தைரியத்துக்கான சோதனை
யுத்தம் கர்த்தருடையது; அவர் உங்களை எங்கள் கையில் ஒப்புக் கொடுப்பார் ! (வ.47). 1 சாமுவேல் 17 :32 -51
என் மகள் ஆழ்ந்த வலியை அனுபவித்த சில…
தைரியம்
வேதாகம தைரியம் என்ற கருத்து வேதாகமத்தில் காணப்படும் போதனைகள் மற்றும் கதைகளில் வேரூன்றியுள்ளது. அது துன்பம் அல்லது ஆபத்தை எதிர்கொள்ளும் வீரம், பெலன் மற்றும் அச்சமின்மை ஆகியவற்றுடன் தொடர்புடையது. அது தனிநபர்கள் தடைகளை கடக்கவும் தேவ நோக்கத்தை நிறைவேற்றவும் உதவும் ஒரு நல்லொழுக்கம் ஆக பார்க்கப்படுகிறது. தாவீது கோலியாத்தை தோற்கடித்தது, தன் மக்களை காப்பாற்ற இராஜாவை அணுகுவதில் எஸ்தரின் தைரியம் மற்றும் கடுமையான எதிர்ப்பின் மத்தியிலும் தம் ஊழியத்தில் இயேசுவின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு போன்ற வேதாகம தைரியம், வேதாகமத்தில் உள்ள பல கதைகளில்…
தேவனில் பலப்படுதல்
கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியன் புலிசிக், தன்னுடைய காலபந்தாட்ட வரலாற்றில் பல காயங்களை எதிர்கொள்ள நேரிட்டது. அதின் விளைவாய் கால்பந்து சாம்பியன்ஸ் லீக் அரையிறுதி ஆட்டத்தின் வீரர்களின் அதிகாரப்பூர்வ பெயர் பட்டியலில் அவருடைய பெயர் இடம்பெறாது என்பதை அறிந்து அவர் ஏமாற்றமடைந்தார். ஆனால் தேவன் அவருக்கு தன்னை எவ்வாறு வெளிப்படுத்தினார் என்பதை விவரிக்கிறார். “எப்போதும் போல, நான் தேவனை சார்ந்திருக்கிறேன்; அவர் என்னை பெலப்படுத்துகிறார்; எப்போதும் என்னோடு ஒருவர் இருப்பதைப் போல நான் உணர்கிறேன். அந்த உணர்வில்லாமல் எந்த காரியத்தையும் என்னால் செய்ய முடியாது” என்று அவர் கூறுகிறார். ஆனால் அதே ஆட்டத்தில் மாற்றாட்டக்காரராய் களமிறங்கிய புலிசிக், அந்த ஆட்டத்தின் நாயகனாய் மாறினார். அவர் விளையாடிய அந்த ஆட்டத்தில் அவர் புத்திசாலித்தனமாய் நகர்த்திய பந்து அந்த விளையாட்டில் அவருடைய அணி வெற்றிபெறுவதற்கான முக்கிய திருப்பமாய் அமைந்து, அவரை அந்த விளையாட்டின் நாயகனாய் மாற்றியது. இந்த அனுபவமானது, நம்முடைய பலவீனங்கள் தேவன் தன்னுடைய அளவிட முடியாத வல்லமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பாய் கருதலாம் என்னும் விலையேறப்பெற்ற பாடத்தை அவருக்கு கற்பித்தது.
பிரச்சனைகளை நாம் சந்திக்கும்போது, நம்முடைய சுயபெலத்தை சார்ந்துகொள்ளும்படிக்கு உலகம் நமக்குக் கற்பிக்கிறது. ஆனால் அதுபோன்ற சூழ்நிலைகளில் தேவனுடைய கிருபையும் வல்லமையும் நம்மை பெலப்படுத்துகிறது என்று வேதாகம ஞானம் நமக்கு போதிக்கிறது (2 கொரி. 12:9). ஆகையால் போராட்டங்களை நாம் தனித்து மேற்கொள்வதில்லை என்பதை அறிந்து விசுவாசத்தோடு முன்னேறுவோம். நம்முடைய பெலவீனங்கள் தேவனுடைய பெலனை விளங்கச்செய்யும் வாய்ப்புகளாய் தேவன் பயன்படுத்தி நம்மை பலப்படுத்துகிறார் (வச. 9-10). ஆகையால் நம்முடைய போராட்டங்களை தேவனை துதிக்கும் மற்றும் நன்றி செலுத்தும் வாய்ப்புகளாய் பயன்படுத்தி, மற்றவர்களுக்கு இந்த அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும்போது, அவர்களும் இந்த தெய்வீக அன்பின் மேன்மையை அனுபவிக்கக்கூடும்.
நீலக்கல் திருச்சபை மணிகள்
நீலக்கல் பாறை என்பது ஆச்சரியமான ஒரு பாறை. அதை அடைக்கும்போது, அதில் சிதறும் சில நீலக்கற்கள் இசையொலி ஏற்படுத்தும். “மணியோசை” என்று பொருள்படும் மேன்க்ளோசோக் என்ற ஒரு வெல்ஷ் கிராமத்தில், பதினெட்டாம் நூற்றாண்டு வரை இந்த நீலக்கற்களை தேவாலய மணிகளாகப் பயன்படுத்தினர். இங்கிலாந்தின் பிரபலமான ஸ்டோன்ஹென்ச் என்ற நீலக்கற்பாறை மிச்சங்கள், இசையை ஏற்படுத்தும் விதமான அமைக்கப்பட்டிருக்கலாம் என்று ஊகிக்க தோன்றுகிறது. சில ஆராய்ச்சியாளர்கள், ஸ்டோன்ஹென்சில் இடம்பெற்றுள்ள இந்த நீலக்கற்கள் அதிலிருந்து இருநூறு மைல் தொலைவில் அமைந்திருந்த இந்த மேன்க்ளோசோக் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டிருக்கலாம் என்று கணிக்கிறார்கள்.
