமதிக்கப்படுகிறது. அவை ஒவ்வொன்றிலும் அவருடைய புதுப்பிக்கும் கிரியைகளை காண நம்மை அர்ப்பணிப்போம். 

இயேசுவுக்காய் நிற்கும் துணிச்சல்

கி.பி. 155 இல், ஆதித்திருச்சபையின் தந்தையான பாலிகார்ப், கிறிஸ்துவை விசுவாசித்ததினால் உயிரோடு எரித்துக் கொல்லப்படுவதாக அச்சுறுத்தலுக்கு ஆளானார். பாலிகார்ப் அவர்களிடம், “எண்பத்தாறு ஆண்டுகளாக நான் அவருடைய ஊழியக்காரனாக இருந்தேன்; அவர் எனக்கு எந்தத் தீங்கும் செய்யவில்லை. என்னைக் காப்பாற்றிய என்னுடைய ராஜாவை இப்போது நான் எப்படி நிந்திக்க முடியும்?” என்று பதிலளித்தாராம். நம் ராஜாவாகிய இயேசுவின் மீது நாம் வைத்திருக்கும் நம்பிக்கையின் காரணமாக நாம் கடுமையான சோதனையை எதிர்கொள்ளும்போது, பாலிகார்ப்பின் இந்த பதில் நமக்கு உத்வேகமாக இருக்கும்.

இயேசுவின் மரணத்திற்கு ஒரு சில மணிநேரத்திற்கு முன்பாக, பேதுரு துணிச்சலாக, “உமக்காக என் ஜீவனையும் கொடுப்பேன்” (யோவான் 13:37) என்று சொல்லுகிறான். பேதுரு தன்னை அறிந்ததைக் காட்டிலும், பேதுருவை நன்கு அறிந்த இயேசு அவனைப் பார்த்து, “சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாயென்று, மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்” (வச. 38) என்றார். ஆனாலும் இயேசுவின் உயிர்த்தெழுதலுக்கு பின்பாக, இயேசுவை மறுதலித்த அதே பேதுரு அவரை மகிமைப்படுத்தும் விதமாக, தன்னுடைய ஜீவனையே கொடுக்கிறான் (21:16-19). 

நீங்கள் பாலிகார்ப்பா? அல்லது பேதுருவா? சிலவேளைகளில் நம்மில் பெரும்பாலானோர் பேதுருவைப் போல துணிச்சல் இல்லாமல், கிறிஸ்துவின் விசுவாசியாய் செயல்படாமல் கோழையாக இருக்கிறோம். அதுபோன்ற சூழ்நிலைகளில் நாம் வகுப்பறையில் இருந்தாலும், அலுவலகத்தில் இருந்தாலும், எங்கிருந்தாலும் நாம் பயப்படத்தேவையில்லை. அதுபோன்ற தோல்விகள் நமக்கு நேரிடும்போது, நமக்காக மரித்து இன்னும் ஜீவித்துக்கொண்டிருக்கிற இயேசுவிடம் ஜெபத்தில் அணுகுவோம். அவர் நமக்கு உண்மையுள்ளவராய் வெளிப்பட்டு, கடினமான சூழ்நிலைகளின் மத்தியிலும் அவருக்காக துணிச்சலாய் நிற்க கிருபை செய்வாராக. 

