தேவன் நம்மோடு பேசுகிறார்
அறியாத ஒரு எண்ணிலிருந்து எனக்கு அழைப்பு வந்தது. பொதுவாய் அதுபோன்ற அழைப்புகளை நான் எடுப்பதில்லை. ஆனால் அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டேன். அதில் பேசிய நபர், ஒரு சிறிய வேதாகம செய்தியை ஒரு நிமிடத்தில் பகிர்ந்துகொள்ளலாமா என்று கேட்டார். அவர் வெளிப்படுத்தல் 21:3-5இல் உள்ள “கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்” என்ற வசனத்தைக் குறிப்பிட்டு, இயேசுவைக் குறித்தும் அவர் நமக்குக் கொடுக்கும் நிச்சயத்தைக் குறித்தும் குறிப்பிட்டார். நான் இயேசுவை ஏற்கனவே என் சொந்த இரட்சகராய் ஏற்றுக்கொண்டேன் என்று சொன்னேன். அவர் அதை பொருட்படுத்தியதாக தெரியவில்லை. நான் அவரோடு சேர்ந்து ஜெபிக்க அவர் விரும்பினார். அவர் எனக்காய் ஜெபிக்கும்போது, என்னுடைய ஊக்கத்திற்காகவும் பெலத்திற்காகவும் ஜெபித்தார்.
அந்த அழைப்பானது வேதத்தில் இடம்பெற்றுள்ள, சிறுவன் சாமுவேலின் அழைப்பை எனக்கு நினைவுபடுத்தியது (1 சாமுவேல் 3:4-10). சாமுவேல் தேவனுடைய சத்தத்தைக் கேட்டு, அது ஆசாரியனாகிய ஏலியின் சத்தம் என்று நினைத்துக்கொண்டான். ஆனால் ஏலியின் ஆலோசனையின் பேரில் கடைசி முறை தேவனுடைய சத்தத்தைக் கேட்ட மாத்திரத்தில், “சொல்லும்; அடியேன் கேட்கிறேன்” (வச. 10) என்று பதில் சொன்னான். அதுபோல இரவும் பகலும் தேவன் நம்மோடு பேசக்கூடும். நாம் அவருடைய சத்தத்தை உடனே அடையாளம் கண்டுகொள்ள வேண்டுமென்றால், அவருடைய சமூகத்தில் அதிக நேரம் செலவழிக்கிறவர்களாய் இருக்கவேண்டும்.
அந்த அழைப்பை நான் வேறொரு கோணத்திலும் சிந்தித்தேன். நாம் மற்றவர்களுக்கு தேவனுடைய தூதுவர்களாகவும் செயல்பட நேரிடலாம். நாம் மற்றவர்களுக்கு எந்தவிதத்தில் உதவிசெய்யக் கூடும் என்று எண்ணத் தோன்றலாம். தேவனுடைய ஆலோசனையோடு, யாரையாவது தொலைபேசியில் அழைத்து, “நான் உங்களுக்காக இன்று ஜெபிக்கலாமா?” என்ற கேட்க முற்படலாம்.
வாய்ப்பை பயன்படுத்திக்கொள்
இருபது வயது நிரம்பிய ஷின் யி, பல்கலைக்கழகத்திற்கு போவதற்கு முன்னர் தன்னுடைய மூன்று மாத விடுமுறையில், இளைஞர் ஊழிய இயக்கத்தில் சேர்ந்து ஊழியம் செய்ய விரும்பினாள். ஆனால் கோவிட்-19 தொற்று பரவிய நாட்களில் ஒருவரையொருவர் நேரில் சந்திப்பது சாத்தியமில்லாததாய் தோன்றியது. ஆனால் ஷின் யி விரைவில் அதற்கு ஒரு வழியைக் கண்டுபிடித்தார். “நாங்கள் வழக்கம் போல் தெருக்கள், வணிக வளாகங்கள், துரித உணவு மையங்கள் போன்ற இடங்களில் மாணவர்களைச் சந்திக்க முடியவில்லை. ஆனால் நாங்கள் ஸ_ம் செயலி வழியாக கிறிஸ்தவ மாணவர்களுடன் ஒருவருக்காக ஒருவர் ஜெபிக்கவும், மற்ற மக்களிடம் தொலைபேசி அழைப்புகள் மூலமாகவும் தொடர்ந்து தொடர்பில் இருந்தோம்” என்று சொன்னாள்.
