ஆகஸ்ட் மாதத்தின் உஷ்ணமான ஒருநாளில் என் மனைவி என்னுடைய இரண்டாவது மகனைப் பெற்றெடுத்தாள். அவனுக்கு ஒரு பெயரை தேர்ந்தெடுப்பதற்கு நாங்கள் போராடிக்கொண்டிருந்த வரை அவன் பெயரில்லாமலேயே இருந்தான். ஐஸ்கிரீம் கடைகளில் அமர்ந்தும், நீளமான கார் பயணம் மேற்கொண்டும் அவனுக்கு பெயரை தீர்மானிக்க முயன்றோம். எங்களால் முடியவில்லை. அவனுக்கு மீகா என்று பெயர் சூட்டும் வரைக்கும் அவனை “வில்லியம்ஸின் குழந்தை” என்றே அழைத்தோம்.
நேர்த்தியான ஒரு பெயரை தேர்ந்தெடுப்பது சற்று வெறுப்பான ஒன்று. உலகத்தை நித்திய மாற்றத்திற்குள் கொண்டுவரும் இலக்குடன் இவ்வுலகத்திற்கு வந்த தேவனைப்போல் நாம் இல்லை. ஆகாஸ் ராஜாவின் விசுவாசத்தைப் பலப்படுத்திக்கொள்ளும்பொருட்டு ஏசாயா தீர்க்கதரிசியின் மூலமாய் தேவனிடத்தில் ஒரு அடையாளத்தைக் கேட்கும்படிக்கு தேவன் ஆகாஸை ஏவினார் (ஏசாயா 7:10-11). அடையாளத்தைக் கேட்க ராஜா மறுத்தாலும், தேவனாகவே ஓர் அடையாளத்தைக் கொடுக்கிறார்: “இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள்” (வச. 14). தேவன் அந்த பிள்ளைக்குப் பெயரிடுகிறார். அந்த பிள்ளையானது நம்பிக்கையிழந்திருக்கிற மக்களுக்கு நம்பிக்கையின் அடையாளமாய் இருப்பார். இயேசுவின் பிறப்பைப் பதிவுசெய்யும் மத்தேயு அந்த பெயருக்கு புதிய அர்த்தத்தைக் கொடுக்கிறார் (மத்தேயு 1:23). இயேசு இம்மானுவேலாய் இருப்பார். அவர் தேவனுடைய ஸ்தானாதிபதியாக மட்டுமல்லாது, பாவத்தினால் நம்பிக்கையிழந்திருந்த மக்களை மீட்கும்பொருட்டு, மாம்சத்தில் உதித்த தேவனாயிருப்பார்.
தேவன் நமக்கு ஒரு அடையாளத்தைக் கொடுத்திருக்கிறார். அவருடைய குமாரனே அந்த அடையாளம். அவருடைய குமாரனுடைய பெயர் இம்மானுவேல் – தேவன் நம்மோடிருக்கிறார். அவருடைய பிரசன்னத்தையும் அன்பையும் பிரதிபலிக்கும் பெயர். அந்த இம்மானுவேலை நாம் இன்று பற்றிக்கொள்ளும்படியாகவும், அவர் நம்மோடு இருக்கிறார் என்று அறியவும் அவர் நம்மை அழைக்கிறார்.
தற்போது நீங்கள் கடந்துபோய்க்கொண்டிருக்கும் இருளான சூழ்நிலைகளில் தேவன் உங்களுக்கு ஒளியை கொடுக்கமுடியும் என்று அவரை நம்புவதற்கு உங்களுக்கு எது தடையாயிருக்கிறது? இயேசுவை இம்மானுவேல் என்று இந்த வாரத்தில் எப்படி வெளிப்படுத்தப்போகிறீர்கள்?
பரலோகப் பிதாவே, உம்முடைய குமாரனாகிய இயேசு என்னும் இம்மானுவேலருக்காய் நன்றி. அவருடைய பிரசன்னத்தில் நான் மகிழ்ந்து இன்று என் அன்பை பிரதிபலிக்க உதவிசெய்யும்.