ஒரு தோட்ட முதலாளி பேரி மரங்களை விற்க முற்பட்டார். அதற்கு பல முறைகளைக் கையாண்டார். அவற்றின் செடிகளை வரிசைப்படுத்தி அடுக்கி வைக்கவேண்டுமா? பேரி மரங்ளின் ஒவ்வொரு காலகட்ட வளர்ச்சியை படங்களை காட்சிப்படுத்த வேண்டுமா? அவர் ‘பேரி’ மரங்களை விற்பனை செய்வதை கடைசியாகத்தான் உணர்ந்தார். இவை அதிருசியான, மணமுள்ள, ஆரஞ்சு நிற, மென்மையான தோல் கொண்ட பேரி பழங்களை தருபவை. இவைகளை விற்பதற்கு உகந்த ஒரு வழி: பழுத்த பழத்தை எடுத்து, அதை வெட்டி, அதின் சாறு ஒழுக-ஒழுக, ஒரு துண்டை அரிந்து வாடிக்கையாளருக்கு கொடுப்பதே. அந்த பழத்தை அவர்கள் ருசித்தவுடன், அந்த மரத்தை அவர்கள் வாங்குவார்கள். 

அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம் (கலாத்தியர் 5:22-23). எனும் ஆவிக்குரிய கனியினால், தேவன் தன் விசுவாசிகளில் வெளிப்படுகிறார்:  கிறிஸ்துவை நம்புகிறவர்கள் இக்கனியைப் பிரதிபலிக்கையில், அக்கனியை மற்றவர்களும் விரும்புவார்கள். அதின் ஆதாரத்தையும் அறிய முற்படுவர். 

நம் வாழ்வில் பரிசுத்த ஆவியானவரின் உள்ளார்ந்த தாக்கமே இக்கனியின் வெளிப்பாடு. பிறருக்கு நம் தேவனை பிரதிபலிக்க உதவுவதே இக்கனிதான். பச்சை இலைகளுக்கு மத்தியில் இந்த பேரிக் கனிகள் பிரகாசமாய் தெரிவதுபோல, “இங்கே உணவு இருக்கிறது! இங்கே ஜீவனிருக்கிறது! உங்களுடைய பெலவீனத்திலிருந்தும் சோர்விலிருந்தும் விடைபெறுவதற்கு இங்கு வாருங்கள், வந்து தேவனை சந்தியுங்கள்” என்று, ஆவியின் கனி பசியோடிருக்கும் உலகை அழைக்கிறது.