பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நான்கு பிரபலங்களை நடுவர்களாகக் கொண்ட குழு, அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஒரே உருவ அமைப்பு கொண்ட மூவரில் யார் நிஜமான நபர் என்றறிய பல கேள்விகளை கேட்பர். அதில் இருவர் பொய்யான நபர்கள். உண்மையான நபரைக் கண்டறிவது குழுவின் பொறுப்பு. நடுவர்கள் பல சாதுரியமான கேள்விகளைக் கேட்டாலும், இன்னார் யாரென்று கண்டுபிடிக்க நடுவர்கள் சிரமப்படுவர். போலியான நபர்கள், உண்மையைப் பொழுதுபோக்காகக் குழப்புவதே இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி.

கள்ள உபதேசிகளைக் குறித்து, யார்? இன்னார்? என்னும் கேள்வி ஊடகங்களுக்குப் பொருந்தாத ஒன்று. என்றாலும், அதேபோன்று சவாலாய் அமையக்கூடிய ஒரு முக்கிய கேள்வியாயிருக்கிறது. கள்ளத் தீர்க்கதரிசிகள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு வரும் பட்சிக்கிற ஓநாய்கள் என்பதனால் “விழித்திருங்கள்”என்று இயேசு எச்சரிக்கிறார் (மத்தேயு 7:15). இங்கே நிறையக் கேள்விகளைக் கேட்பதல்ல காரியம்; நல்ல கண்களைக் கொண்டிருப்பதே காரியம். அவர்களுடைய கனிகளைப் பாருங்கள், அதனாலே அவர்களைக் கண்டுபிடிக்க முடியும் (வச.16-20).

நல்ல கனிகளையும் கெட்ட கனிகளையும் காண்பதற்கு வேதம் நமக்கு உதவிசெய்கிறது. “அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்” போன்றவை நல்ல கனிகள் (கலாத்தியர் 5:22-23). ஓநாய்கள் வஞ்சிக்கக்கூடியவை என்பதினால் நாம் அதிக கவனமாயிருக்க வேண்டும். ஆனால் ஆவியினால் நிரப்பப்பட்ட விசுவாசிகளாகிய நாம், நல்மேய்ப்பரும், “கிருபையினாலும் சத்தியத்தினாலும்”நிறைந்தவருமாகிய இயேசுவுக்கு ஊழியம் செய்கிறோம் (யோவான் 1:14).