1957 இல் வெளிவந்த பிரபல திரைப்படம் ஒன்றின் காட்சியில், நீதிபதி “ஒருவன் இறந்துவிட்டான். இன்னொருவனின் உயிருக்கு ஆபத்து” என்பார். சந்தேகத்திற்கிடமான அந்த வாலிபனுக்கு எதிராகச் சாட்சியங்கள் அதிகமாய் இருந்தன. ஆனால் விவாதங்களின் போது, ​​நடுவர் குழுவில் பிளவு உண்டானது. பன்னிரண்டு பேர் கொண்ட குழுவில், ஒருவர் மட்டும் “குற்றம் இல்லை” என்றார். விவாதம் சூடுபிடிக்க, அதில் சாட்சியத்தில் உள்ள முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டியதால் அந்த நீதிபதி கேலி செய்யப்படுகிறார். உணர்வுகள் மேலோங்க, நடுவர் குழுவின் தவறான மற்றும் பாரபட்சமான சொந்த போக்குகள் வெளிச்சத்திற்கு வருகின்றன. ஒவ்வொருவராக, நீதிபதிகள் தங்கள் வாக்குகளை “குற்றமற்றவன்” என்று மாற்றுகிறார்கள்.

இஸ்ரவேல் என்ற புதிய தேசத்திற்குத் தேவன் தம்முடைய கற்பனைகளை வழங்கியபோது, ​​அவர் நேர்மையான தைரியத்தை வலியுறுத்தினார். “தீமைசெய்ய திரளானபேர்களைப் பின்பற்றாதிருப்பாயாக; வழக்கிலே நியாயத்தைப் புரட்ட மிகுதியானவர்களின் பட்சத்தில் சாய்ந்து, உத்தரவு சொல்லாதிருப்பாயாக” (யாத்திராகமம் 23:2) என்றார் தேவன். சுவாரஸ்யமாக, “வியாச்சியத்திலே தரித்திரனுடைய முகத்தைப் பாராயாக.” (வ.3) என்றும் “எளியவனுடைய வியாச்சியத்தில் அவனுடைய நியாயத்தைப் புரட்டாயாக” (வ. 6) என்றும் நீதிமன்றம் செயல்பட வேண்டும். நீதியுள்ள நியாயாதிபதியான தேவன், நம்முடைய எல்லா நடவடிக்கைகளிலும் உத்தமத்தை விரும்புகிறார்.

இந்த திரைப்படத்தில்,”குற்றவாளி இல்லை” என்று வாக்களித்த இரண்டாவது நீதிபதி, முதலாவது நீதிபதியிடம், “பிறரின் கேலிக்கு எதிராகத் தனித்து நிற்பது எளிதல்ல” என்று கூறினார். ஆனாலும் அதுதான் தேவனுக்குத் தேவை. அந்த நீதிபதி உண்மையான ஆதாரங்களையும், விசாரணையில் தனிநபரின் மனிதாபிமானத்தையும் கண்டார். தேவனின் பரிசுத்த ஆவியின் மென்மையான வழிகாட்டுதலில், நாமும் தேவனின் சத்தியத்திற்காக நிற்கவும், திராணியற்றவர்களுக்காகப் பேசவும் முடியும்.