இந்திராகாந்தியின் படுகொலைக்கு பின்பு, அவருடைய மகன் ராஜீவ் காந்தி பெரும்பான்மை ஓட்டு வித்தியாசத்தில் பிரதம மந்திரி ஆனார். இளமையான, படித்த பிரதம மந்திரி மீது மக்கள் நம்பிக்கை வைத்து நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடையும் என நம்பினர். ஆனால் இலங்கையில் அமைதி நிலவும் பொருட்டு இந்தியாவின் அமைதியின்மை தொடர்ந்தது. அதின் விளைவாய் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். எல்லாம் இனி சரியாகிவிடும் என்னும் நேர்மறையான பார்வைகொண்ட மக்கள் நம்பிக்கை இழந்தனர். ஒன்றை நேர்மறையாய் பார்க்கும் பார்வை மட்டும் போதுமானது அல்ல, கடைசியில் ஏமாற்றமே மிஞ்சும்.

1967இல் இறையியலாளர் ஜர்கென் மோல்ட்மான் அவர்கள் “நம்பிக்கை இறையியல்” என்னும் நூலில் தெளிவான தரிசனத்தைக் காட்டுகிறார். இந்த பாதை வெறும் நேர்மறையான பாதை மட்டுமில்லை, நம்பிக்கையின் பாதை என்கிறார். இரண்டும் ஒன்றல்ல. நேர்மறையான சிந்தை என்பது சந்தர்ப்ப சூழ்நிலையைப் பொறுத்து மாறுபடும், ஆனால் மெய்யான நம்பிக்கை என்பது எல்லா சூழ்நிலைகளிலும் தேவனின் உண்மைத்துவத்தில் வேரூன்றியுள்ளது என்கிறார்.

இந்த மெய்யான நம்பிக்கையின் ஆதாரம் எது? நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக; அவர், இயேசுகிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்ததினாலே… ஜீவனுள்ள நம்பிக்கை உண்டாகும்படி, தமது மிகுந்த இரக்கத்தின்படியே நம்மை மறுபடியும் ஜெநிப்பித்தார் (1 பேதுரு 1:3-4). நம் தேவன் தம் குமாரனாகிய இயேசு கிறிஸ்து மூலமாய் மரணத்தை ஜெயித்தார். இந்த பெரிய வெற்றி, நேர்மறையான சிந்தையையும் கடந்து உறுதியான நம்பிக்கையை எல்லா சூழ்நிலைகளிலும் ஏற்படுத்துகிறது.