மிருகக்காட்சிசாலைக்கு ஒரு பயணத்தின் போது, கரடியின் (மரங்களில் வாழும் ஒரு மெதுவாக நகரும் வெப்பமண்டல அமெரிக்க பாலூட்டி) அருகில் ஓய்வெடுக்க நிறுத்தினேன். அந்த உயிரினம் தலைகீழாக தொங்கியது. அது முற்றிலும் அமைதியாக இருப்பது போல் இருந்தது. நான் பெருமூச்சு விட்டேன். எனது உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக, நான் அமைதியாய் இருந்தேன். எதையாவது நான் செய்ய வேண்டும் என்று தீவிரமாக விரும்பினேன். என்னுடைய இயலாமையை எண்ணி வேதனையடைந்த நான், நான் மிகவும் பலவீனமானவன் என்கிற எண்ணத்தை நிறுத்த ஏங்கினேன். ஆனால் கரடியைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது, அது ஒரு கையை நீட்டி, அருகிலுள்ள கிளையைப் பிடித்து, அதில் மீண்டும் அசையாமல் நின்றிருப்பதை நான் கவனித்தேன். அசையாமல் இருப்பதற்கு ஒரு வலிமை தேவை. அங்கேயே நான் நின்றிருப்பதற்கோ அல்லது மெல்லமாய் நகர்வதற்கோ ஒரு அபார வலிமை தேவை. என் வாழ்க்கையின் ஒவ்வொரு இக்கட்டான தருணத்திலும் தேவனை நம்புவதற்கு, எனக்கு அமானுஷ்ய சக்தி தேவைப்படுகிறது.
சங்கீதம் 46 இல், “தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர்” (வச. 1) என்று சங்கீதக்காரன் எழுதுகிறான். நம்மைச் சுற்றி என்ன நடந்தாலும், “சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார்” (வச. 7). சங்கீதக்காரன், இந்த உண்மையை உறுதியுடன் மீண்டும் கூறுகிறார் (வச. 11).
அசையாமல் நின்றிருக்கும் கரடியைப் போலவே, நமது அன்றாட சாகசங்களுக்கு மெதுவான நடைகள் மற்றும் நீடிய பொருமையும் சாத்தியமற்றது போல் தோன்றும். நாம் தேவனின் மாறாத தன்மையை நம்பியிருக்கும் போது, அவர் நமக்கு எது சரியென்று தீர்மானிக்கும் அவருடைய பலத்தை சார்ந்து இருக்க முடியும்.
நாம் துன்பங்களைத் தொடர்ந்து போராடினாலும் அல்லது காத்திருப்புடன் போராடினாலும், தேவன் உண்மையுள்ளவராய் இருக்கிறார். நாம் பெலனுள்ளவர்களாய் உணராவிட்டாலும், அவர் நம் நம்பிக்கையின் தசைகளை வளைக்க உதவுவார்.
அமைதியான ஒரு பருவத்தில் தேவனின் வல்லமை உங்களை எவ்வாறு மேம்படுத்துகிறது என்பதை நீங்கள் எப்படி அனுபவித்தீர்கள்? நீங்கள் பெலமுள்ளவர்களாய் உணராதபோதும், அவருடைய மாறாத தன்மையின் மீது நம்பிக்கை வைக்கும்போது, அது எவ்விதத்தில் நம்மை தொடர்ந்து முன்னேர உதவும்?
சர்வ வல்லமையுள்ள தேவனே, உம்மை என் பெலனாக நம்பி, என் நம்பிக்கையின் தசைகளை வளைக்க எனக்கு வாய்ப்புகளை அளித்ததற்கு நன்றி.