போனி கிரே, அவள் சோகத்தில் இருந்த தருணத்தைக் குறித்து அவளுடைய சமீபத்திய ஆன்லைன் பதிவில் பகிர்ந்துகொண்டாள். “என்னுடைய வாழ்க்கையின் மிகவும் மகிழ்ச்சியான அத்தியாயத்தின்போது, எதிர்பாராத விதமாய் நான் பயத்தினாலும் மனச்சோர்வினாலும் பாதிக்கப்பட்டேன்” என்று பதிவிட்டிருந்தாள். கிரே, அவளுடைய பயத்தைப் போக்க பல வழிகளை கையாண்டாள். ஆனால் அந்த பிரச்சினையை தனியாளாய் கையாளுவது சாத்தியம் என்பதை சீக்கிரம் புரிந்துகொண்டாள். “என்னுடைய நம்பிக்கையை யாரும் கேள்வி கேட்பது எனக்கு பிடிக்காது. ஆகையினால், நான் அமைதியாய் இருந்து என்னுடைய மனச்சோர்வு நீங்கும்படி ஜெபித்தேன். ஆனால் தேவன் நம்மை கனவீனப்படுத்தவோ நம்முடைய வலிகளை மறைத்துக்கொள்வதையோ அனுமதிப்பதில்லை, மாறாக, அதை குணமாக்க விரும்புகிறார்.” தேவனுடைய பிரசன்னத்தில் கிரே சுகத்தைப் பெற்றாள். அவளை அச்சுறுத்திய அலைகளின் கோரப்பிடியிலிருந்து தேவன் நங்கூரமாய் செயல்பட்டு அவளை விடுவித்தார்.   

நாம் பெலவீனப்பட்டு சோர்வடையும்போது, நமக்காக தேவன் இருக்கிறார். அவர் நம்மை தாங்குவார். சங்கீதம் 118இல் தாவீது அவனுடைய எதிரிகளால் மேற்கொள்ளப்படக்கூடிய கட்டத்தில் தேவனை துதித்து, தன் மீட்பிற்காய் மன்றாடுகிறான். அவன் “உயரத்திலிருந்து அவர் கைநீட்டி, என்னைப் பிடித்து, ஜலப்பிரவாகத்திலிருக்கிற என்னைத் தூக்கிவிட்டார்” என்று அறிக்கையிடுகிறான் (வச. 16). மோதியடிக்கும் சமுத்திரத்தின் கொடூர அலைகளைப் போன்று மனச்சோர்வு சிலவேளைகளில் நம்மை ஆட்கொண்டாலும், நம்மை நேசிக்கும் தேவன் இறங்கி வந்து நமக்கு உதவிசெய்து, “விசாலமான” இடத்திற்கு (வச. 19) நம்மை பாதுகாப்பாய் கொண்டுசேர்ப்பார். வாழ்க்கையின் சவால்களை நாம் சந்திக்கும்போது நம்முடைய அடைக்கலமாகிய தேவனையே நோக்கிப் பார்ப்போம்.