நண்பர்களான மெலனி மற்றும் ட்ரெவோர், இருவரும் சேர்ந்து மைல் கணக்கான மலைப் பாதைகளில் பயணம் செய்துள்ளனர். இருப்பினும், இருவராலும் தனித்தனியாக அவ்வாறு செய்ய முடியாது. ஸ்பைனா பிஃபிடா என்னும் குறைபாடுடன் பிறந்த மெலனி சக்கர நாற்காலியைப் பயன்படுத்துகிறார். ட்ரெவோர், கிளாகோமா என்னும் வியாதியினால் தனது கண் பார்வையை இழந்தார். கொலராடோ வனப்பகுதியை அனுபவிப்பதற்கு தாங்கள் ஒருவருக்கு ஒருவர் சரியான துணை என்பதை இருவரும் உணர்ந்தனர். அவர்கள் பாதைகளில் நடக்கும்போது, ட்ரெவர் மெலனியை முதுகில் சுமந்து செல்கிறார்;. அவளோ, அவளின் வார்த்தைகளின் மூலம் அவனுக்கு வழிகாட்டுகிறாள். அவர்கள் தங்களை ஒரு “கனவு அணி” என்று சொல்லிக்கொள்கிறார்கள்.
கிறிஸ்துவின் சரீரமான இயேசுவை விசுவாசிப்பவர்களை, இதே போன்ற “கனவு அணி” என்று பவுல் விவரிக்கிறார். பவுல், ரோம விசுவாசிகள் தங்களின் தனிப்பட்ட தாலந்துகள் எவ்வாறு அந்த குழுவிற்கு உபயோகமாய் இருக்கிறது என்று கண்டுபிடிக்க வலியுறுத்திகிறார். நமது உடல் பல உறுப்புகளால் ஆனது. வெவ்வேறு செயல்பாடுகளுடன் நாம் “ஒரு ஆவிக்குரிய சரீரத்தை உருவாக்குகிறோம்.” நம்முடைய வரங்கள், சபையின் சேவைக்காய் பயன்படவேண்டும் (ரோமர் 12:5). கொடுப்பது, ஊக்குவித்தல், கற்பித்தல் அல்லது வேறு எந்த ஒரு ஆவிக்குரிய வரங்களாக இருந்தாலும், அவைகளை அனைவருக்கும் சொந்தமானதாகக் கருதுமாறு பவுல் அறிவுறுத்துகிறார் (வச. 5-8).
மெலனி மற்றும் ட்ரெவோர், ஆகிய இருவரும் தங்களின் இயலாமையில் கவனம் செலுத்துவதில்லை. மற்றவருடன் ஒப்பிட்டு, தங்களிடம் இருப்பதைக் குறித்து அவர்கள் மேன்மைப்பாராட்டவும் இல்லை. மாறாக, அவர்கள் மகிழ்ச்சியுடன் தங்களால் இயன்ற சேவையை ஒருவருக்கொருவர் கொடுத்து, இருவரின் ஒத்துழைப்பால் எவ்வளவு சிறப்பாக இருக்கிறார்கள் என்பதை உணர்ந்துகொள்கிறார்கள். நம்முடைய தாலந்துகளையும் மற்றவர்களுடன் இணைத்து, கிறிஸ்துவின் நாம மகிமைக்காய் பயன்படுத்துவோம்.
தேவன் உங்களுக்கு என்ன வரங்களையும் திறமைகளையும் கொடுத்துள்ளார்? உங்களைச் சுற்றியுள்ளவர்களுடன் அவற்றை எவ்வாறு பகிர்ந்து கொள்வது?
தேவனே, நீர் எனக்கு காண்பித்த பாதைகளுக்காய் நன்றி. கிறிஸ்துவின் சரீரத்திற்கு நன்மை செய்ய எனது வரங்களையும் திறமைகளையும் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை தயவாய் எனக்குக் காண்பியும்.