எனது ஸ்பெஷல் ஆர்டர் மேஜைக்கான துண்டுகளை பெட்டியிலிருந்து எடுத்து என் முன் வைத்த பிறகு, ஏதோ சரியாக இல்லை என்பதை நான் கவனித்தேன். மேஜை அனைத்து அம்சங்களும் இருந்தது, ஆனால் அதின் கால்களில் ஒன்றைக் காணவில்லை. ஒரு கால் இல்லாமல், என்னால் மேஜையை வடிவமைக்க முடியவில்லை. அது பயனற்றதாகிவிட்டது.
ஒரு முக்கிய பகுதியைக் காணவில்லையெனில் உபயோகமாக இல்லாமல் இருப்பது மேசை மட்டுமல்ல. 1 கொரிந்தியர் புத்தகத்தில், பவுல் தனது வாசகர்களுக்கு ஒரு அத்தியாவசியமான முக்கியப் பகுதி அவர்களிடம் காணவில்லை என்பதை நினைவூட்டினார். விசுவாசிகள் பல ஆவிக்குரிய வரங்களைக் கொண்டிருந்தனர், ஆனால் அவர்களிடத்தில் அன்பு இல்லை.
தனது கருத்தை வலியுறுத்த மிகைப்படுத்தப்பட்ட மொழியைப் பயன்படுத்தி, பவுல் எழுதினார். அவருடைய விசுவாசிகளுக்கு எல்லா அறிவும் இருந்தாலும், அவர்கள் தங்களுக்குச் சொந்தமான ஒவ்வொரு பொருளையும் கொடுத்தாலும், அவர்கள் விருப்பத்துடன் கஷ்டங்களை அனுபவித்தாலும், அன்பின் அடிப்படையின்றி, அவர்களின் செயல்கள் அனைத்திற்கும் எந்த வித பிரயோஜனமும் இல்லை (1 கொரிந்தியர் 13:1-3). எப்போதும் பாதுகாக்கும், நம்பிக்கை மற்றும் விடாமுயற்சியுடன் இருக்கும் அன்பின் அழகை விவரிக்கும் வகையில், அவர்களின் செயல்களில் அன்பை எப்போதும் பிரதிபலிக்கவேண்டுமென்று பவுல் அவர்களை ஊக்குவித்தார் (வச. 4-7).
நாம் நம்முடைய ஆவிக்குரிய வரங்களைப் பயன்படுத்தும்போது, ஒருவேளை நம்முடைய விசுவாச சமூகங்களில் கற்பிக்க, ஊக்குவிக்க அல்லது சேவை செய்ய, அன்பு பிரதானமானது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இல்லையெனில், இது ஒரு கால் இல்லாத மேஜை போன்றது. அது வடிவமைக்கப்பட்ட உண்மையான நோக்கத்தை அடைய முடியாது.
அன்பு ஒரு தொலைந்த பொருளாக இருப்பதை நீங்கள் எப்போது அனுபவித்தீர்கள்? அன்பு பிரதானமாக்கப்பட்ட ஒரு உதாரணம் என்ன?
பரலோகப் பிதாவே, நீர் எல்லாவற்றையும் அன்புடன் செய்வது என்னை ஆச்சரியப்படுத்துகிறது. உம்மைப் போல நேசிக்க எனக்கு உதவிசெய்யும்.