தோளோடு தோள் சேர்த்து நின்று, மூன்று பேர் கொண்ட ஒரு டஜன் அணியினர் நான்கு-கால் பந்தயத்திற்குத் தயாராயினர். இருபுறத்திலும் இருந்த இரண்டு நபர்களும் நடுவில் இருந்த நபரின் காலோடு, ஒரு வண்ணமயமான கயிற்றினால் பிணைக்கப்பட்டனர். அவர்களின் கண்கள் மறைக்கப்பட்டது. விசில் அடித்ததும் ஒவ்வொரு அணிகளும் இலக்கை நோக்கி முன்னேறின. அவர்களில் பெரும்பாலானோர் கீழே விழுந்து மீண்டும் எழும்பி நிற்க போராடினர். ஒரு சில குழுக்கள் நடந்துசெல்வதற்கு பதிலாக குதித்து செல்ல முயற்சித்தனர். சிலர் ஆட்டத்தை இடையிலேயே நிறுத்திக்கொண்டனர். ஆனால் அதில் ஒரு குழு மட்டும் தங்கள் ஓட்டத்தை துவக்காமல் தாமதம் செய்தது. ஒரு திட்டத்தை தீட்டியது. போகும் வழியில் ஒருவரோடு ஒருவர் தெளிவாய் தொடர்புகொண்டனர். அவர்களும் அவ்வப்போது இடற நேரிட்டது, ஆனாலும் மீண்டெழுந்து ஒவ்வொரு அணியையும் முந்தினர். அவர்கள் ஒருவரோடொருவர் ஒத்துழைக்க எடுத்த தீர்மானம், வெற்றி இலக்கை அடைய அவர்களுக்கு உதவியது. 

கிறிஸ்தவர்களாகிய நாமும் இந்த சமுதாயத்தில் வாழும் வாழ்க்கையில் இந்த நான்கு-கால் பந்தயத்தைப் போலவே சலிப்படைய நேரிடுகிறது. நம்மிலிருந்து முரண்படும் கருத்துக்களை உடையவர்களோடு ஓடும்போது அடிக்கடி தடுமாறுகிறோம். 

பேதுரு, ஜெபம், விருந்தோம்பல், மற்றும் நமக்கு முன்பாக இருக்கும் வாழ்க்கையை வடிவமைத்துக்கொள்வதைக் குறித்து பேசுகிறார். அவர், “நீங்கள் தேவனுடைய பற்பல கிருபையுள்ள ஈவுகளைப் பகிர்ந்துகொடுக்கும் நல்ல உக்கிராணக்காரர்போல,” (வச. 10) “ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள்” (1 பேதுரு 4:8) என்று வலியுறுத்துகிறார். நாம் தேவனிடத்தில் தொடர்புகொள்வதற்கும் ஒத்துழைப்பதற்குமான உதவி கேட்கும்போது, வேற்றுமையிலும் ஒற்றுமையை கொண்டாடக்கூடிய ஓட்டத்தை நாம் நேர்த்தியாய் ஓட முடியும்.