1 கொரிந்தியர் 1:18
சிலுவையைப்பற்றிய உபதேசம் …
நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.

மறைக்கப்பட்ட பொக்கிஷம்

1989 தெற்கு கரோலினாவை சார்ந்த சார்லஸ்டனை ஹியூகோ சூறாவளி அழித்த பின் கட்டிட தொழிலாளர்கள் மறைக்கப்பட்ட பொக்கிஷத்தை கண்டுபிடித்தனர். அழிக்கப்பட்ட ஆலயத்தின் இடிபாடுகளை சுத்தம் செய்யும்போது இன்னமும் நின்று கொண்டிருக்கும் சிலுவையை கண்டனர். கிரேன் மூலமாக கூட அதை நகர்த்த இயலவில்லை- இறுதியாக சுத்தமான தங்கம் அதற்குள் இருப்பதை அறிந்தனர். அமெரிக்க உள்நாட்டுப் போரின் போது மக்கள் எதிரி படையினரிடம் இருந்து தங்கத்தைப் பாதுகாக்க தங்கத்தை உருக்கி சிலுவையில் மறைத்து வைத்தனர். கிறிஸ்துவின் சிலுவையின் இருப்பிடம் தான் விசுவாசிகளுக்கு உண்மையான ஆவிக்குரிய பொக்கிஷம் ஆனால் அப்போஸ்தலர் பவுல் கொரிந்து சபைக்கு எழுதிய செய்தி “கெட்டுப் போகிறவர்களுக்கு பைத்தியமாய் இருக்கிறது” (1 கொரிந்தியர் 1:18).

இயேசுவின் சிலுவை மரணத்தை நிராகரிப்பவர்கள் பாவத்தின் விளைவுகளில் இருந்து மீட்க தேவகுமாரன் மரணமடைந்து உயிர்த்தெழுந்தார் என்று விசுவாசிப்பது பைத்தியமாய் இருக்கலாம். ஆனால் அதை விசுவாசிப்பவர்கள் இரட்சிக்கப்பட்டவர்களுக்கு சிலுவையே “தேவ பெலனாய் இருக்கிறது” (வசனம் 18). தேவன் பைத்தியமானதை ஞானமாக ஆக்கியிருக்கிறார், ஆனால் “இந்த பைத்தியம் என்னப்படுவது மனுஷருடைய ஞானத்திலும் அதிக ஞானமாய் இருக்கிறது” (வசனம் 25). நம்மை தேவனிடம் சமர்ப்பித்து கிறிஸ்துவின் சிலுவையின் ஈவை ஏற்றுக் கொண்டால் அவருடைய உறவின் ஐஸ்வர்யத்தை அனுபவிக்கலாம்.

நாம் தங்க பொக்கிஷத்தை அடைய மாட்டோம் ஆனால் அளவற்ற மற்றும் அவருடனான நித்திய வாழ்வை மிகச்சிறந்த ஈவாகப் பெறுவோம். அது பைத்தியம் அன்று!

எமி பவுச்சர் பை

இந்த உலகம் பைத்தியமாய் நினைக்கும் தேவ ஞானத்தை நீங்கள் எப்போது அனுபவித்தீர்கள்? இயேசுவின் சிலுவை அவருக்காக வாழ உங்களை எப்படி அதிகாரம் உள்ளவர் ஆக்குகிறது?

இயேசு நம் மீட்பர் உம் ராஜ்யத்தில் வாழ்வை ஈவாக தரும் உமக்கு நன்றி- எப்போதும் மிகச் சிறந்த பொக்கிஷம். இந்த அற்புதமான ஈவை மற்றவர்களுடன் பகிர உதவும்.

இன்றைய வேத பகுதி | 1 கொரிந்தியர் 1:17-25

17 ஞானஸ்நானத்தை கொடுக்கும்படி கிறிஸ்து என்னை அனுப்பவில்லை; சுவிசேஷத்தை பிரசங்கிக்கவே அனுப்பினார்; கிறிஸ்துவின் சிலுவை வீணாய்ப்போகாதபடிக்கு சாதுரிய ஞானம் இல்லாமல் பிரசங்கிக்கவே அனுப்பினார்..

18 சிலுவையைப் பற்றிய உபதேசம் கெட்டு போகிறவர்களுக்கு பைத்தியமாய் இருக்கிறது, இரட்சிக்கப் படுகிற நமக்கோ அது தேவ பெலனாய் இருக்கிறது.

19 அந்தப்படி: ஞானிகளுடைய ஞானத்தை நான் அழித்து புத்திசாலிகள் உடைய புத்தியை அவமாக்குவேன் என்று எழுதியிருக்கிறது.

20 ஞானி எங்கே? வேதபாரகன் எங்கே? இப்பிரபஞ்சத் தர்க்க சாஸ்திரி எங்கே? இவ்வுலகத்தின் ஞானத்தை தேவன் பைத்தியம் ஆக்க வில்லையா?

21 எப்படி எனில், தேவ ஞானத்துக்கு ஏற்றபடி உலகமானது சுய ஞானத்தினாலே தேவனை அறியாது இருக்கையில் பைத்தியமாக தோன்றுகிற பிரசங்கத்தினாலே விசுவாசிகளை இரட்சிக்க தேவனுக்குப் பிரியம் ஆயிற்று.

22 யூதர்கள் அடையாளத்தைக் கேட்கிறார்கள், கிரேக்கர் ஞானத்தைத் தேடுகிறார்கள்; .

23 நாங்களோ சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவை பிரசங்கிக்கிறோம். அவர் யூதருக்கு இடறலாயும் கிரேக்கருக்கு பைத்தியமாயும் இருக்கிறார்.

24 ஆகிலும் யூதர் ஆனாலும் கிரேக்கர் ஆனாலும் எவர்கள் அழைக்கப்பட்டு இருக்கிறார்களோ அவர்களுக்கு கிறிஸ்து தேவபெலனும் தேவஞானமுமாயிருக்கிறார்.

25 இந்தப்படி தேவனுடைய பைத்தியம் என்னப்படுவது மனுஷருடைய ஞானத்திலும் அதிக ஞானமாயிருக்கிறது; தேவனுடைய பலவீனம் என்னப்படுவது மனுஷருடைய பலத்திலும் அதிக பலமாய் இருக்கிறது.

 

banner image