நான் அவருடைய கைகளில்
2000ஆம் ஆண்டு ஜியா ஹைக்சியா தன்னுடைய பார்வையை இழந்தான். அவனுடைய நண்பன் ஜியா வெங்கி தான் குழந்தையாயிருக்கும்போது அவனுடைய கைகளை இழந்தான். ஆனால் அவர்களின் ஊனத்தை மேற்கொள்ளும் வழியை அவர்கள் கண்டுபிடித்தனர். “நான் அவனுடைய கைகள், அவன் என்னுடைய கண்கள்” என்று ஹைக்சியா சொல்லுகிறான். இருவரும் இணைந்து சீனாவிலுள்ள அவர்களுடைய சிறிய கிராமத்தையே மாற்றத்திற்குள்ளாக்கினர்.
2002ஆம் ஆண்டிலிருந்து இந்த நண்பர்கள் இருவரும் தங்கள் வீட்டின் அருகாமையிலிருக்கும் தரிசு நிலத்தை புதுப்பிக்க பிரயாசப்பட்டனர். ஒவ்வொரு நாளும் ஹைக்சியா, வெங்கியின் முதுகில் ஏறிக்கொண்டு இருவரும் ஆற்றைக் கடந்து செல்வர். பிறகு வெங்கி, ஹைக்சியாவின் கரத்தில் ஒரு பள்ளம்தோண்டும் கருவியைக் கொடுத்து, அவன் தோண்ட தோண்ட அந்த குழியில் இவன் மரத்தை நடுவது வழக்கம். ஒருவர் குழிதோண்ட, மற்றவர் அதில் மரக்கன்றை நட, இருவரும் இணைந்து 10,000க்கும் மேற்பட்ட மரங்களை நட்டிருக்கின்றனர். “நாங்கள் இணைந்து வேலை செய்யும்போது, நாங்கள் ஊனமுற்றவர்களாய் ஒருபோதும் எண்ணியதில்லை” என்று ஹைக்சியா கூறுகிறான். “நாங்கள் குழுவாய் செயல்படுகிறோம்.”
பவுல் அப்போஸ்தலர் திருச்சபையை சரீரமாய் ஒப்பிடுகிறார். அதின் ஒவ்வொரு அவயத்திற்கும் மற்ற அவயத்தின் உதவி தேவை. திருச்சபை முழுவதும் கண்களாயிருந்தால், அங்கு எதுவும் கேட்காது. எல்லா அவயங்களும் காதுகளாய் இருந்தால், அங்கு வாசனை இருக்காது (1 கொரி. 12:14-17). “கண்ணானது கையைப்பார்த்து: நீ எனக்கு வேண்டுவதில்லையென்று... சொல்லக்கூடாது” என்று பவுல் சொல்லுகிறார் (வச. 21). அவரவருடைய ஆவிக்குரிய வரங்களுக்கேற்ப ஒவ்வொருவரும் திருச்சபையில் பங்கேற்கிறோம் (வச. 7-11,18). ஜியா ஹைக்சியா மற்றும் வெங்கியைப் போல நாமும் நம்முடைய பலத்தை இணைத்தால், உலகத்திற்கு ஒரு மாற்றத்தைக் கொண்டுவரலாம்.
ஒரு புறம்போக்கு நிலத்தை சீர்செய்ய இருவர் தங்களுடைய திறமைகளை ஒன்றுசேர்த்தனர். இது செயல்படும் திருச்சபையை விளக்கும் என்ன அருமையான ஒரு உருவகம்.
சமபந்தி
கர்த்தாவே, நீரே என் தேவன்; உம்மை உயர்த்தி, உமது நாமத்தைத் துதிப்பேன்; நீர் அதிசயமானவைகளைச் செய்தீர்; உமது பூர்வ ஆலோசனைகள் சத்தியமும் உறுதியுமானவைகள்.
