1 யோவான் 1:9
நம்முடைய பாவங்களை நாம்
அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து…

திருப்பி அனுப்பப்பட்ட கூழாங்கல்

ரீனாவும் அவர் குடும்பமும் யுனைடெட் ஸ்டேட்ஸின் இரண்டு தென்மாநிலங்களின் இடைவெளியில் உள்ள கிரேட் ஸ்மோக்கி மௌன்டெய்ன்ஸ் நேஷனல் பார்க்கை சுற்றிப் பார்க்கச் சென்றனர். அவர் பார்க் ரேஞ்சருக்கு எழுதிய கடிதத்தில் டாம் பிரான்ச் பால்ஸ் பார்த்து மகிழ்ந்த தாகவும் மிகவும் பிடித்ததால் ஒரு கூழாங்கல்லை நினைவுச் சின்னமாக கொண்டு சென்றதாகவும் குறிப்பிட்டார். சிறுமியாக அது சட்ட விரோதமான செயல் என்று தெரியவில்லை. ஒரு கட்டத்தில் அவர் தவறை உணர்ந்து மன்னிப்பு கோரி கடிதமும் அந்த அருவிக்கு கூழாங்கல் திரும்பிவிடும் என்று எண்ணி அந்த கூழாங்கல்லை சேர்த்து அனுப்பினார்.

கரீனாவின் மன்னிப்பும்- ரேஞ்சரின் கருணையுள்ள பதிலும்- நமக்கு பாவத்திலிருந்து திரும்பி தேவனின் மன்னிப்பை வேண்டுவதற்கு மாதிரிகளாக திகழ்கின்றன. அப்போஸ்தலர் யோவான் “நாம் பாவங்களை அறிக்கையிட்டால்” தேவன் நம்மை மன்னிப்பார் (1 யோவான் 1:9). நாம் அவருக்கு செய்த தவறுகளையும் மற்றும் நாம் மற்றவர்களுக்கு செய்த தவறுகளையும் ஒப்புக் கொள்வது, நாம் சரியான திசையில் செல்வதற்கான முதல் படியாகும். நாம் நம் தவறுகளை ஒத்துக் கொள்ள விரும்புவதில்லை. நாம் சரியானவர் அல்லது பாவ மற்றவர் என்று பாசாங்கு செய்வது நம்மை நாமே சுய- ஏமாற்றுவது ஆகும் (வசனம் 8).

பார்க் ரேஞ்சர் கருணையுடன் கரீனாவுக்கு பதில் அனுப்பினார். அவர் கூழாங்கல்லை திருப்பி கொடுத்ததற்காக, நன்றி தெரிவித்து அவர் பார்க்கின் இயற்கை வளங்களைக் காக்கும் ஒரு பொறுப்பாளராக ஆனதை அடையாளம் கண்டார். நம் குற்றங்களை ஒத்துக் கொள்வதன் மூலம் நாம் நமக்காக பலியான இயேசுவின் பலியை கனப் படுத்துகிறோம். அவர் நமக்காக தம் உயிரையே விலைக்கிரயம் ஆக கொடுத்து நமக்கு புது ஜீவனை அளிக்க மீண்டும் உயிர்த்தெழுந்தார். தேவன் உண்மையுடன் தாராளமாய் மன்னிப்பை வழங்குகிறார்.

கிர்ஸ்டன் ஹோல்ம்பெர்க்

உங்கள் வாழ்வில் அறிக்கையிடாத தவறுகள் என்ன இருக்கின்றன? இன்று நீங்கள் மன்னிப்பை எவ்வாறு தேட முடியும்?

பிதாவாகிய தேவனே, நான் என் பாவங்களையும் குறைபாடுகளையும் ஒப்புக்கொள்கிறேன். நான் ஒவ்வொன்றிற்கும் பணிவுடன் மன்னிப்பை வேண்டுகிறேன். எனக்காக பலியான இயேசுவுக்கு நன்றி.

இன்றைய வேதப் பகுதி | 1 யோவான் 1:5-10

5 தேவன் ஒளியாய் இருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருள் இல்லை; இது நாங்கள் அவரிடத்தில் கேட்டு உங்களுக்கு அறிவிக்கிற விசேஷமாய் இருக்கிறது.

6 நாம் அவரோடு ஐக்கிய பட்டவர்கள் என்று சொல்லியும் இருளிலே நடக்கிறவர்களாய் இருந்தால் சத்தியத்தின்படி நடவாமல் பொய் சொல்லுகிறவர்களாய் இருப்போம்.

7 அவர் ஒளியில் இருக்கிறது போல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கிய பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மை சுத்திகரிக்கும்.

8 நமக்கு பாவம் இல்லை என்போம் ஆனால் நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாய் இருப்போம், சத்தியம் நமக்குள் இராது.

9 நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால் பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராய் இருக்கிறார்.

10 நாம் பாவம் செய்யவில்லை என்போம் ஆனால் நாம் அவரை பொய்யர் ஆக்குகிறவர்களாய் இருப்போம், அவருடைய வார்த்தை நமக்குள் இராது.

 

banner image