நாங்கள் எதிர்பார்த்து காத்திருந்த, இஸ்ரவேல் தேசத்தில் எங்களின் அகழ்வாராய்ச்சி பணி நடந்துகொண்டிருந்த அந்த குறிப்பிட்ட இடத்திற்கு கடைசியாய் எங்கள் பஸ் வந்து சேர்ந்தது. அந்த இடத்தின் மேற்பார்வையாளர், அந்த ஸ்தலத்தில் நாம் எதைக் கண்டறிந்தாலும் அவைகள் ஆயிரம் ஆண்டுகளுக்கு யார் கையும் படாமல் இருந்தவைகள் என்று எங்களுக்குச் சொன்னார். அங்கு கண்டெடுக்கப்பட்ட உடைந்த மண்பாண்டங்களைப் பார்க்கும்போது நாங்கள் சரித்திரத்தை கையில் தொடுவதுபோல் உணர்ந்தோம். அதன் பின்பு அந்த உடைந்த மண்பாண்டங்களை, பணி செய்யும் இடத்திற்கு கொண்டுபோய் அவைகளை ஒன்றிணைக்க முயற்சித்தோம்.
அவர்களின் பணி மிகத் தெளிவான ஒன்று. அந்த பணியாளர்கள் ஒருங்கமைத்த அந்த உடைந்த மண்பாண்டங்கள், உடைந்துபோனதை நேர்த்தியாய் ஒன்றுசேர்க்க விரும்பும் தேவனுடைய சிந்தையை அழகாய் பிரதிபலித்தது. சங்கீதம் 31:12ல் தாவீது, “செத்தவனைப்போல எல்லாராலும் முழுவதும் மறக்கப்பட்டேன்; உடைந்த பாத்திரத்தைப்போலானேன்” என்கிறார். இந்த சங்கீதத்தை அவர் எந்த சூழ்நிலையில் எழுதினார் என்னும் தகவல் இல்லையென்றாலும், அவர் புலம்புவதை வைத்து அவருடைய வாழ்க்கையின் இக்கட்டான சூழ்நிலையை அறியமுடிகிறது. இந்த சங்கீதம், தாவீது மேற்கொண்ட அபாயம், சத்துருக்கள் மற்றும் விரக்தியினால் முற்றிலும் உடைக்கப்பட்டதை விவரிக்கிறது.
அவர் எங்கு உதவிக்காக நாடினார்? 16ஆம் வசனத்தில் தாவீது தேவனிடத்தில், “செத்தவனைப்போல எல்லாராலும் முழுவதும் மறக்கப்பட்டேன்; உடைந்த பாத்திரத்தைப்போலானேன்” என்று கதறுகிறார்.
அந்த சூழ்நிலையில் தாவீதின் நம்பிக்கையாய் நின்ற தேவன், இன்றும் உடைந்துபோனவைகளை ஒன்றிணைக்க போதுமானவராயிருக்கிறார். நாம் அவரை நோக்கிக் கூப்பிடவும், அவரை முழுமையாய் நம்பவும் வேண்டும் என்பதையே அவர் நம்மிடத்தில் எதிர்பார்க்கிறார்.
வாழ்க்கையின் எந்தெந்த பகுதிகளில் நீங்கள் உடைக்கப்படுதலை அனுபவித்துள்ளீர்கள்? அந்த கடினமான நேரங்களில் தேவன் உங்களுக்கு எப்படி உறுதுணையாயிருந்தார்?
உதவிசெய்யும் தேவனே, நான் உடைக்கப்பட்ட எல்லா நேரங்களிலும் என்னை ஒட்டவைத்ததற்காய் உமக்கு நன்றி.