1700களின் பிற்பகுதியில், கனடாவின் நோவா ஸ்கோடியா என்ற இடத்தில் அமைந்திருந்த ஓக் தீவில் ஓர் இளைஞன் ஒரு மர்மமான மனச்சோர்வைக் கண்டுபிடித்தார். கடற்கொள்ளையர்கள் அங்கே புதையலை மறைத்து வைத்திருக்கின்றனர் என்று ஊகித்து, அவரும் மற்ற இருவரோடு சேர்ந்து தோண்டத் தொடங்கினர். அவர்கள் எந்த புதையலையும் கண்டுபிடிக்கவில்லை. ஆனால் அந்த வதந்தியானது அவரின் வாழ்க்கையின் பெரும்பான்மையை வீணடித்தது. தொடர்ந்த ஆண்டுகளில் பலர் அதே பள்ளத்தை தொடர்ந்து தோண்ட ஆரம்பித்தனர் காலத்தையும் பொருட்செலவையும் வீணடித்தனர். தற்போது அந்த பள்ளம் 100 அடி (முப்பது மீட்டர்) ஆழம் கொண்டதாயிருக்கிறது. 

அதுபோன்ற எண்ணங்கள் மனிதனுடைய இருதயத்தை வெறுமையாக்கிவிடுகின்றன. அதுபோன்ற ஒருமனிதனின் திருக்கான எண்ணம் என்பதைக் குறித்த ஒரு சம்பவத்தை வேதம் பதிவிடுகிறது. கேயாசி, எலிசா என்னும் பிரம்மாண்டமான தீர்க்கதரிசியின் நம்பகமான வேலைக்காரனாய் வெகுநாட்கள் செயல்படுகிறான். குஷ்டரோகத்திலிருந்து விடுதலையாக்கப்பட்டதால் சீரிய தேசத்தின் படைத்தளபதி எலிசாவுக்கு கொடுத்த விலையேறப்பெற்ற பரிசை அவன் ஏற்க மறுத்துபோது, கேயாசி அவற்றை இச்சித்து, அவர்களுக்கு பின்னாக சென்று அதை வாங்கிக்கொண்டான் (2 இராஜாக்கள் 5:22). ஆனால் கேயாசி வீடு திரும்பியபோது, அவன் எலிசாவிடம் பொய் சொல்லுகிறான் (வச. 25). ஆனால் எலிசாவுக்கு அது தெரிந்துவிடுகிறது. அவன் அவனைப் பார்த்து, “அந்த மனுஷன் உனக்கு எதிர்கொண்டுவரத்தன் இரதத்திலிருந்து இறங்கித் திரும்புகிறபோது என் மனம் உன்னுடன்கூடச் செல்லவில்லையா?” (வச. 26) என்று கேட்கிறார். கடைசியில் கேயாசி என்ன எதிர்பார்த்தானோ அதை பெற்றுக்கொண்டான், ஆனால் எது முக்கியமானதோ அதை இழந்துவிட்டான் (வச. 27). 

இயேசு, இந்த உலகத்தின் பொக்கிஷங்களை தேடாமல், “பரலோகத்திலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவையுங்கள்” என்று நமக்குக் கற்பிக்கிறார் (மத்தேயு 6:20). 

உங்களின் இருதயத்தின் பொக்கிஷங்களை அடைவதற்கான குறுக்குவழியைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள். இயேசுவைப் பின்பற்றுவது மட்டுமே, வெறுமையான உங்கள் இருதயத்தை நிரப்புவதற்கான சரியான வழி.