“என்னை ‘ரிங் மாஸ்டர்’ என்று அழைப்பார்கள். இந்த ஆண்டில் மட்டும் தொலைந்துபோன 167 மோதிரங்களை நான் கண்டுபிடித்திருக்கிறேன்.” 

நான் என்னுடைய மனைவி கேரியுடன் கடற்கரையில் நடந்துசென்றுகொண்டிருந்தபோது, தன் கையில் மெட்டல் டிடெக்டர் கருவியை வைத்துக்கொண்டு ஒரு வயதானவர் மணலை பரிசோதித்துக்கொண்டு இப்படியாய் பேசக்கேட்டோம். “சில மோதிரங்களில் அவர்களின் பெயர்கள் இடம்பெற்றிருக்கும்” என்று சொன்ன அவர், “அதை அதன் சொந்தக்காரரிடம் ஒப்படைக்கும்போது அவர்களின் முகங்களின் மகிழ்ச்சியை பார்க்க எனக்கு பிடிக்கும். கண்டெடுத்த மோதிரங்களை ஆன்லைனில் பதிவிட்டு, யாராகிலும் என்னை தொடர்புகொள்ளுகிறார்களா என்று பார்ப்பேன். பல ஆண்டுகளுக்கு முன்பாக தொலைந்துபோன மோதிரங்களையும் நான் கண்டுபிடித்திருக்கிறேன்” என்று சொன்னார். மெட்டல் டிடெக்டரை வைத்து தேடுவதை நானும் விரும்புவேன், ஆனால் அதை அடிக்கடி செய்வதில்லை என்று நான் அவரிடம் சொல்ல, “நீ தேடிப்போனால் தான் அதை கண்டுபிடிக்கமுடியும்” என்று பதிலளித்தார். 

லூக்கா 15ஆம் அதிகாரத்தில் தேடிக் கண்டுபிடிக்கும் ஒரு சம்பவத்தை நாம் பார்க்கமுடியும். தேவனை விட்டு தூரப்போன ஜனங்களை இயேசு இங்ஙனம் விமர்சிக்கிறார் (வச. 1-2). தொலைந்து போன ஆடு, வெள்ளிப்பணம், மற்றும் குமாரன் என்று மூன்று கதைகளை அங்கே சொல்லுகிறார். தொலைந்த ஆட்டைக் கண்டுபிடித்த அந்த மேய்ப்பன், “சந்தோஷத்தோடே அதைத் தன் தோள்களின் மேல் போட்டுக்கொண்டு, வீட்டுக்கு வந்து, சிநேகிதரையும் அயலகத்தாரையும் கூட வரவழைத்து… என்னோடுகூடச் சந்தோஷப்படுங்கள் என்பான்” (லூக்கா 15:5-6). அனைத்து கதைகளும் கிறிஸ்துவிலிருந்து தொலைந்துபோனவர்களைக் குறித்தது தான். கிறிஸ்துவை கண்டுபிடித்தவர்கள் மகிழ்ச்சியில் பூரிப்பாகின்றனர். 

“இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே” (19:10) இயேசு கிறிஸ்து வந்திருக்கிறார். அவருக்கு பிரியமான ஜனங்களை அவரிடத்தில் கொண்டுவருவதற்கு நமக்கு அழைப்பு விடுக்கிறார் (பார்க்க. மத்தேயு 28:9). மற்றவர்கள் தேவனிடத்தில் திரும்பும்போது ஏற்படும் மகிழ்ச்சி இன்னும் காத்திருக்கிறது. தேடிப்போகும் வரை நாம் அதை கண்டுபிடிப்பதில்லை.