1941 இல், இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சாக்ரடிக் கிளப் என்று ஒன்று நிறுவப்பட்டது. இது கிறிஸ்தவர்கள், நாத்திகர்கள் மற்றும் அஞ்ஞானவாதிகள் ஆகியோருக்கு இடையே விவாதத்தை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு தோற்றுவிக்கப்பட்டது.
ஒரு மதச்சார்பற்ற பல்கலைக்கழகத்தில் மார்க்கத்தைக் குறித்த விவாதம் புதியது அன்று. ஆனால் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், சாக்ரடீஸ் கிளப்பின் தலைவராக 15 ஆண்டுகள் இருந்தவர், சிறந்த கிறிஸ்தவ அறிஞர் சி. எஸ். லூயிஸ். கிறிஸ்துவின் மீதான நம்பிக்கையானது, கடும் எதிர்ப்புகளையும் சமாளிக்கக்கூடியது என்று அவர் நம்பினார். இயேசுவை நம்புவதற்கு சரியான பகுத்தறிவு ஆதாரம் இருப்பதை அவர் அறிந்திருந்தார்.
ஒரு விதத்தில், உபத்திரவத்தினால் சிதறிக் கிடக்கும் திருச்சபை விசுவாசிகளுக்கு பேதுருவின் ஆலோசனையை லூயிஸ் நடைமுறைப்படுத்தியிருக்கக்கூடும், “கர்த்தராகிய தேவனை உங்கள் இருதயங்களில் பரிசுத்தம்பண்ணுங்கள்; உங்களிலிருக்கிற நம்பிக்கையைக் குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவுசொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள்” (1 பேதுரு 3:15). பேதுரு இரண்டு முக்கிய குறிப்புகளை கூறுகிறார்: கிறிஸ்துவில் நம்பிக்கை வைப்பதற்கு நமக்கு நேர்த்தியான காரணங்கள் உள்ளன. மேலும் நமது நியாயத்தை “சாந்தத்தோடும் வணக்கத்தோடும்” முன்வைக்க வேண்டும்.
கிறிஸ்துவை நம்புவது என்பது மார்க்கத்திலிருந்து தப்பிக்கும் முயற்சியோ அல்லது சுய விருப்பமோ கிடையாது. நம்முடைய விசுவாசமானது, சரித்திரப்பூர்வமாகவும், இயேசுவின் உயிர்த்தெழுதலின் ஆதாரங்களினாலும், சிருஷ்டிகரைப் பிரதிபலிக்கும் சிருஷ்டிப்புகளினாலும் உறுதிசெய்யப்பட்டுள்ளது. நாம் தேவனுடைய ஞானத்தையும் அவருடைய ஆவியின் பெலத்தையும் சார்ந்துகொள்ளும்போது, நம்முடைய மேன்மையான விசுவாசத்தை நம்புவதற்கான காரணங்களை நாம் அறியக்கூடும்.
எவ்வாறாக உங்களின் விசுவாசத்தை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வீர்கள்? அற்புதமான நிகழ்வு என்ற போதிலும், இயேசுவின் உயிர்த்தெழுதலை நிரூபிக்க நீங்கள் என்ன ஆதாரத்தை முன்வைப்பீர்கள்?
சர்வவல்லமையுள்ள ஆண்டவரே, உம் மீதான என்னுடைய விசுவாசம் உறுதிபட, நீர் கொடுத்த ஏராளமான ஆதாரங்களுக்காய் உமக்கு நன்றி.