எப்போதெல்லாம் தாத்தா என்னை கடற்கரைக்கு அழைத்துச் செல்லுகிறாரோ, அப்போதெல்லாம் தன்னுடைய கைக்கடிகாரத்தை கழற்றி வைத்து விடுவார்” என்று பிரியங்கா நினைவுகூர்ந்தாள். “ஏன்? என்று ஒரு நாள் அவரைக் கேட்டேன்.” 

“அதற்கு அவர் புன்னகையுடன், ஏனென்றால் உன்னோடு நான் செலவு செய்யும் தருணங்கள் எவ்வளவு முக்கியம் என்று நீ அறிய வேண்டும்; காலம் செல்வது தெரியாமல் நான் உன்னுடன் இருக்க விரும்புகிறேன்” என்று அவர் பதிலளித்தார். 

இந்த ஞாபகங்களை, பிரியங்கா அவளுடைய தாத்தாவின் இறுதிச் சடங்கின்போது பகிர்ந்தார். இது அவளுடைய மறக்க முடியாத நினைவுகளில் ஒன்று. மற்றவர்கள் நமக்காக நேரம் செலவிடும்போது, அதை நாம் எவ்வளவு மதிப்பாய் உணர்கிறோம் என்பதை நான் பிரதிபலித்தபோது, அது தேவனின் அன்பின் அக்கறையை வெளிப்படுத்தும் வேத வசனங்களை நினைவுபடுத்துகிறது.

தேவன் எப்போதும் நம்மோடு நேரம் செலவிடுகிறார். “நீர் உமது கையை திறந்து, சகல பிராணிகளின் வாஞ்சையையும் திருப்தி ஆக்குகிறீர். கர்த்தர் தம் வழிகளில் எல்லாம் நீதி உள்ளவரும், தமது கிரியைகளில் எல்லாம் கிருபை உள்ளவருமாய் இருக்கிறார். கர்த்தர் சமீபமாய் இருக்கிறார்” (வச. 16-18) என்று சங்கீதம் 145ல் தாவீது வேண்டுதல் செய்கிறார்.

நம் வாழ்வின் ஒவ்வொரு விநாடியும், தேவனுடைய நன்மையும் அக்கறையும் நம்மைத் தாங்கி, நமக்கு சுவாசிக்க காற்றும் உண்ண உணவும் அளிக்கிறது. அவர் அன்பில் நிறைந்தவராய், நுட்பமான விஷயங்களையும் தன்னுடைய கிருபையினால் படைத்தார். 

தேவனுடைய அன்பு ஆழமானது; அவர் அளிக்கும் நன்மையும் கிருபையும் முடிவில்லாதது. அவர் நித்திய வாழ்விற்கு போகும் வாசலைக் காட்டுகிறார். அவருடைய பிரசன்னத்தில் நாம் களிகூருவோம். “நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்; நேரம் போவதே தெரியாமல், நித்திய காலமாய் நான் உன்னோடு இருக்க விரும்புகிறேன்.”