வடக்கு தாய்லாந்தில் இருக்கும் “கூடுகை” என்னும் திருச்சபை ஒரு தனிக்குழு சார்பற்ற, சர்வதேச திருச்சபை. சமீபத்திய ஒரு ஞாயிற்றுக் கிழமையன்று, கொரியா, கானா, பாக்கிஸ்தான், சீனா, வங்காள தேசம், அமெரிக்கா, பிலிப்பைன்ஸ் மற்றும் பல நாடுகளிலிருந்த கிறிஸ்துவின் விசுவாசிகள் தாழ்மையின் சிந்தையோடு ஒரு ஓட்டலின் மாநாட்டு அறையில் கூடினர். அவர்கள் “கிறிஸ்து மாத்திரமே” என்றும் “நான் கிறிஸ்துவின் பிள்ளை” என்றும் அந்த சூழ்நிலைக்கு கிளர்ச்சி தூண்டுகிறதுபோல் தோன்றிய பாடல்களை பாடினர்.
இயேசுவைப் போல யாராலும் மக்களை ஒன்றுதிரட்ட முடியாது. அவர் ஆரம்பத்திலிருந்தே அப்படி செய்கிறார். முதலாம் நூற்றாண்டில் அந்தியோகியாவில் பதினெட்டு இன மக்கள் தனித்தனியே வசித்தனர். விசுவாசிகள் முதலில் அந்தியோகியாவுக்கு வந்தபோது, அங்கிருந்த யூதர்களுக்கு மட்டுமே சுவிசே~த்தைப் பிரசங்கித்தனர் (அப்போஸ்தலர் 11:19). ஆனால் திருச்சபையைக் குறித்த தேவனுடைய திட்டம் அதுவல்ல. உடனடியாக, மற்றவர்களும் அங்கு கடந்து வந்து “கிரேக்கருடனே பேசிக் கர்த்தராகிய இயேசுவைக்குறித்துப் பிரசங்கித்தார்கள்,” “அநேக ஜனங்கள் விசுவாசிகளாகி, கர்த்தரிடத்தில் திரும்பினார்கள்” (வச. 20-21). நூற்றாண்டுகளாய் யூதருக்கும் கிரேக்கருக்கும் இடையே நீடித்துக்கொண்டிருந்த பகையை இயேசு குணமாக்குகிறார் என்பதை அப்பட்டணத்திலிருந்தவர்கள் அறிந்துகொண்டனர். இந்த பலதரப்பட்ட இன மக்களைக் கொண்ட இந்த திருச்சபை “கிறிஸ்தவர்கள்” என்று அழைக்கப்பட்டனர் (வச. 26).
இனம், சமுதாயம், மற்றும் பொருளாதார எல்லைகளைக் கடந்து நம்மிலிருந்து வேறுபட்ட மக்களை சந்திப்பது நமக்கு சவாலான ஒன்று. ஆனால் இந்த கடினமான பாதை நமக்கு வாய்ப்பாய் கொடுக்கப்பட்டுள்ளது. அது கடினமாயில்லையென்றால், அதை செய்வதற்கு நாம் இயேசுவின் உதவியை தேடியிருக்கமாட்டோம். அதில் சிலர் நாம் அவரை பின்பற்றுகிறோம் என்பதை அறிந்திருக்கின்றனர்.
நம்மிலிருந்து வேறுபட்ட மக்களை சந்திப்பது ஏன் நமக்கு சவாலாயிருக்கிறது? அதை செய்வதற்கு உங்களுக்கு உதவ இயேசு உங்களுக்கு என்ன கொடுத்திருக்கிறார்?
இயேசுவே, உம்முடைய அன்பினாலே நான் கிறிஸ்தவன் என்பதை மற்றவர்கள் அறிந்துகொள்ளட்டும்.