தேவனின் நகர்வுகள்
நான் வார்த்தை புதிர் விளையாட்டை அதிகம் விரும்புவேன். ஒரு குறிப்பிட்ட விளையாட்டிற்கு பிறகு என்னுடைய அந்த திரும்புமுனையான நகர்வுக்கு என்னுடைய நண்பர்கள் “கடாரா” என்ற என்னுடைய பெயரை வைத்து அழைக்க ஆரம்பித்தனர். அந்த விளையாட்டில் அனைவரும் விளையாடி முடித்தவுடன், மீதமிருந்த எழுத்துக்களை நான் ஒன்று சேர்த்து, ஆட்டம் முடிந்துவிட்டது என்று அர்த்தம் கொள்ளும் ஏழு எழுத்து வார்த்தையை உருவாக்கி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினேன். அதினிமித்தம் நான் ஐம்பது போனஸ் புள்ளிகளைப் பெற்றேன். மற்ற போட்டியாளர்களிடம் மீதமிருந்த அனைத்துப் புள்ளிகளையும் பெற்றேன். ஆட்டத்தின் கடைசி இடத்திலிருந்த நான் முதல் இடத்திற்கு நகர்ந்தேன். இப்போது நாங்கள் விளையாடும் போதெல்லாம் ஆட்டத்தில் யாராவது பின்தங்கியிருந்தால், மீண்டும் ஒரு “கடாரா” நிகழக்கூடும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உதித்திருக்கிறது.
கடந்த காலத்தில் நடந்தவற்றை நினைவுகூருவது நம் ஆவியை புத்துணர்வு அடையச் செய்து நம் நம்பிக்கையை கட்டுகிறது. இஸ்ரவேலர்கள் பஸ்காவைக் கொண்டாடியபோது அதைத்தான் செய்தார்கள். இஸ்ரவேலர்கள் எகிப்தில் பார்வோனால் ஒடுக்கப்பட்டபோது தேவன் அவர்களுக்கு என்ன செய்தார் என்பதை பஸ்கா நினைவுபடுத்துகிறது (யாத்திராகமம் 1:6-14). அவர்கள் தேவனிடம் கூக்குரலிட்டபோது, தேவன் தன்னுடைய ஜனத்தை மகத்துவமான வழியில் விடுவித்தார். அவர்கள் வீடுகளின் நிலைக்கால்களில் இரத்தத்தை தெளிக்குமாறும், அதினிமித்தம் சங்கார தூதன் அவ்வழியாய் கடந்துபோகும்போது, அவர்களின் தலைச்சன் பிள்ளைகள் உயிரோடே காக்கப்படுவார்கள் என்றும் அவர்களுக்கு அறிவித்திருந்தார் (12:12-13). அதின்படி அவர்கள் உயிரோடே காக்கப்பட்டனர்.
பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் நம்மை மீட்டெடுத்த சிலுவை தியாகத்தின் நினைவுகூருதலாய் கர்த்தருடைய பந்தியை ஆசரிக்கிறோம் (1 கொரிந்தியர் 11:23-26). தேவன் நமக்கு செய்த நன்மைகளை நினைவுகூருவதென்பது, நமக்கு இன்றும் நம்பிக்கையளிக்கக்கூடியதாயிருக்கிறது.
வீட்டின் விசுவாசப் பேச்சுகள்
“வீடு போன்ற சிறந்த இடம் இல்லை” என்ற வரிகள், தி விஸார்ட் ஆஃப் ஓஸ் (The Wizard of Oz) என்ற அனைத்து கதைகளையும் சொல்லும் கருவியில், டோரதி பேசிய இந்த வரிகள் மறக்கமுடியாது. இது “கதாநாயகனின் பயணம்” என்று அழைக்கப்படுகிறது. அதாவது, ஒரு அசாதாரண சாகசம் முன்நிறுத்தப்படும்போது, ஒரு சாதாரண மனிதன் சாதாரண வாழ்க்கையை வாழ்கிறான். அதில் இடம்பெறும் கதாப்பாத்திரம் வீட்டை விட்டு வெளியேறி தன்னுடைய பயணத்தில் பல சோதனைகளையும், வழிகாட்டிகளையும் எதிரிகளையும் சந்திக்கிறது. அவர்களின் திறமையை அவர்கள் நேர்த்தியாய் நிரூபித்தால், தாங்கள் கற்றுக்கொண்ட கதைகள் மற்றும் அதின் ஒழுக்கநெறி பாடங்களோடு அவர்கள் வீடு திரும்பமுடியும். இதில் கடைசிப் பகுதி மிகவும் முக்கியமானது.
