அந்த வேலைவாய்ப்பு நன்றாக இருந்தது, பீட்டருக்குத் தேவையானதும்  அதுவே. பணிநீக்கம் செய்யப்பட்ட பிறகு அந்த இளம் குடும்பத்தின் வேலைசெய்யும் இந்த ஒரே நபராக வேலைக்காகத் தீவிரமாக ஜெபித்தார். “நிச்சயமாக இது உன்  ஜெபங்களுக்கான தேவனின் பதில்” என்று அவரது நண்பர்கள் குறிப்பிட்டனர்.

இருப்பினும், வருங்கால முதலாளியைப் பற்றிப் படித்தறிந்த பின்னர் , ​​பீட்டர் சங்கடமாக உணர்ந்தார். அந்த நிறுவனம் சந்தேகத்திற்கிடமான வணிகங்களில் முதலீடு செய்திருந்தது மற்றும் ஊழல் குற்றச்சாட்டப்பட்டிருந்தது. வேதனையாக இருப்பினும் இறுதியில் பீட்டர் அந்த வாய்ப்பை நிராகரித்தார். “நான் சரியானதைச் செய்ய வேண்டும் என்று தேவன் விரும்புவதாக நம்புகிறேன், அவர் என் தேவையைச் சந்திப்பார் என்று நம்பினால் போதும்” என்று என்னிடம் பகிர்ந்தார்.

தாவீது சவுலை ஒரு குகையில் சந்தித்த செய்தி பீட்டருக்கு நினைவுக்கு வந்தது. தாவீதை கொல்ல துடித்த மனிதனைக் கொல்ல அவருக்குச் சரியான வாய்ப்பாக தோன்றியது, ஆனால் தாவீது மறுத்தார். “கர்த்தர் அபிஷேகம்பண்ணின என் ஆண்டவன்மேல் என் கையைப் போடும்படியான இப்படிப்பட்ட காரியத்தை நான் செய்யாதபடிக்கு கர்த்தர் என்னைக் காப்பாராக” (1சாமுவேல் 24:6) என்று காரணம் சொன்னார். சம்பவங்களைக் குறித்த தன் சொந்த கண்ணோட்டத்திற்கும், தேவனுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிந்து சரியானதைச் செய்வதற்கும் இடையேயான வித்தியாசத்தை தாவீது கவனமாகப் பகுத்தறிந்தார்.

சில சூழ்நிலைகளில் எப்போதும் “அடையாளங்களை” தேடுவதற்குப் பதிலாக, நமக்கு முன்னால் என்ன இருக்கிறது என்பதைப் பகுத்தறிவதற்கான ஞானம் மற்றும் வழிகாட்டுதலுக்காகத் தேவனையும் அவருடைய சத்தியத்தையும் கண்ணோக்குவோம். அவருடைய பார்வையில் சரியானதைச் செய்ய அவர் நமக்கு உதவுவார்.