விக்டோரியா மகாராணிக்காக சீனாவிலும் மற்ற இடங்களிலும் பணியாற்றினார் ஜெனரல் சார்லஸ் கோர்டன் (1833-1885) . பின்னர் இங்கிலாந்தில் வசிக்கையில், தன் மாத வருமானத்தின் 90 சதவிகிதத்தை தானம் செய்துவிடுவாராம். தன் சொந்த தேசத்தில் பஞ்சம் என்பதை கேள்விப்பட்ட அவர், உலகத் தலைவர் ஒருவரிடம் பெற்ற தங்கப் புத்தகத்தின் எழுத்துகளையெல்லாம் அழித்துவிட்டு, அதை பஞ்சம் நிறைந்த வடக்கு பகுதிக்கு, “பதக்கத்தை உருக்கி, அதின் பணத்தை ஏழைகளுக்கு ஆகாரம் வாங்கப் பயன்படுத்திக்கொள்ளவும்” என்று எழுதி அனுப்பினாராம். அந்நாளில் அவர் தன் டைரி குறிப்பில், “நான் இவ்வுலகில் மதித்திருந்த என் கடைசி பொருளையும் ஆண்டவராகிய இயேசுவுக்கு கொடுத்துவிட்டேன்” என்று எழுதினாராம்.
ஜெனரல் கோர்டனுடைய இந்த தாராள குணம் நமக்கு எட்டாத ஒன்றாக தென்படலாம். ஆனால் தேவையில் உள்ளவர்களை கவனிக்க தேவன் தன் ஜனத்திற்கு எப்போதும் அழைப்பு விடுக்கிறார். மோசேயின் மூலம் தேவன் கொடுத்த நியாயப்பிரமாணங்களில் சிலவற்றில், அறுப்பை அறுக்கும்போது அதை தீர அறுக்காமலும், அதின் பின் அறுப்பை அறுக்காமலும் இருக்கும்படிக்கு கட்டளையிடுகிறார். அதற்கு பதிலாக, திராட்சைப்பழங்களை அறுக்கும்போது அதில் கீழே சிந்துகிறதை எளியவனுக்கும் வழிப்போக்கர்களுக்கும் விட்டுவிடும்படிக்கு கூறுகிறார் (லேவியராகமம் 19:10). தங்கள் மத்தியில் வசிக்கும் ஏழை, எளியவர்களை தம் ஜனம் பராமரிக்கும்படி தேவன் விரும்புகிறார்.
நாம் எவ்வளவு தாராளமாய் நம்மை எண்ணிக்கொண்டாலும், மற்றவர்களுக்கு கொடுக்கும் குணாதிசயத்தை இன்னும் வளர்த்துக்கொள்வதற்கும், அதை நேர்த்தியாய் செயல்படுத்தும் வழிமுறைகளைக் கற்றுக்கொள்வதற்கும் தேவனிடத்தில் கேட்கலாம். தம்முடைய அன்பை நாம் பிறரிடம் காண்பிக்க, நமக்கு உதவவே அவர் விரும்புகிறார்.
இல்லாதவர்களுக்கு உதவிசெய்வதின் மூலமோ, மற்றவர்களின் குறைகளைக் கேட்பதின் மூலமோ, அல்லது வேறெந்த வழியிலோ, மற்றவர்களுக்கு உங்களின் தாராள மனதை எவ்விதம் வெளிப்படுத்தப்போகிறீர்கள்? மற்றவர்களின் தாராள மனதை எவ்விதம் உங்களுடைய வாழ்வில் அனுபவித்துள்ளீர்கள்? அது உங்களுக்கு எப்படியிருந்தது?
கொடுக்கும் தேவனே, இயேசுவை எங்களில் ஒருவராக வாழும்படியாகவும், எங்களுக்காய் மரிக்க ஒப்புக்கொடுத்ததற்காயும் உமக்கு நன்றி. இந்த ஆச்சரியமான பரிசுக்காய் என் இருதயத்தை நன்றியாலும், அன்பினாலும் நிரப்பும்.