இசையை ஏற்படுத்தும் இந்த நீலக்கற்கள் என்பது தேவனுடைய படைப்பில் ஒரு ஆச்சரியமாய் திகழ்கிறது. இயேசு குருத்தோலை ஞாயிற்றில் எருசலேமுக்குள் பிரவேசிக்கும்போது சொன்ன காரியத்தை நினைவுபடுத்துகிறது. ஜனங்கள் இயேசுவைச் சுற்றிலும் கூச்சலிட, அவர்களை அதட்டும்படிக்கு மார்க்கத் தலைவர்கள் இயேசுவை கேட்கிறார்கள். இயேசு அவர்களுக்கு பிரதியுத்தரமாக, “இவர்கள் பேசாமலிருந்தால் கல்லுகளே கூப்பிடும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்” (லூக்கா 19:40) என்கிறார்.
நீலக்கற்களினால் இசையெழுப்பக்கூடும் என்றால், கல்லுகளே சிருஷ்டிகரை கூப்பிடும் என்று இயேசு சொல்லுவதை கருத்தில்கொண்டால், நம்மை உண்டாக்கி மீட்டுக்கொண்ட நம்முடைய நேசருக்கு எவ்வளவாய் நன்றி செலுத்த நாம் கடமைப்பட்டுள்ளோம்! அவர் நம் அனைத்து துதிகளுக்கும் பாத்திரர். அவருக்கு துதி செலுத்த பரிசுத்த ஆவியானவர் நமக்கு அருள்செய்வாராக. அனைத்து சிருஷ்டியும் அவரை பணிகின்றன.
தோலுக்கு உள்ளே கிரியை
ஜோஸ் சமீபத்தில் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட ஒரு இளைஞன். அவனுடைய சகோதனுடைய திருச்சபைக்கு ஒரு நாள் போயிருந்தான். அவன் திருச்சபைக்குள் நுழைவதைப் பார்த்த அவனுடைய சகோதரனின் முகம் வாடிப்போயிற்று. ஜோஸ் டி-ஷர்ட் அணிந்திருந்ததால், அவனுடைய இரு கைகளிலும் வரையப்பட்டிருந்த டாட்டூக்கள் தெளிவாக பளிச்சிட்டன. அவனுடைய டாட்டூக்கள் அவனுடைய பழைய வாழ்க்கையை நினைவுபடுத்தக்கூடியதாய் இருந்ததினால், அவனை வீட்டிற்கு சென்று ஒரு முழுக்கை சட்டை அணிந்துவரும்படிக்கு அவனுடைய சகோதரன் வலியுறுத்தினான். அதைக் கேட்ட ஜோஸ் சோர்ந்துபோய்விட்டான். அவர்களுடைய பேச்சைக் கேட்ட வேறொருவர் அவர்கள் இருவரையும் திருச்சபை போதகரின் முன்னிலையில் கொண்டு நிறுத்தி, நடந்ததை சொன்னார். போதகர் அதைக் கேட்டு புன்னகையோடு தன்னுடைய சட்டையின் பட்டனை அவிழ்த்தார். அவருடைய மார்பு பகுதியில் அவருடைய பழைய வாழ்க்கையை வெளிப்படுத்தும் ஒரு பெரிய டாட்டூ இருந்ததை அவர்களுக்குக் காண்பித்தார். பின்பு ஜோஸைப் பார்த்து, தேவன் நம்மை உள்ளும் புறம்பும் சுத்திகரித்துவிட்டபடியால், உன் கைகளில் இருக்கும் டாட்டூக்களை நீ மறைக்கவேண்டிய அவசியம் இல்லை என்று அறிவுறுத்தினார்.
தாவீது, தேவனால் சுத்திகரிக்கப்பட்ட அனுபவத்தைப் பெற்றுக்கொண்டான். தன்னுடைய பாவத்தை தேவனிடத்தில் அறிக்கையிட்ட தாவீது ராஜா, “எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ, எவனுடைய பாவம் மூடப்பட்டதோ, அவன் பாக்கியவான்” (சங். 32:1) என்று எழுதுகிறான். மேலும் செம்மையான இருதயமுள்ளவர்களோடு சேர்ந்து ஆனந்த முழக்கமிடுகிறார் (வச. 11). பவுல் அப்போஸ்தலர், கிறிஸ்துவின் மீதான விசுவாசம் நம்மை இரட்சிப்புக்கு நேராய் வழிநடத்தி, அவருக்கு முன்பாக மாசில்லாதவர்களாய் நிறுத்தும் அறிக்கையை வெளிப்படுத்தும் ரோமர் 4:7-8 வேதப்பகுதியில், சங்கீதம் 32:1-2ஐ மேற்கோள் காண்பிக்கிறார்.
இயேசுவில் நம்முடைய பரிசுத்தம் என்பது தோலோடு அல்ல, அவர் நம்மை அறிந்து நம்முடைய இருதயத்தை சுத்திகரிக்கிறார் (1 சாமுவேல் 16:7; 1 யோவான் 1:9). அவருடைய சுத்திகரிக்கும் கிரியையில் இன்று நாம் மகிழ்ச்சியடைவோம்.