நீர் நகரத்தை மண்மேடும், அரணான…
ஆஸ்திரேலியா கிறிஸ்துமஸ்
"ஏரோது ராஜாவின் நாட்களில் யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே இயேசு பிறந்தபொழுது, கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து,
யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்துகொள்ள…
இயேசுவைக் கொண்டாடுதல்
இ யேசு கிறிஸ்து, தம்முடைய பிறப்பு, மரணம், மற்றும் உயிர்த்தெழுதல் மூலமாய் இந்த பூமிக்கு கொண்டுவந்த சுகத்தையும் ஒப்புரவாகுதலையும் குறித்து நான் சிந்தித்தேன். எங்கள் திருச்சபையில் ஆராதனை, திருமணம் மற்றும் நீதி போன்ற மையக் கருத்துக்களை அறிந்துகொள்ளும் வேத பாட வகுப்பு ஒழுங்குசெய்யப்பட்டது. அதன் கடைசி வகுப்பில், உலகத்தில் இருக்கும் அநீதியை அகற்றுவதற்க்கு, முதலில் தங்கள் இருதயத்தில் இருக்கும் அநீதியை அகற்ற வேண்டும் என்று போதிக்கப்பட்டது.
அந்தக் காலை ஆராதனைக்குப் பின், திருச்சபையின் முன் வளாகத்தில் என்னை ஒரு நபர் சந்தித்து, தம்மை மன்னிக்குமாறு கேட்டார். உடனே,…
நான் என்ன சொல்ல வேண்டும்?
பழைய புத்தகக்கடையொன்றில் நான் புத்தகங்களை பார்வையிடுவதை நிறுத்தியபின்பு, அந்த கடையின் முதலாளி வந்தார். அவரிடத்தில் இருக்கும் புத்தகங்களின் தலைப்புகளைக் குறித்து நாங்கள் விவாதித்துக்கொண்டிருக்கும்போது, அவர் சத்தியத்தைக் கேட்க விரும்புவாரா என்று என் உள்மனதில் எண்ணிக்கொண்டேன். நான் ஆண்டவருடைய வழிநடத்துதலுக்காக மௌனமாக ஜெபித்தேன். கிறிஸ்தவ ஆசிரியர்களின் சரிதை புத்தகங்களைக் குறித்து விவாதிக்கும் எண்ணம் எனக்கு உதித்தது. அதைக் குறித்து விவாதிக்கும்போது, அப்படியே தேவனைக் குறித்தும் பேசினோம். ஒரு சிறிய ஜெபம் எங்களுடைய விவாதத்தை ஆவிக்குரிய ரீதியில் திசைதிருப்பியதற்காக தேவனுக்கு நன்றி செலுத்தினேன்.
அர்தசஷ்டா ராஜாவின் முன் நின்று பேசுவதற்கு முன்பு நெகேமியாவும் தேவனிடம் ஜெபித்துவிட்டு போகிறான். எருசலேமின் அழிவைக் குறித்து கலக்கமடைந்திருந்த நெகேமியாவுக்கு எப்படி உதவமுடியும் என்று ராஜா கேட்கிறார். நெகேமியா ராஜாவின் வேலைக்காரனாயிருக்கிறான், ஆகையால் ராஜாவின் தயவை அவன் எதிர்பார்க்கமுடியாது. ஆனால் அவனுக்கு பெரிய தேவை ஒன்று உள்ளது. அவன் எருசலேமை மீட்க விரும்புகிறான். ஆகையால் அவன் தன்னுடைய வேலையை விட்டுவிட்டு தன் பட்டணத்தை ஸ்தாபிக்க அனுமதி கேட்பதற்கு முன்பு “பரலோகத்தின் தேவனை நோக்கி” ஜெபிக்கிறான் (நெகேமியா 2:4-5). ராஜா அதற்கு சம்மதித்து, நெகேமியாவுக்கு உதவி செய்யவும் தீர்மானித்து, அவனுடைய பயண ஏற்பாடுகளை செய்து, அவனுக்கு தேவையான மரமுட்டுகளையும் கொடுத்தனுப்புகிறார்.
“எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும்” ஜெபிக்கும்படிக்கு வேதம் நம்மை ஊக்குவிக்கிறது (எபேசியர் 6:18). நமக்கு தைரியம், சுய கட்டுப்பாடு தேவைப்படும் மற்றும் நாம் உணர்ச்சிவசப்படும் தருணங்களும் இதில் உள்ளடங்கும். நாம் பேசுவதற்கு முன்பாக ஜெபிப்பது, நம்முடைய சிந்தனையையும் வார்த்தைகளையும் தேவனுடைய கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க நமக்கு உதவுகிறது.
உங்களுடைய வார்த்தைகளை அவர் இன்று எவ்வாறு வழிநடத்த விரும்புகிறார்? அவரைக் கேட்டு அதை கண்டறியுங்கள்!
நியாயமான காத்திருத்தல்
மிகக்கடினமாய் நடத்தக்கூடிய முதலாளி அமைந்ததால், நீண்டநேரம் மனச்சோர்வோடு வேலைசெய்யக்கூடிய நிலைமை அபினவ்க்கு ஏற்பட்டது. தன் வேலையை விட்டுவிட எண்ணினார். ஆனால் அவனுடைய கடன், மனைவி, இளம்பிள்ளை ஆகிய பொறுப்புகள் அவருக்கிருந்தது. இருந்தாலும் வேலையை விட்டுவிடுவதற்கு அவர் முயற்சித்தார். அவருடைய மனைவி அவரிடத்தில், “நாம் காத்திருக்கலாம், தேவன் நமக்கு என்ன தருகிறார் என்று பார்க்கலாம்” என்றாள்.
பல மாதங்கள் கழித்து அவர்களுடைய ஜெபம் கேட்கப்பட்டது. அபினவ்க்கு புதிய வேலை கிடைத்தது. தன் குடும்பத்தினரிடம் அதிக நேரம் செலவழிக்க முடிந்தது. “அத்தனை மாதங்கள் என்பது நீண்ட காலம், ஆனால் தேவனுடைய குறித்த நேரத்தில் வெளிப்படும் அவருடைய திட்டத்திற்காக காத்திருந்ததற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்றார்.
பாடுகளுக்கு மத்தியில் தேவனுடைய குறித்த காலத்திற்காக காத்திருப்பது கடினம். அத்தருணத்தில் நம்முடைய திட்டத்தை அரங்கேற்ற தூண்டப்படுவோம். இஸ்ரவேலர்களும் அதையே செய்தனர்: சத்துருக்களின் அச்சுறுத்தல்களிலிருந்து தங்களை காத்துக்கொள்வதற்கு தேவனிடத்தில் திரும்பாமல், எகிப்து தேசத்திடம் உதவி கோரினர் (ஏசாயா 30:2). ஆனால் தேவன் அவர்களிடம், நீங்கள் மனந்திரும்பி என்னை நம்பினால், நீங்கள் பலப்பட்டு, மீட்பைப் பெறுவீர்கள் என்று எச்சரிக்கிறார் (வச. 15). “ஆனாலும் உங்களுக்கு இரங்கும்படி கர்த்தர் காத்திருப்பார்” (வச. 18) என்றும் கூறுகிறார்.
தேவனுக்காக காத்திருப்பதற்கு விசுவாசமும் பொறுமையும் தேவைப்படுகிறது. ஆனால் தேவனுடைய பதிலை நாம் பெற்றுக்கொள்ளும்போது, காத்திருந்தது நியாயமானது என்பதை நாம் ஒத்துக்கொள்வோம்: “அவருக்குக் காத்திருக்கிற அனைவரும் பாக்கியவான்கள்” (வச. 18). நாம் அவரிடத்திற்கு திரும்புவோம் என்று தேவன் நமக்காக காத்திருப்பதே அதைக்காட்டிலும் ஆச்சரியமானது.