தேவனுக்கு அருகில்

ஒரு அதிகாரி என்னை அழைத்த பின்பு, நான் மாவட்ட சிறைச்சாலைக்குள் நுழைந்தேன். பார்வையாளர் பதிவேட்டில் கையெழுத்திட்டேன். நெரிசலான லாபியில் அமர்ந்தேன். வெகு நேரம் காத்திருப்பதைக் குறித்து சிறுபிள்ளைகள் குறைகூறுவதைக் கண்டு பெரியவர்கள் நடுங்குவதையும் பெருமூச்சிவிடுவதையும் பார்த்து, நான் அமைதியாக ஜெபித்தேன். ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, ஒரு ஆயுதமேந்திய காவலர் என்னுடைய பெயர்கள் அடங்கிய பட்டியலை அழைத்தார். அவர் என் குழுவை ஒரு அறைக்குள் அழைத்துச் சென்று எங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாற்காலிகளில் அமரும்படிக்கு சைகை செய்தார். தடிமனான கண்ணாடி ஜன்னலின் மறுபக்கம் இருந்த நாற்காலியில் என் சித்தி மகன் அமர்ந்து டெலிபோன் ரிசீவரை எடுத்தபோது, என் இயலாமையின் ஆழம் என்னை ஆட்கொண்டது. ஆனால் நான் கண்ணீர் சிந்தி அழுதபோது, என்னுடைய வளர்ப்பு மகன் இன்னும் தேவனுக்கு அருகாமயில் தான் இருக்கிறான் என்பதை தேவன் எனக்கு உறுதிபடுத்தினார். 

சங்கீதம் 139இல், தாவீது தேவனைப் பார்த்து, “நீர் என்னை.. அறிந்திருக்கிறீர்... என் வழிகளெல்லாம் உமக்குத் தெரியும்” என்று சொல்லுகிறான். அனைத்தும் அறிந்த தேவனை அறிக்கையிட்ட தாவீது, தேவனுடைய பாதுகாப்பையும் பராமரிப்பையும் உணருகிறான் (வச. 5). தேவனுடைய ஆச்சரியமான அறிவைக் குறித்தும் அவருடைய தொடுதலைக் குறித்தும் ஆச்சரியப்பட்ட தாவீது இரண்டு கேள்விகளின் மூலம் தன்னுடைய ஆச்சரியத்தை வெளிப்படுத்துகிறான்: “உம்முடைய ஆவிக்கு மறைவாக எங்கே போவேன்? உம்முடைய சமூகத்தைவிட்டு எங்கே ஓடுவேன்?” (வச. 7). 

நாமோ அல்லது நம்முடைய நேசத்திற்குரியவர்களோ கடினமான சூழ்நிலையில் சிக்கிக்கொள்ளும்போது, அது நம்மை குழப்பத்தில் ஆழ்த்தக்கூடும். அதுபோன்ற சூழ்நிலையில், தேவனுடைய கரம் நமக்கு ஆதரவாகவும் உறுதியாகவும் இருக்கும். அவர் நம்மை மீட்கமுடியாத தூரத்தில் நாம் இருப்பதாக ஒருவேளை நாம் எண்ணினாலும், அவருக்கு எட்டும் தூரத்தில் தான் நாம் இருக்கிறோம் என்பதை நாம் மறந்துபோகவேண்டாம். 

ஆறுதலின் கை

“நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனும், இரக்கங்களின் பிதாவும், சகலவிதமான ஆறுதலின் தேவனுமாயிருக்கிறவருக்கு ஸ்தோத்திரம்.தேவனால் எங்களுக்கு அருளப்படுகிற ஆறுதலினாலே, எந்த உபத்திரவத்திலாகிலும் அகப்படுகிறவர்களுக்கு…

அறியப்படாததைக் குறித்த பயம்

வாசிக்க: எபிரெயர் 11:8-12
“விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் சுதந்தரமாகப் பெறப்போகிற இடத்திற்குப் போகும்படி அழைக்கப்பட்டபோது, கீழ்ப்படிந்து, தான் போகும் இடம் இன்னதென்று அறியாமல் புறப்பட்டுப்போனான்”. —எபிரெயர் 11:8

அறிவுக்கு…

ஓநாய்க்கு உணவளித்தல்

வாசிக்க: ரோமர் 6:15-23
“துர்இச்சைகளுக்கு இடமாக உடலைப் பேணாமலிருந்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைத் தரித்துக்கொள்ளுங்கள்”. —ரோமர் 13:14

ஒரு வயதான அமெரிக்க சிவப்பு இந்திய தலைவர் தனது பேரனுடன் நெருப்பின் முன்…