அப்போஸ்தலர் பவுல் தீமோத்தேயுவை செய்யும்படிக்கு உற்சாகப்படுத்தியதை ஷின் யி செய்தாள்: “சுவிசேஷகனுடைய வேலையைச் செய்” (2 தீமோத்தேயு 4:5). கேட்கப்படவேண்டிய சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும் (வச. 3-4) என்று பவுல் தொடர்ந்து எச்சரிக்கிறார். ஆகையால் தீமோத்தேயு “சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம்பண்ண” ஆயத்தமானான். “எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம்பண்ணி, கடிந்துகொண்டு, புத்திசொல்ல” (வச. 2) தீமோத்தேயு தயாரானான்.
நாம் எல்லோருக்கும் சுவிசேஷக அழைப்போ அல்லது பிரசங்கம்பண்ணும் பிரத்யேகமான அழைப்போ இல்லாதபோதிலும், நம்மை சுற்றியிருக்கிற மக்களுக்கு சுவிசேஷத்தை பகிர்ந்துகொள்ளலாம். இயேசுவை நம்பாமல் அவிசுவாசிகள் அழிந்துபோகின்றனர். விசுவாசிகளுக்கு பெலனும் உற்சாகமும் தேவைப்படுகிறது. தேவனுடைய உதவியோடு, சமயம் வாய்த்தாலும் வாய்க்கவிட்டாலும் திருவசனத்தை ஜாக்கிரதையாய் பிரசங்கம்பண்ணுவோம்.
ஆசீர்வதிக்கப்பட்ட மனந்திரும்புதல்
ஓசியா 14:2
தேவரீர் எல்லா அக்கிரமத்தையும் நீக்கி,
எங்களைத் தயவாய் அங்கீகரித்தருளும்
ஆசீர்வதிக்கப்பட்ட மனந்திரும்புதல்
“உடைந்தது” என்பது கிரேடியின் தெருவின் பெயராக இருந்தது மற்றும் அந்த ஐந்து எழுத்துக்கள் அவருடைய…
பூரணமான பலி
1 பேதுரு 1:18-19
குற்றமில்லாத மாசற்ற... கிறிஸ்துவின்
விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்கள்...
பூரணமான பலி
ஏப்ரல் 24,1990 அன்று 1.5 பில்லியன் மதிப்புடைய ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி (Hubble Space…
கிருபை வழங்குபவர்கள்
கொலோசெயர் 4:6
உங்கள் வசனம் எப்பொழுதும் கிருபை
பொருந்தினதாயும் உப்பால் சாரமேறினதாயுமிருப்பதாக.
கிருபை வழங்குபவர்கள்
ஆரம்பத்தில் ஒரு நிர்வாக ஆசிரியராகக் கிளார் இருந்தபோது அவரால் ஒரு தீவிரமான தட்டச்சுப்…
ஒப்புரவுக்கான பசி
மத்தேயு 26:28
இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச்
சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய
என்னுடைய இரத்தமாயிருக்கிறது.
ஒப்புரவுக்கான பசி
ப்ளேசெஸ் இன் த ஹார்ட் என்னும் திரைப்படம் எட்னா ஸ்பால்டிங் என்பவரின் கதையை சொல்கிறது.…
அவர் மன்னிக்கிறார்
சங்கீதம் 130:4
உம்மிடத்தில் மன்னிப்பு உண்டு.
அவர் மன்னிக்கிறார்
மாமார்க்கின் கை அவருடைய தொடுதளத்தை (டச் பேட்) இயக்கும்போது நடுங்கியது.ஆன்லைன் வரலாற்றை உருட்டினார் (ஸ்க்ரோலிங்). பல்லாண்டுகளாய் ஆன்லைனில் சூதாட்டம் ஆடிய…