2021 ஜூன் மாதம், மாலை நேரத்தில் ஒரு சமூகத்தில் சூறாவளி புயல் வீசியது. அது அங்கிருந்த ஒரு குடும்பத்தினரின் கொட்டகையை அழித்தது. அது 1800ஆம் ஆண்டிலிருந்து அவர்களின் குடும்ப சொத்தாக இருந்தால், அதன் அழிவு அவர்களுக்கு சோகத்தை அளித்தது. ஜானும் அவருடைய மனைவியும் அடுத்த நாள் காலை தேவாலயத்திற்குச் செல்லும் வழியில், காரில் சென்றுகொண்டிருந்தபோது, அவர்கள் அந்த சேதத்தைப் பார்த்து, எப்படி அவர்களுக்கு உதவ முன்வரலாம் என்று யோசித்தனர். ஏற்பட்டிருக்கிற அந்த சேதாரத்திலிருந்து முதலில் அவை சுத்தம்செய்யப்பட வேண்டும் என்பதை உணர்ந்தனர். உடனே தங்கள் காரை ஓர் ஓரமாய் நிறுத்திவிட்டு, உடை மாற்றிக்கொண்டு, புயல் காற்றின் மூலமாய் அந்த வீட்டில் ஏற்பட்ட சேதாராத்தை சுத்தம் செய்ய துவங்கினர். அந்த குடும்பத்தினருக்கு உதவிசெய்ததன் மூலம், அவர்களுடைய விசுவாசத்தை ஆக்கபூர்வமான விசுவாசமாய் மாற்றினர்.
“கிரியைகளில்லாத விசுவாசமும் செத்ததாயிருக்கிறது” (யாக்கோபு 2:26) என்று யாக்கோபு சொல்லுகிறார். அதற்கு ஆபிரகாமின் உதாரணத்தை காண்பிக்கிறார். அவர் எங்கு செல்கிறார் என்று தெரியாதபோது கீழ்ப்படிதலுடன் தேவனைப் பின்தொடர்ந்தார் (வச. 23; பார்க்க ஆதியாகமம் 12:1-4; 15:6; எபிரெயர் 11:8). எரிகோ பட்டணத்தை வேவு பார்க்க வந்த வேவுக்காரர்களை தன் வீட்டில் மறைத்து வைத்து, இஸ்ரவேல் தேவன் மீது தனக்கிருந்த விசுவாசத்தை வெளிப்படுத்திய ராகாபையும் யாக்கோபு உதாரணப்படுத்துகிறார் (யாக்கோபு 2:25; பார்க்க, யோசுவா 2; 6:17).
“ஒருவன் தனக்கு விசவாசமுண்டென்று சொல்லியும், கிரியைகளில்லாதவனானால் அவனுக்குப் பிரயோஜனமென்ன?” (யாக்கோபு 2:14). “விசுவாசமே வேர், நற்கிரியைகளே பலன்; இரண்டும் நம்மிடம் இருக்கும்படிக்கு நாம் பார்த்துக்கொள்ள வேண்டும்” என்று மேத்யூ ஹென்றி குறிப்பிடுகிறார். நம்முடைய நற்கிரியைகள் தேவனுக்கு தேவையில்லை; ஆனால் நம்முடைய விசுவாசம் நற்கிரியைகளின் மூலமாகவே நிரூபிக்கப்படுகிறது.
நற்கிரியைகள் நடப்பிப்பது நமக்கு ஏன் அவசியம்? தேவ அன்பினால் ஏவப்பட்டு நீங்கள் என்ன நற்கிரியை நடப்பிக்கலாம்?
அன்பான தேவனே, விசுவாசத்தோடும் அன்போடும் இன்று நான் உமக்காக சேவை செய்ய ஒப்படைக்கிறேன்.