என் அப்பாவின் கடைசி சில நாட்களில், ஒரு செவிலியர் அவருடைய அறைக்கு வந்து, அவருக்கு முகச்சவரம் செய்ய வேண்டுமா என்று கேட்டார். செவிலியர் மெதுவாக அவர் முகத்தைச் சவரம் செய்கையில், ​​“இவர் தலைமுறையைச் சேர்ந்த வயதானவர்கள் தினமும் சுத்தமாகச் சவரம் செய்ய விரும்புகிறார்கள்” என்று விளக்கினார். ஒருவருக்கு இரக்கம், கண்ணியம் மற்றும் மரியாதையைக் காட்ட வேண்டிய தேவையை உள்ளுணர்ந்து அந்த செவிலியர் செயலாற்றினார். அவர் அளித்த பரிவான கவனிப்பு என் இன்னொரு தோழியை எனக்கு நினைவூட்டியது, அவள் வயதான தாயின் நகங்களுக்கு இன்னும் நகப்பூச்சு பூசுகிறாள், ஏனென்றால் தான் அழகாயிருப்பது அந்த அம்மாவுக்கு முக்கியம்.

அப்போஸ்தலர் 9, தொற்காள் (தபீத்தாள் என்றும் அழைக்கப்படுபவர்) என்ற சீஷியை பற்றி நமக்குக் கூறுகிறது, அவர் ஏழைகளுக்கு கையால் செய்யப்பட்ட ஆடைகளை வழங்குவதன் மூலம் கருணை காட்டினார் (வ. 36,39). அவர் இறந்தபோது, ​​​​அவரது அறை நண்பர்களால் நிரம்பியது, அவர்கள் மற்றவர்களுக்கு உதவ விரும்பும் இந்த அன்பான பெண்ணைக் கண்ணீருடன் துக்கித்தனர்.

ஆனால் தொற்காளின் கதை அங்கு முடிவடையவில்லை. பேதுருவை அவள் உடல் கிடத்தப்பட்ட இடத்திற்குக் கொண்டுவரப்பட்டபோது, ​​அவன் மண்டியிட்டு ஜெபம் செய்தான். தேவனின் வல்லமையால், “தபீத்தாளே, எழுந்திரு” (வ. 40) என்று கூறி அவளைப் பெயர் சொல்லி அழைத்தான். ஆச்சரியமாக, தொற்காள் கண்களைத் திறந்து காலூன்றி நின்றாள். அவள் உயிருடன் இருப்பதை அவளுடைய நண்பர்கள் உணர்ந்தபோது, ​​​​நகரம் முழுவதும் வார்த்தைகள் விரைவாகப் பரவின, மேலும் “அநேகர் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவர்களானார்கள்” (வ. 42).

தொற்காள் தன் வாழ்க்கையின் அடுத்த நாளை எப்படிக் கழித்தாள்? ஒருவேளை அவள் முன்பு இருந்ததைப் போலவே; மக்களின் தேவைகளைப் பார்த்து அவற்றை பூர்த்திசெய்திருப்பாள்.