நான் எனது முதிர்ந்த நாய் வில்சனை புல்வெளியில் நடக்க அழைத்துச்சென்றேன். அந்த வேளையில் என்னுடைய கோச் எனப்பட்ட என்னுடைய சிறிய நாயைப் பிடித்திருந்த கயிற்றை ஒருநிமிடம் தவறவிட்டேன். கீழே குனிந்து அதை எடுக்க முயற்சித்த இடைவெளியில், கோச் ஒரு முயலைப் பார்த்துவிட்டது. அதை விரட்டிக்கொண்ட வெறித்தனமாய் ஓட முயற்சித்தவேளையில், அதின் கயிறு என் மோதிரவிரலில் சிக்கி காயம் ஏற்படுத்தியது. நான் அந்த புல்தரையில் விழுந்து வலியில் கத்தினேன்.
முதலுதவியை பெற்று திரும்பும்போது, என் விரலில் அறுவை சிகிச்சை செய்தாகவேண்டும் என்று தெரியவந்தது. நான் தேவனிடத்தில் மன்றாடினேன். நான் ஒரு எழுத்தாளன், எப்படி டைப் செய்வது? என்னுடைய அன்றாட பணிகளை எப்படி செய்வது? தேவன் அன்றைய வேத தியானத்தில் என்னோடு பேசினார். “உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலதுகையைப் பிடித்து: பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று சொல்லுகிறேன்” (ஏசாயா 41:13). தேவனுடைய உறவில் இருந்த யூதேயாவிலுள்ள தேவ ஜனத்திற்கே ஏசாயா இதை எழுதுகிறார் என்று அதன் பின்னணியத்தைக் கண்டுபிடித்தேன். தன்னுடைய வலது கரத்தை உருவகப்படுத்தி, அவர்களுக்கு தன்னுடைய பிரசன்னத்தையும், பெலத்தையும், உதவியையும் வாக்குப்பண்ணுகிறார் (வச. 10). வேதாகமமெங்கிலும் தேவனுடைய வலதுகரமானது, தேவ ஜனத்திற்கு அவர் கொடுக்கும் வெற்றியை உருவகப்படுத்தவே பயன்படுத்தப்பட்டுள்ளது (சங்கீதம் 17:7; 98:1).
என் விரல் குணமாகும்வரையிலும், என் கம்யூட்டரில் நான் பேசுவதை அதுவே டைப் செய்யும் யுக்தியை பயன்படுத்தியும், என் வீட்டு அலுவல்களை என்னுடைய இடது கையின் துணைகொண்டும் செய்துகொண்டேன். தேவனுடைய நீதியின் வலதுகரத்திலிருந்து நம்முடைய உடைந்த வலக்கரம் வரையிலும் அனைத்திலும் தேவன் நம்மோடிருந்து நமக்கு உதவிசெய்வேன் என்று வாக்களித்துள்ளார்.
தேவனுடைய உதவி இன்று உங்களுக்கு எப்படி தேவைப்படுகிறது? அவருடைய உதவியை கடந்த நாட்களில் எப்படி அனுபவித்துள்ளீர்கள்?
சுகமாக்கும் தேவனே, உம்முடைய உதவி எனக்கு தேவை! உம்முடைய நீதியின் வலதுகரத்தினால் என்னுடைய உடைந்த கரங்களை பெலப்படுத்தி, தயவாய் எனக்கு சகாயஞ்செய்யும்படிக்கு வேண்டிக்கொள்கிறேன்.