பதினைந்து வயது நிரம்பிய இளம்பெண்ணின் மேலாடையின் கைகளை பாதி இழுத்துவிட்டுக்கொண்டதை, உளவியல் நிபுணர் கவனித்தார். அது பொதுவாக, சுய தீங்கில் ஈடுபடும் நபர்கள் பயன்படுத்தும் நீளமான கையுறைகள் கொண்ட ஆடை. அவள் தன் சட்டையின் கையுறையை மேலே தூக்கி, ஒரு பிளேடைக் கொண்டு தன் முன்னங்கையில் “வெறுமை” என்று கீறிக்கொண்டதைப் பார்த்த லெவின் திடுக்கிட்டார். அவள் சோகமாயிருந்தாள், ஆனால் அவளுக்குத் தேவையான உதவியை பெறுவதற்கு அவள் ஆயத்தமாயிருந்தாள்.
இன்று அந்தப் பெண்ணைப்போலவே தங்கள் இருதயங்களில் “வெறுமை” என்று கீறிக்கொண்ட அநேகர் உண்டு. இந்த வெறுமைகள் “பரிபூரணப்பட” (யோவான் 10:10) இயேசு வந்திருக்கிறார் என்று யோவான் அறிவிக்கிறார். பரிபூரணப்பட விரும்பும் இருதயத்தை தேவன் ஒவ்வொருவருக்குள்ளும் வைத்து, அவர்கள் தன்னுடைய உறவில் பிரியப்படவேண்டும் என்று அவர் விரும்புகிறார். அதே நேரத்தில், ‘திருடன்’ மக்களையும் சூழ்நிலைகளையும் பயன்படுத்தி, அவர்களை கொள்ளையிடுவதற்கே வருவான் என்றும் எச்சரிக்கிறார் (வச. 1,10). இருவரின் கூற்றுக்கள் ஒன்றுக்கொன்று முரணாகவும் சாயலாகவும் இருக்கிறது. ஆனால் இயேசு கொடுக்கும் “நித்திய ஜீவன்” நிஜமானது, “ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்வதுமில்லை” என்றும் வாக்களிக்கிறார் (வச. 28).
நம்முடைய இருதயத்தில் இருக்கும் வெறுமையை கிறிஸ்துவாலேயே பரிபூரணமடையச் செய்ய முடியும். நீங்கள் வெறுமையாய் உணர்ந்தால், இன்றே அவரைக் கூப்பிடுங்கள். தொடர்ச்சியாய் துன்பத்தை அனுபவிக்கிறீர்கள் என்றால், தேவனுடைய ஆலோசனைக்கு செவிகொடுங்கள். நிறைவுள்ள பரிபூரணமான வாழ்க்கையை கிறிஸ்துவால் மட்டுமே கொடுக்கமுடியும். வாழ்க்கையின் முழுமையான அர்த்தம் அவரிடத்திலேயே உண்டு.
முக்கியத்துவம் வாய்ந்த, ஆச்சரியமானவைகளைத் தேடும் தேடலில், எந்த வகையான காரியங்கள் உங்களை துக்கப்படுத்தியது? இயேசு உங்களுடைய வாழ்க்கையை எவ்வாறு நிறைவாக்கியிருக்கிறார்?
இயேசுவே, நீர் எனக்கு கொடுத்த நிறைவான, பரிபூரணமான வாழ்க்கையை நினைக்கும்போது, என்னை திருப்தியடையச் செய்யும் காரியங்கள் என்று நான் எண்ணுகிறவைகளிலிருந்து என்னை விலக்கிக் காத்தருளும்.