கோடை வெயில் உதயமாகிக்கொண்டிருந்தது. என் பக்கத்து வீட்டு நபர் புன்சிரிப்போடு எதையோ காண்பித்து, என்னைப் பார்க்க வருமாறு கிசுகிசுத்தார். “என்ன?” நான் ஆர்வத்துடன் கேட்டேன். அவர் முன் வராந்தாவில் ஒரு காற்றாடி ஒலிப்பதைக் காட்டினார், அங்கிருந்த உலோகப்படியின் மேல் சிறிதளவு வைக்கோல் இருந்தது. “பாடும் குருவிக் கூடு,” என்று அவர் கூறினாள். “குஞ்சுகளை பார்த்தாயா?” அவற்றின் கூர்மையான அலகுகள் மேல்நோக்கி இருந்தது. “அவை தம்முடைய அம்மாவுக்காக காத்திருக்கின்றன.” நாங்கள் அவற்றைக் கண்டு ஆச்சரியப்பட்டோம். அதைப் படம்பிடிப்பதற்காக அலைப்பேசியை உயர்த்தினேன். “ரொம்ப பக்கத்துல போகாதீங்க” என்று என்னை எச்சரித்தார். “தம்முடைய அம்மாவைப் பயமுறுத்த விரும்பவில்லை.” பாடும் பறவைகளின் குடும்பத்தை தூரத்திலிருந்தே நாங்கள் பராமரித்தோம்.
ஆனால் சில நாட்களிலேயே, அவை எப்படி வந்ததோ, அப்படியே அந்த தாய் பறவையும் அவற்றின் குஞ்சுகளும் அந்த இடத்தை விட்டுப் பறந்து போயின. யார் அவற்றைக் குறித்து யோசிக்கப்போகிறார்கள்?
வேதாகமம் மகிமையான ஆனால் நமக்கு பரிச்சயமான பதிலை கொடுக்கிறது. அது வாக்குபண்ணியவற்றை நாம் மறக்கிற அளவிற்கு நமக்கு பரிச்சயமான பதில்: “உங்கள் ஜீவனுக்காக… கவலைப்படாதிருங்கள்” (மத்தேயு 6:25). எளிமையான, அழகான ஆலோசனை. அவர், “ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்”(வச.26) என்று சொல்லுகிறார்.
சிறிய பறவையை அவர் எந்த அளவிற்குப் பொறுப்பேற்கிறாரோ, அவற்றை விட நம்முடைய ஆவி, ஆத்துமா, சரீரம் ஆகியவற்றைப் போஷித்துப் பராமரிக்கிறார். இது மகிமையான வாக்குறுதி. எந்த கவலையும் இல்லாமல், அனுதினமும் நாம் அவரை நோக்கிப் பார்த்து, சிறகடித்து எழும்புவோம்.
கவலைக்கும் திட்டமிடுதலுக்கும் இருக்கும் வேறுபாடு என்ன? உங்கள் வாழ்க்கையைப் பார்க்கும்போது, தேவன் உங்களை அனுதினமும் எவ்வாறு போஷிக்கிறார்?
அன்பான தேவனே, என் வாழ்க்கையின் தேவைகளை நீர் பொறுப்பெடுக்கிறீர் என்பதை அறிவது என் மேன்மை. ஒவ்வொரு நாளும் உம்முடைய வாக்குத்தத்தத்தின் மேல் நம்பிக்கை வைத்து உம்மை கனப்படுத்த எனக்கு உதவிசெய்யும்.