சமூக ஊடகமான ட்விட்டர் மக்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட ஒரு தளத்தை உருவாக்கியது. சமீபத்தில் இது சிக்கலாகிவிட்டது. அது ஒத்துவராத அணுகுமுறைகள், வாழ்க்கை முறைகளைப் பற்றிய கண்டனங்களை வெளிப்படுத்தும் ஒரு கருவியாகிவிட்டது. நாம் அதில் லாக்ஆன் செய்தால், ஒரு நபராவது “டிரெண்டிங்”ல் உலவுவார். அவர் பெயரை சொடுக்கினால்; அதனால் ஏற்பட்ட சர்ச்சையைப் பற்றி லட்சக்கணக்கான மக்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தியிருப்பார்கள்.
நாம் மக்கள் உடுத்தும் ஆடைகளைக் குறித்த நம்முடைய கருத்துக்களை வெளிப்படையாய் விமர்சிக்க கற்றுக்கொண்டோம். ஆனால் கிறிஸ்தவ விசுவாசிகளாய் அழைக்கப்பட்டவர்களுக்கு விமர்சன சிந்தனையும், அக்கறையற்ற அணுகுமுறையும் ஏற்புடையதல்ல. கருத்து வேறுபாடுகளைக் கையாள நாம் விசுவாசிகளாய் “உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு” வாழவேண்டும் (கொலோசெயர் 3:12). “ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்” (வ.13) என்றும் வலியுறுத்துகிறார்.
நம்மோடு ஒத்துப்போகும் சுபாவம் கொண்டவர்களிடம் மட்டும் இணங்கிப்போவது போதுமானது அல்ல. நாமும் கிறிஸ்துவின் அன்பினால் மீட்கப்பட்டவர்கள் என்பதை உணர்ந்து, கிறிஸ்து வழிகாட்டியது போல, நாமும் கிருபையையும் அன்பையும் நாம் சந்திக்கும் ஒவ்வொருவருக்கும் வழங்க வேண்டும்.
நீங்கள் ஒரு நண்பரையோ அல்லது அந்நியரையோ விமர்சித்ததை சற்று சிந்தித்துப் பாருங்கள், அதன் விளைவு என்ன? தேவனையும் அந்த நபரையும்கனப்படுத்த நீங்கள் என்ன செய்திருக்கலாம்?
பரலோகப் பிதாவே, ஒவ்வொரு நாளும் உம்முடைய மகிமைக்கு நான் பாத்திரவான் இல்லை. உம்முடைய நிபந்தனையற்ற அன்பிற்காய் நன்றி. நான் உம்மைப்போல மற்றவர்களுடன் பொறுமையுடனும் மென்மையாகவும் பழக எனக்கு உதவி செய்யும்.