ஏன் அதைப் பற்றி என்னால் யோசிக்காமல் இருக்கமுடியவில்லை? என் உணர்ச்சிகள் சோகம், குற்ற உணர்ச்சி, கோபம் மற்றும் குழப்பம் ஆகியவற்றால் நிறைந்திருந்தது.
சில ஆண்டுகளுக்கு முன்பு, எச்சரிப்பு சத்தத்திற்கு செவிகொடுக்காததினால், எனக்கு நெருக்கமான ஒருவருடனான உறவைத் துண்டிக்கும் வேதனையான முடிவை எடுத்தேன். ஆனால் இன்று நான் இருக்கும் அதே ஊரில் தான் அவளும் இருக்கிறாள் என்பதை கேள்விப்பட்டவுடன், என்னுடைய எண்ணம் கடந்த கால நிகழ்வுகளை எனக்கு நினைப்பூட்டியது.

என் மனதை அமைதிப்படுத்த நான் சிரமப்பட்டபோது, வானொலியில் ஒரு பாடல் ஒலித்தது. அந்த பாடல் துரோகத்தின் வேதனையை மட்டுமல்லாது, அந்த தீங்கு விளைவித்த நபருடன் மீண்டும் சேருவதற்கு துடிக்கும் இருதயத்தை பிரதிபலித்தது. அந்த பாடலைக் கேட்ட மாத்திரத்தில், என் இருதயத்தின் ஆழத்தில் இருந்த துக்கத்தை அறிந்து என்னையறியாமல் நான் கண்ணீர் சிந்த ஆரம்பித்தேன்.

“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக” என்று பவுல் ரோமர் 12:9இல் அன்பைக் கடந்துசெல்லும் அனைத்தும் உண்மையானவை அல்ல என்பதை வலியுறுத்துகிறார். ஆயினும்கூட, உண்மையான அன்பை அறிந்து கொள்வதே நம் இதயத்தின் ஆழமான ஏக்கமாகும் – அது சுயத்தையோ சூழ்ச்சியையோ கொண்டுள்ள அன்பு அல்ல; இரக்கமும் தியாகமும் கொண்டுள்ள அன்பு. அன்பு என்பது பயத்தால் கட்டுப்படுத்தப்படும் ஒரு தேவையல்ல; மாறாக, இருவரின் நலனையும் பொருட்படுத்தும் ஓர் அன்பான அர்ப்பணிப்பு (வச. 10-13).

அதுவே நற்செய்தியாகிய சுவிசேஷம். கடைசியாக, நாம் நம்பக்கூடிய, நமக்கு எப்போதும் சேதம் விளைவிக்காத அன்பை நாம் கிறிஸ்துவின் மூலம் அடையாளம் கண்டுகொண்டோம் (13:10). சுதந்திரமாய் வாழும் வாழ்க்கையே அவருடைய அன்பில் வாழ்வதாகும்.