Archives: மார்ச் 2023

odb

தொடர்புடைய தலைப்புகள்

> odb

பிறருக்கான சேவையில்

எஸ்தர் "பென்" கிம்சந்த், குஜராத்தில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த 20 ஆம் நூற்றாண்டின் எழுத்தாளர். அவர் தனது எழுத்துக்கள் மூலம் மாநிலத்தில் பெண்களின் உரிமைகளை ஆதரித்தார். நல்ல கல்வி பெண்களை அவர்களின் குடும்பங்களிலும் சமூகங்களிலும் மரியாதைக்குரிய இடங்களில் வைக்க உதவும் என்று அவர் எழுதினார். எஸ்தர் தன் திறமைகளை தனக்குத்தானே வைத்துக் கொள்ளவில்லை அல்லது தன் சொந்த லாபத்திற்காகப் பயன்படுத்தவில்லை. மாறாக, தன்னைச் சுற்றியுள்ளவர்களை மேம்படுத்துவதற்காக அவற்றைப் பயன்படுத்தினாள். பேதுருவின் நிருபம் ஆசியா மைனர் முழுவதும் அகதிகளாகச் சிதறியிருந்த முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களுக்கு எழுதப்பட்டது (1 பேதுரு 1:1). "ஒருவரையொருவர் ஆழமாக நேசிக்கவும்" மற்றும் "ஒருவருக்கொருவர் உதவிசெய்யவும்" அவர்கள் பெற்ற "எந்த ஈவையும்" பயன்படுத்தவும் அவர் அவர்களைத் தூண்டினார் (வ.10). இந்த ஈவுகளைக் குறித்து உரிமை பாராட்டாமல், அவர்களுடைய ஆவிக்குரிய வரங்களை “தேவனுடைய பற்பல கிருபை” என்று கருதும்படி பேதுரு அவர்களை வலியுறுத்தினார். தேவனுக்குச் சொந்தமானவற்றை ஜாக்கிரதையுடன் நிர்வகிக்கும் “நல்ல உக்கிராணக்காரர்போல” இருக்கும்படி அவர் அவர்களை உற்சாகப்படுத்தினார். அவர்கள் "தேவனுடைய வாக்கியங்களின்படி" பேசுகிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டு பேசவும், "தேவன் தந்தருளும் பெலத்தின்படி" ஜனங்களுக்குச் சேவை செய்யவும் அறிவுறுத்தினார். அதனால் அவர்களின் செயல்களிலும், அவற்றின் மூலமாகவும் தேவன் மகிமைப்படுவார் (வ.11) . இத்தகைய முறையில் நாம் செய்யும் எல்லாவற்றிலும் தேவனுக்கு மகிமையைச் சேர்க்கிறோம். எஸ்தர் மற்றும் ஆதிச்சபையைப் போலவே, நம்மிடமும் ஈவுகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்த ஈவுகள், நமக்குச் சாதாரணமாய் தோன்றினாலும், தேவனுடைய ராஜ்யத்தை விரிவாக்க உதவலாம். இது உணவைத் தயாரிப்பதோ, கேள்விகளுக்குப் பதிலளிப்பதோ அல்லது தேவைப்படுபவர்களுக்கு நம் வீடுகளைப் பகிர்வதோ கூட இருக்கலாம். நாம் பேசவும் செயல்படவும் தேவைப்படுகையில், நாம் ஒருவருக்கொருவர் ஊழியம் செய்து தேவனுக்கு மகிமை சேர்க்க வேண்டும் (வ.11). இப்படியாக, நம்மிடம் உள்ள ஈவுகள் எதுவாக இருந்தாலும், அவற்றைப் பயன்படுத்தி பிறரை முன்னேற்றுவோம்.

இயேசு நமக்குள் வாசம்பண்ணுகிறார்

மேற்கு அமெரிக்காவிலுள்ள உள்ள எனது மாநிலத்தில் பனிப்புயல் வீசியதால், என் விதவை தாயார் புயலிலிருந்து சற்று தப்பிக்கொள்ள, என் குடும்பத்துடன் இருக்க ஒப்புக்கொண்டார். எனினும், பனிப்புயலுக்குப் பிறகு, அவர் வீட்டிற்குத் திரும்பவில்லை. அவருடைய வாழ்நாள் முழுவதும் எங்களுடன் வசிக்க, எங்களுடன் குடியேறினாள். அவரது வருகை எங்கள் குடும்பத்தை பல நல்ல மாற்றங்களைக் கொண்டுவந்தது. குடும்பத்தினர்களுக்கான ஞானமுள்ள ஆலோசனை, அறிவுரை மற்றும் முன்னோர்களின் கதைகள் போன்றவற்றை அவர் தினசரி பகிர்ந்துகொண்டார். அவரும் என் கணவரும் ஒரே மாதிரியான நகைச்சுவை உணர்வையும் விளையாட்டின் மீதுள்ள ஆர்வத்தையும் பகிர்ந்துகொண்டு சிறந்த நண்பர்களானார்கள். இனி ஒரு விருந்தினராக இல்லை, அவர் நிரந்தரமான மற்றும் முக்கிய குடும்பத்தினராக இருந்தார். தேவன் அவரை நித்திய வீட்டிற்கு அழைத்த பிறகும் அவா் கொண்டுவந்த மாற்றங்கள் எங்கள் இதயங்களில் இருக்கும்.

