பூனேவில் உள்ள ஒரு தேவாலயத்தில் தன்னார்வத் தொண்டு செய்யும் ஒரு அமெரிக்க மிஷனரியை மற்ற தன்னார்வலர்கள் இரவு உணவிற்கு அழைத்தனர். அவர்கள் அருகில் இருந்த ஒரு உணவகத்திற்குச் சென்று, அவர்கள் ஏழு பேர் இருக்கும்போது ஐந்து உணவுகளை ஆர்டர் செய்தனர்.

“எவ்வளவு தவறான எண்ணம்,” மிஷனரி நினைத்தார். ஆனால் உணவுகள் வந்தவுடன் உணவு சமமாகப் பகிர்ந்து கொள்ளப்பட்டது. மேலும் மிஷனரிக்கு ஐந்து விதமான சுவையான உணவுகளை ருசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் எந்த உணவையும் வீணாக்கவில்லை. இது ஒரு தாழ்மையான பாடமாக இருந்தது. அவள் ஊழியம் செய்ய ஒப்புக்கொண்ட கலாச்சாரம் அவளுக்கு இன்னும் புரியவில்லை. தனித்துவத்தை வலியுறுத்தும் அமெரிக்க வாழ்க்கை முறை போலல்ல, இந்தியாவில் வாழ்க்கைமுறையானது, சமூகத்தில் வாழ்வது என்பதை அவள் கற்றுக்கொண்டாள். ஒருவரின் உணவையும் பொருட்களையும் பகிர்ந்து கொள்வதன் மூலம்  மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்கிறார்கள். அவளுடைய வழி அதை விட சிறந்தது அல்ல; சற்று வித்தியாசமாக இருந்தது. “என்னைப் பற்றி நான் அறிந்துகொள்ள இது உதவியாக இருந்தது” என்று அவள் ஒப்புக்கொண்டாள். அவளுடைய சொந்த பாரபட்சங்களை அடையாளம் கண்டு, மற்றவர்களுடன் பகிர்ந்து வாழ்வது, அவர்களுக்கு ஊழியம் செய்வதற்கு அவளுக்கு மிகுந்த உதவியாயிருந்தது.

பேதுரு, மற்றவர்களை பணிவுடன் நடத்தவேண்டிய இந்த பாடத்தை திருச்சபைத் தலைவர்களுக்கு கற்பித்தார். “சுதந்தரத்தை இறுமாப்பாய் ஆளுகிறவர்களாக அல்ல” (1 பேதுரு 5:3) என்று மூப்பர்களுக்கு அறிவுறுத்துகிறார். இளைஞர்களுக்கு? “உங்கள் பெரியவர்களுக்கு அடிபணியுங்கள்; நீங்கள் அனைவரும் மனத்தாழ்மையை அணிந்து கொள்ளுங்கள்” (வச. 5) என்று ஆலோசனை கூறுகிறார். மேலும் “பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்” என்று வலியுறுத்துகிறார். “ஆகையால், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்” (வச. 6). இன்று அவருக்கும் மற்றவர்களுக்கும் முன்பாக தாழ்மையுடன் வாழ அவர் நமக்கு உதவுவாராக.