திருப்பி அனுப்பப்பட்ட கூழாங்கல்
1 யோவான் 1:9
நம்முடைய பாவங்களை நாம்
அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து...
திருப்பி அனுப்பப்பட்ட கூழாங்கல்
கரீனாவும் அவர் குடும்பமும் யுனைடெட் ஸ்டேட்ஸின் இரண்டு தென்மாநிலங்களின் இடைவெளியில் உள்ள கிரேட்…
இரகசிய வரலாறு
லூக்கா 23:34
பிதாவே, இவர்களுக்கு மன்னியும்,
தாங்கள் செய்கிறது இன்னதென்று
அறியாதிருக்கிறார்களே என்றார்.
இரகசிய வரலாறு
ககவிஞர் ஹென்ரி வாட்ஸ்வொர்த் லாங்பெல்லோ “நம் எதிரிகளின் இரகசிய வரலாற்றை நம்மால் படிக்க முடிந்தால்,…
ஒரு புதிய வாழ்வு
2 கொரிந்தியர் 5:17
ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுசிருஷ்டியாயிருக்கிறான்;
பழையவைகள் ஒழிந்து போயின, எல்லாம் புதிதாயின.
ஒரு புதிய வாழ்வு
ஆபத்தான பதின் பருவத்தினர் இளைஞர்களின் அறையில் தங்கள் இருக்கையில்…
தேர்ந்தெடுக்கப்பட்ட நேசிக்கப்பட்ட மற்றும் மதிக்கப்பட்ட
எபேசியர் 1:12
அவருடைய தீர்மானத்தின்படியே ...
கிறிஸ்துவுக்குள் அவருடைய சுதந்தரமாகும்படி தெரிந்து கொள்ளப்பட்டோம்.
தேர்ந்தெடுக்கப்பட்ட நேசிக்கப்பட்ட மற்றும் மதிப்புமிக்க
சாரியட்ஸ் ஆப் ஃபயர் என்னும் 1981 ன் திரைப்படம் (1924ல்…
மறைக்கப்பட்ட பொக்கிஷம்
1 கொரிந்தியர் 1:18
சிலுவையைப்பற்றிய உபதேசம் ...
நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.
மறைக்கப்பட்ட பொக்கிஷம்
1989 தெற்கு கரோலினாவை சார்ந்த சார்லஸ்டனை ஹியூகோ சூறாவளி அழித்த பின் கட்டிட தொழிலாளர்கள் மறைக்கப்பட்ட…
முடிவுரை
முடிவுரை | ஜேம்ஸ் பேங்க்ஸ், நமது அனுதின மன்னா ஆசிரியர்
தேவனின் அன்பு மற்றும் மன்னிப்பின் சத்தியம்
ஒரு நாள் என் நண்பர் மார்க் என்னிடம் “இயேசுவின் அன்பு…
மன்னிப்பின் உறுதி
நமது அனுதின மன்னாவில்
இருந்து 10 பிரதிபலிப்புகள்
முன்னுரை | கேரன் ஹுவாங், நமது அனுதின மன்னா ஆசிரியர்
விடுதலை செய்யப்பட்டோம்
அ து காலை 11:00 மணி. நான் படுக்கையிலேயே இருந்தேன்.
எனக்கு தூங்க வேண்டும். நான் விழிப்பற்ற தூக்க நிலையை வேண்டினேன். மாதக் கணக்காய் இடைவிடாத வேலை மற்றும் ஒரு வெற்றிகரமான திட்டத்தின் தொடக்கம் என்னை முற்றிலும் சோர்வடைய செய்தது. என் குடும்பத்துடன் நேரம் செலவிட வில்லை, ஓய்வு நேரத்தையும் வார இறுதி நாட்களையும் தியாகம் செய்தேன். வெற்றி கடினமானது, ஏனெனில் நான் அதிகமாய் அக்கறை…
பெலவீனத்தில் பெலன்
என்னுடைய மகனுக்கு மூன்று வயதிருக்கும்போது, எனக்கு ஒரு அறுவை சிகிச்சை நடைபெற்றது. அதற்கு ஒருமாத காலம் ஓய்வெடுக்கவேண்டியிருந்தது. அந்த அறுவை சிகிச்சைக்கு முன்பதாக, எங்கள் வீட்டில் இன்னும் கழுவாமல் போடப்பட்டிருந்த பாத்திரங்களை நான் யோசித்துப்பார்த்தேன். சுறுசுறுப்பாய் சுற்றித்திரியும் என் சிறுபிள்ளையை நான் எப்படி பாதுகாக்கப்போகிறேன் என்றும் அடுப்பறையில் நின்று எவ்வாறு சமையல் செய்யப்போகிறேன் என்பதையும் குறித்து என்னால் சற்றும் கற்பனை செய்யமுடியவில்லை. என்னுடைய இந்த பலவீனம் எங்கள் சுமூகமான வாழ்க்கையை பாதித்ததைக் குறித்து நான் சோர்வுற்றேன்.
கிதியோனுடைய சேனைகள் மீதியானியரிடத்தில் யுத்தம்செய்வதற்கு முன்னர் தேவன் அவர்களை பெலவீனமடையச் செய்தார். முதலாவது, பயப்படுகிறவர்கள் திரும்பிப் போகும்படிக்கு சொல்லப்பட்டது. அதில் இருபத்தி இரண்டாயிரம் பேர் திரும்பப் போய்விட்டனர் (நியாயாதிபதிகள் 7:3). மீதமிருந்த பத்தாயிரம் பேர்களில், தண்ணீரை கையில் அள்ளிப் பருகியவர் மட்டும் இருக்கும்படிக்கு கட்டளையிடப்பட்டது. வெறும் மூந்நூரு பேர் மாத்திரம் மீதமிருந்தனர். ஆனால் இந்த குறைவான எண்ணிக்கை அவர்கள் சுயத்தின் மீது நம்பிக்கை வைக்க விடாமல் பாதுகாத்தது (வச. 5-6). அவர்கள் “என் கை என்னை ரட்சித்தது” (வச. 2) என்று இப்போது சொல்லமுடியாது.
நம்மில் பலர் இதுபோன்ற சோர்வுற்று பெலவீனமான தருணங்களை அனுபவிப்பதுண்டு. இந்த அனுபவம் எனக்கு நேரிடும்போது, தேவன் எனக்கு எவ்வளவு அவசியம் என்பதை அறிந்துகொண்டேன். தேவன் தன்னுடைய ஆவியைக்கொண்டு உள்ளுக்குள்ளும், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மூலம் வெளியரங்கமாகவும் என்னை உற்சாகப்படுத்தினார். நான் என்னுடைய சுதந்திரம் பறிபோவதாக எண்ணினேன். ஆனால் தேவனை முற்றிலும் சார்ந்துகொள்ள பழகிக்கொண்டேன். நம்முடைய தேவைகளை நாம் பூர்த்திசெய்ய முடியாத பட்சத்தில், “பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்” (2 கொரிந்தியர் 12:9) என்ற வார்த்தைகள் நம்மை தேற்றும்.