பிசாசு பிடித்த மனிதனின் கதை இந்த கதாநாயகனின் பயணத்திற்கு நெருக்கமாக அமைகிறது. அதின் கடைசிக் காட்சியில், பிசாசின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட அந்த மனிதன் இயேசுவுடன் வருவதற்கு தன்னை அனுமதிக்குமாறு கெஞ்சினான் என்பது சுவாரஸ்யமானது (மாற்கு 5:18). ஆயினும் இயேசு அவனிடம் “உன் சொந்த மக்களிடம் வீட்டிற்கு போ" (வச. 19) என்று கூறுகிறார். இந்த நபரின் பயணத்தில் ஏற்பட்ட இந்த சுவாரஸ்யமான அனுபவத்தை, வீடு திரும்பி தன்னுடைய மக்களிடம் அவற்றை அறிவிக்கவேண்டியது அவசியமாயிருந்தது.
தேவன் நம் ஒவ்வொருவரையும் வெவ்வேறு வழிகளில் வெவ்வேறு சூழ்நிலைகளினின்று அழைக்கிறார். ஆனால் நம்மில் சிலருக்கு, நம் நம்பிக்கை பயணத்தில் வீட்டிற்குச் சென்று, நம்மை நன்கு அறிந்தவர்களிடம் நம் கதையைச் சொல்வது மிகவும் முக்கியமானது. “வீடு போன்ற சிறந்த இடம் இல்லை" என்பதுதான் நம்மில் சிலருக்குக் கொடுக்கப்பட்ட அழைப்பு.
போதிய நேரம்
எனது நண்பரின் புத்தக அலமாரியில், லியோ டால்ஸ்டாயின் “வார் அண்ட் பீஸ்” (War and Peace) புத்தகத்தின் பெரிய தொகுப்பை நான் பார்த்தபோது, “நான் அதை இன்னும் முழுவதுமாய் படித்து முடிக்கவில்லை” என்று ஒப்புக்கொண்டேன். “நான் என் ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வுபெற்றபோது, “இப்போது நீங்கள் இறுதியாக அதைப் படிக்க நேரம் கிடைக்கும்” என்று சொல்லி என் நண்பர் ஒருவர் அப்புத்தகங்களை எனக்கு பரிசாகக் கொடுத்தார்” என்று மார்டி கூறினார்.
பிரசங்கி 3ஆம் அதிகாரத்தின் முதல் எட்டு வசனங்கள், வாழ்க்கையின் முக்கியமான சில உணர்வுகளின் செயல்பாடுகளை தாளத்தோடு எடுத்துரைக்கிறது. வாழ்க்கையின் எந்த கட்டத்தில் நாம் இருந்தாலும், நாம் செய்ய விரும்பும் அனைத்தையும் செய்ய நேரத்தைக் கண்டுபிடிப்பது பெரும்பாலும் கடினம். நமது நேரத்தை நிர்வகிப்பதைப் பற்றிய ஞானமான முடிவுகளை எடுக்க, ஒரு திட்டத்தை ஏற்படுத்திக்கொள்வது உதவியாக இருக்கும் (சங்கீதம் 90:12).
ஒவ்வொரு நாளும் தேவனுடன் நாம் நேரம் செலவிடுவது நமது ஆவிக்குரிய வாழ்க்கைக்கு ஆரோக்கியமானது. ஆக்கப்பூர்வமான வேலையைச் செய்வது நமது ஆவிக்கு நல்லது (பிரசங்கி 3:13). நமக்கான தேவனின் நோக்கத்தை நிறைவேற்ற தேவனைச் சேவிப்பதும் மற்றவர்களுக்கு உதவுவதும் அவசியம் (எபேசியர் 2:10). ஓய்வெடுப்பது என்பது வீண் அல்ல; அது நமது உடலுக்கும் ஆவிக்கும் புத்துணர்ச்சி அளிக்கிறது.
