ஞாயிறு காலை ஆராதனைக்கு நாங்கள் மகிழ்ச்சியோடும் எதிர்பார்போடும் ஒன்றுதிரண்டோம். கொரோனா பெருந்தொற்றின் காரணமாக நாங்கள் இடைவெளியோடு அமர்ந்திருந்தாலும், ஒரு இளம் ஜோடியின் திருமண நிகழ்வை பார்க்கும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது. தொழில்நுட்ப அறிவில் தேறிய எனது திருச்சபை நண்பர்கள் அந்த ஆராதனையை, ஸ்பெயின், போலந்து மற்றும் செர்பியா ஆகிய நாடுகளிலிருந்து தங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் நேரடியாய் ஒளிபரப்பினர். இந்த ஆக்கப்பூர்வமான அணுகுமுறை திருமண உடன்படிக்கையில் மகிழ்ச்சியடைய உதவியது. தேவனுடைய ஆவி எங்களை ஒன்றிணைத்து எங்களை மகிழ்ச்சியடையச் செய்தது.
“சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து” (வெளி. 7:9) வந்தவர் பரலோகத்தில் தேவனுக்கு முன்பாக நின்றிருந்த அதே மகிமையை, எங்களுடைய அந்த ஞாயிறு ஆராதனையில் பலதரப்பட்ட மக்கள் மத்தியில் நின்று நாங்களும் சிறிதளவு ருசிக்க நேர்ந்தது. அன்பான சீஷனாகிய யோவான் தன் தரிசனத்தில் கண்ட இந்த திரளான ஜனக்கூட்டத்தை வெளிப்படுத்தல் புத்தகத்தில் நினைவுகூருகிறார். அதில் கூடியிருக்கிறவர்கள் தூதர்களோடும் மூப்பர்களோடும் இணைந்து தேவனை துதிக்கின்றனர்: “ஆமென், எங்கள் தேவனுக்குத் துதியும் மகிமையும் ஞானமும் ஸ்தோத்திரமும் கனமும் வல்லமையும் பெலனும் சதாகாலங்களிலும் உண்டாவதாக. ஆமென்” (வச. 12).
இயேசுவின் இந்த கலியாணத்தில் சர்வதேச மனையாட்டி இணையும் இந்த ஆட்டுக்குட்டியானவரின் கலியாணவிருந்தில் (19:9) ஆராதனையும் கொண்டாட்டமும் இடம்பெறும். பலதேசங்களைச் சேர்ந்த மக்கள் கூடி ஆராதித்த அந்த ஞாயிறு ஆராதனையானது, ஒரு நாள் நாம் பரலோகத்தில் இப்படியாய் கூடி ஆராதிப்போம் என்பதைப் பிரதிபலித்தது.
அந்த மகிழ்ச்சியான அனுபவத்திற்காக காத்திருக்கிற இந்த நாட்களில், நாம் தேவ ஜனத்தோடு கூடி விருந்தை ஆசரித்து மகிழ்ந்திருப்போம்.
ஆட்டுக் குட்டியானவரின் இந்த கலியாண விருந்தில் கூடியிருக்கும் இந்த கூட்டத்தை நீங்கள் எப்படி கற்பனை செய்து பார்க்கிறீர்கள்? இந்த பிரம்மாண்டமான பரலோக விருந்திற்கு நீங்கள் அழைப்பு பெற்றது, உங்களின் அன்றாட வாழ்வை எவ்விதம் பாதிக்கிறது?
ஆட்டுக்குட்டியானவரே, நீர் இந்த உலகத்தின் பாவத்தையும் என்னுடைய பாவத்தையும் நீக்கிவிட்டீர். பரலோகத்தின் இந்த கலியாணவிருந்துக்கு எனக்கு அழைப்பு கொடுத்ததற்காக நன்றி.