“எனக்கு அன்பான சிநேகிதனே, சில சமயங்களில் நீங்கள் இருப்பதைவிட பரிசுத்தமாக காண்பித்துக்கொள்ளுகிறீர்கள்.”
இந்த வார்த்தைகள் நேர்மையுடனும் மென்மையான புன்னகையுடனும் சொல்லப்பட்டது. அதை என்னுடைய நெருங்கிய சிநேகிதரோ அல்லது நான் மதிக்கும் வழிகாட்டி போன்றவர்களைத் தவிர்த்து வேறு யாரிடமிருந்து வந்திருந்தாலோ, நான் ஒருவேளை வேதனைப்பட்டிருக்கக்கூடும். ஆனால் அந்த வார்த்தைகளைக் கேட்டபோது, அவை உண்மைதான் என்பதை அறிந்து நான் எனக்குள் சிரித்துக்கொண்டேன். சிலவேளைகளில் நான் என்னுடைய விசுவாசத்தை பிரதிபலிக்கையில், எனக்கு சற்றும் பொருந்தாத வார்த்தைகளை பயன்படுத்தினேன். அது என்னுடைய நேர்மையின்மையை காட்டிக்கொடுத்தது. ஆனால் என்னுடைய சிநேகிதர், நான் யார் என்பதை நேர்மையுடன் மற்றவர்களுக்கு பகிர்ந்துகொள்ள எனக்கு உதவினார். நான் என் வாழ்க்கையில் பெற்றுக்கொண்ட சிறந்த ஆலோசனையாய் இதை ஏற்றுக்கொள்கிறேன்.

“சிநேகிதன் அடிக்கும் அடிகள் உண்மையானவைகள்; சத்துரு இடும் முத்தங்களோ வஞ்சனையுள்ளவைகள்” (நீதிமொழிகள் 27:6) என்று சாலமோன் ஞானமாய் எழுதுகிறார். என் நண்பரின் ஆலோசனை அதை நிருபித்தது. அதை ஏற்றுக்கொள்வது அவ்வளவு எளிதல்ல என்பது அவருக்குத் தெரிந்திருந்தாலும், எனக்கு அவசியமான ஒன்றை என்னிடம் சொல்ல அவர் அக்கறை காட்டினார் என்பதை நான் மதிக்கிறேன். சில சமயங்களில் உங்களுக்கு பிடித்தான காரியங்களை மட்டும் உங்களிடம் பகிர்ந்துகொள்கிறவர்களால் உங்களுக்கு பிரயோஜனம் இருக்காது. அது முக்கியமான சுபாவங்களில் உங்களுடைய வளர்ச்சியை தடுக்கக்கூடும்.
மனத்தாழ்மையுடனும் நேர்மையுடனும் அளவிட்டால், வெளிப்படையான பேச்சுகள் தயவானவைகள். தேவனுடைய தயவுள்ள இருதயத்தை பிரதிபலிக்க அவற்றை நாம் பெற்றுக்கொள்வோம், பிரதிபலிப்போம்.