நிச்சயமாக, நம்மில் அநேகருக்கு முக்கியமாக தோன்றும் காரியங்களில் நேரத்தை செலவிடுவது எளிதாக இருக்கும். ஆனால் பிரசங்கி 3:11, தேவன் நம் இருதயங்களில் “நித்தியத்தை” வைத்திருக்கிறார் என்று கூறுகிறது. நித்தியமான காரியங்களுக்கு முன்னுரிமை கொடுக்க நினைவூட்டுகிறது. அது தேவனுடைய நித்தியத்தின் பார்வையை துவக்கமுதல் இறுதிவரை நம் கண்களுக்கு முன்பாக கொண்டு நிறுத்துகிறது.
பகுத்தறிவை நிராகரித்தல்
ஒரு போக்குவரத்து காவல் அதிகாரி ஒரு பெண் வாகன ஓட்டியிடம் அவளை ஏன் நிறுத்தினார் என்று தெரியுமா என்று கேட்டார். “தெரியாது” என்று அவள் திகைப்புடன் பதிலளித்தாள். “நீங்கள் வாகனம் ஓட்டிக்கொண்டே மொபைல் போனில் குறுஞ்செய்தி அனுப்புகிறீர்கள்” என்று குற்றஞ்சாட்டினார். “இல்லை இல்லை!” என்று அவள் நிராகரித்து, தன்னுடைய மொபைல் போனை எடுத்துக் காண்பித்து, நான் குறுஞ்செய்தி அனுப்பவில்லை, மின்னஞ்சல் அனுப்பினேன்” என்றாளாம்.
வாகனம் ஓட்டும்போது குறுஞ்செய்தி அனுப்பக்கூடாது என்ற சட்டம் இருப்பதால், மின்னஞ்சல் அனுப்பலாம் என்பது அர்த்தமில்லை. சட்டத்தின் நோக்கம் குறுஞ்செய்தி அனுப்புவதை தடுப்பதல்ல; மாறாக, இது கவனச்சிதறலோடு வாகனத்தை ஓட்டுவதை தடுப்பதேயாகும்.
இயேசு அவருடைய நாட்களின் மார்க்கத்தலைவர்களை மோசமான சட்ட ஓட்டைகளை உருவாக்கியதாக குற்றஞ்சாட்டினார். “நீங்கள் உங்கள் பாரம்பரியத்தைக் கைக்கொள்ளும்படிக்குத் தேவனுடைய கட்டளைகளை வியர்த்தமாக்கினது நன்றாயிருக்கிறது," என்று அவர் கூறினார். அதற்கு “உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக” (மாற்கு 7:9-10) என்ற கட்டளையை மேற்கோள்காட்டினார். மத பக்தி என்ற போர்வையின் கீழ், இந்த பணக்கார தலைவர்கள் தங்கள் குடும்பங்களை புறக்கணித்தனர். அவர்கள் தங்கள் பணம், “தேவனுக்கு உரியது” என்று வெறுமனே அறிவித்தனர். ஆனால் வயதான காலத்தில் தகப்பனுக்கும் தாய்க்கும் உதவ வேண்டிய அவசியமில்லையென்று கருதினர். “நீங்கள் போதித்த உங்கள் பாரம்பரியத்தினால் தேவ வசனத்தை அவமாக்குகிறீர்கள்” (வச. 13) என்று அவர்களின் இந்த பிரச்சனைக்கான காரணம் என்ன என்பதை இயேசு கண்டுபிடித்தார். அவர்கள் தேவனை மதிக்கவில்லை; தங்கள் பெற்றோரை அவமதித்தனர்.
பகுத்தறிவு மிகவும் நுட்பமானது. அதன் மூலம் நாம் பொறுப்புகளைத் தவிர்க்கிறோம், சுயநல நடத்தைகளை விளக்குகிறோம், தேவனின் நேரடி கட்டளைகளை நிராகரிக்கிறோம். அது நம் நடத்தையை விவரிக்கிறது என்றால், நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம். தம் பிதாவின் நல்ல அறிவுரைகளுக்குப் பின்னால் ஆவியானவரின் வழிகாட்டுதலுக்காக நம்முடைய சுயநலப் போக்குகளை பரிமாறிக்கொள்ள இயேசு நமக்கு வாய்ப்பளிக்கிறார்.