இந்த அனுபவம், இயேசுவைப் பற்றி யோவான், “நமக்குள்ளே வாசம்பண்ணினார்” (யோவான் 1:14) என்று வர்ணிப்பதை நினைவூட்டுகிறது. இது மிகவும் கவனிக்கப்படவேண்டிய விளக்கமாகும், ஏனெனில் அசல் கிரேக்கத்தில் வாசம் பண்ணினார் என்ற வார்த்தை “ஒரு கூடாரம் அமைத்தல்” என்று பொருள்படும். மற்றொரு மொழிபெயர்ப்பு கூறுகிறது, அவர் “நம்மிடையே தமது வசிப்பிடத்தை ஏற்படுத்தினார்” என்று.

விசுவாசத்தினால் நாமும் இயேசுவை நம்மோடு வசிப்பவராக நம் இதயத்தில் ஏற்கிறோம். பவுல் எழுதியுள்ளாா், “நீங்கள் அவருடைய ஆவியினாலே உள்ளான மனுஷனில் வல்லமையாய்ப் பலப்படவும், விசுவாசத்தினாலே கிறிஸ்து உங்கள் இருதயங்களில் வாசமாயிருக்கவும், நீங்கள் அன்பிலே வேரூன்றி, நிலைபெற்றவர்களாகி” (எபேசியர் 3:16–17).

ஒரு சாதாரண விருந்தினராக அல்ல, இயேசு அவரைப் பின்பற்றும் அனைவருக்கும் அதிகாரமளிக்கும் நிரந்தர குடியிருப்பாளர். நாம் நம் இதயத்தின் கதவுகளை அகலத் திறந்து அவரை வரவேற்போம்.

கிறிஸ்துவுக்காக ஓர் இதயம்

நீ வாயை மூடிக்கொண்டு இருக்கும் வரை, நீ எந்த தவறும் செய்ய மாட்டாய் என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். ஒரு சக பணியாளரிடம், அவள் சொன்னவற்றை தவறாகப் புரிந்து கொண்ட பிறகு, என் கோபத்தை வெளிப்புறமாக மட்டும் அடக்கிக் கொண்டேன். நாங்கள் ஒவ்வொரு நாளும் ஒருவரையொருவர் பார்க்க வேண்டியிருப்பதால், தேவையானதை மட்டுமே பேசுவதென்று முடிவெடுத்தேன் (பேசுவதை குறைப்பதின் மூலம் பதிலடி கொடுக்க எண்ணினேன்). அமைதியான போக்கு எப்படி தவறாகும்?

இதயத்திலிருந்தே பாவம் புறப்படுகிறது என இயேசு சொன்னார் (மத்தேயு 15:18−20). எல்லாம் சரியாக இருக்கிறது என்று நினைக்கும்படி என் மௌனம் மக்களை முட்டாளாக்கியிருக்கலாம், ஆனால் அது தேவனை முட்டாளாக்கவில்லை. நான் கோபம் நிறைந்த இதயத்தை மறைத்துக் கொண்டிருக்கிறேன் என்பது அவருக்குத் தெரியும். நான் தங்கள் உதடுகளால் தேவனை கனம்பண்ணிய பரிசேயர்களைப் போலிருந்தேன், ஆனால் அவர்களின் இதயங்கள் அவரிடமிருந்து வெகு தொலைவில் இருந்தன (வச. 8). என் வெளித்தோற்றம் உண்மையான உணர்வுகளைக் காட்டாவிட்டாலும், கசப்பு எனக்குள் கொப்பளித்தது. என் பரலோக தகப்பனுடன் நான் எப்போதும் உணர்ந்த மகிழ்ச்சியும் நெருக்கமும் இல்லாமல் போய்விட்டது. பாவத்தை வளர்ப்பதும் மறைப்பதும் அவ்வாறு செய்கிறது.

தேவனின் கிருபையால், நான் எப்படி உணர்கிறேன் என்பதை என் சக ஊழியரிடம் கூறி மன்னிப்பு கேட்டேன். அவள் என்னை பெருந்தன்மையாக மன்னித்துவிட்டாள், இறுதியில் நாங்கள் நல்ல நண்பர்களானோம். “இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும்.. புறப்பட்டுவரும்” (வ.19) என்கிறார் இயேசு. நம் இதயத்தின் நிலைமை முக்கியமானது, ஏனெனில் அங்கே இருக்கும் தீமை நம் வாழ்வில் நிரம்பி வழியக்கூடும். நமது வெளிப்புறம் மற்றும் உட்புறம் இரண்டும் முக்கியம்.