இந்திய வரலாற்றில் பெண்களுக்கு அநேக வன்கொடுமைகள் இழைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த பண்டித ரமாபாய் வெட்கப்பட்டு ஒளிந்துகொள்ளாமல், துணிச்சலாய் முன்வந்து, ஆரிய மகளிர் சமாஜத்தை நிறுவினார். பெண்களுக்கு விதிக்கப்பட்டிருந்த சமுதாயத் தடைகள் மத்தியிலும் பெண் கல்விக்காகவும், மகளிர் மேம்பாட்டிற்காகவும் பாடுபட்டார். அவர் ஒருமுறை, “தேவனோடு முற்றிலும் அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கையில் பயமோ, இழப்போ, வேதனையோ இல்லை” என்று கூறியிருக்கிறார்.
தன் ஜனத்தின் மீது நடத்தப்படவிருந்த இனப்படுகொலைக்கு விரோதமாக பேசுவதற்கு பெர்சிய தேசத்தின் அரசியான எஸ்தர் தயங்கினாள். அவள் பேசுவதற்கு தயங்கினால் அவளும் அவளுடைய குடும்பமும் அழிந்துபோகும் என அவளுடைய மாமன் அவளை எச்சரித்தான் (எஸ்தர் 4:13-14). இது துணிச்சலாய் செயல்படவேண்டிய தருணம் என்று எண்ணி, “நீ இப்படிப்பட்ட காலத்துக்கு உதவியாயிருக்கும்படி உனக்கு ராஜமேன்மை கிடைத்திருக்கலாமே, யாருக்குத் தெரியும்” (வச. 14) என்று அறிவித்தான். அநீதிக்கு விரோதமாய் குரல் கொடுப்பதா? நமக்கு பிரச்சனை கொடுக்கிறவர்களை மன்னிப்பதா? இதுபோன்ற சவாலான தருணங்களில், தேவன் நம்மை விட்டு விலகுவதுமில்லை, கைவிடுவதுமில்லை என்று வேதம் நமக்கு உறுதியளிக்கிறது (எபி. 13:5-6). நம்மை மிரட்டும் தருணங்களில் நாம் தேவனின் உதவியை நாடுவோமாகில், “பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியை” கொடுத்து நம்மை முடிவுபரியந்தம் நடத்த தேவன் போதுமானவராயிருக்கிறார் (2 தீமோத்தேயு 1:7).
நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறார்? அவருடைய அழைப்புக்கு செவிகொடுப்பதற்கு ஏற்கனவே உங்களிடம் கொடுக்கப்பட்ட உபகரணங்கள் யாவை?
பரலோகப் பிதாவே, விசேஷமான அழைப்பை என்னுடைய வாழ்க்கையில் வைத்ததற்காய் உமக்கு நன்றி. விசுவாசத்தில் அடியெடுத்து வைக்க எனக்கு தடையாயிருக்கிற பயத்தை மேற்கொள்வதற்கு எனக்கு உதவிசெய்யும்.