எனது பெரிய மாமாவின் பழைய பண்ணை வீட்டின் வாசலில் தொங்கியபடி, கடினமான வார்ப்பிரும்பு வளையம் வலுவாக நின்றது. நூறு அடி தாண்டி மற்றொரு வளையம், பால் பண்ணையில் பொருத்தப்பட்டிருந்தது. பனிப்புயல் சம்பவிக்கும் தருணங்களில் என் மாமா அந்த இரண்டு வளையங்களையும் ஓர் கயிற்றால் இணைப்பார். அதின் மூலம் அவர் வீட்டிற்கும் கொட்டகைக்கும் இடையே உள்ள பாதையைக் கண்டுபிடிக்க வசதியாயிருக்கும். பனிபடர்ந்திருக்கும் தருணங்களில், அந்த அடையாளம் அவருக்கு தெளிவாய் வழிகாட்டியது. 

என் மாமாவின் இந்த அடையாளம், தேவனுடைய ஞானம் எவ்வாறு தன்னை வாழ்க்கையில் வழிநடத்துகிறது என்பதையும் பாவத்திலிருந்து தன்னை எவ்வாறு பாதுகாக்கிறது என்பதையும் பிரதிபலிக்கும் தாவீதின் பாடல் வரிகளை எனக்கு நினைப்பூட்டியது. “கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் சுத்தமும், என்றைக்கும் நிலைக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய நியாயங்கள் உண்மையும், அவைகள் அனைத்தும் நீதியுமாயிருக்கிறது. அவைகள் பொன்னிலும், மிகுந்த பசும்பொன்னிலும் விரும்பப்படத்தக்கதும், தேனிலும் தேன்கூட்டிலிருந்து ஒழுகும் தெளிதேனிலும் மதுரமுள்ளதுமாய் இருக்கிறது. அன்றியும் அவைகளால் உமது அடியேன் எச்சரிக்கப்படுகிறேன்; அவைகளைக் கைக்கொள்ளுகிறதினால் மிகுந்த பலன் உண்டு” (சங்கீதம் 19:9-11).

கர்த்தருடைய ஆவியானவர் நம் இருதயங்களில் கிரியை செய்து சத்தியத்தை உறுதியாய் பற்றிக்கொள்ளச் செய்வதால், நாம் நம்முடைய பாதையை தவறவிடாமலும், தேவனை கனப்படுத்தும் தீர்மானங்களையும் எடுக்க விழைகிறோம். வேதம் தேவனிடமிருந்து விலகிச் செல்லாமல் இருக்க நம்மை எச்சரிக்கிறது. மேலும் தேவனிடம் திரும்புவதற்கான பாதையைக் காட்டுகிறது. இது நம்முடைய இரட்சகரின் விலைமதிப்பற்ற அன்பையும் அவரை விசுவாசிக்கிறவர்களுக்கு காத்திருக்கும் ஆசீர்வாதங்களையும் நமக்கு அறிவிக்கிறது. வேதாகமம் ஒரு உயிர்நாடி! அதை எப்போதும் பற்றிக்கொள்ள தேவன் நமக்கு உதவி செய்வாராக.