எனது தந்தைக்கு 2006ஆம் ஆண்டு நரம்பியல் நோய் இருப்பது கண்டறியப்பட்டது. அதினால் அவருடைய நினைவுகள், பேச்சு மற்றும் உடல் அசைவுகளின் கட்டுப்பாடு ஆகியவற்றை இழந்தார். 2011ல் அவர் படுத்தபடுக்கையானார். என் தாயார் அவரை வீட்டில் வைத்து பராமரித்துக்கொண்டார்கள். அந்த நோயின் ஆரம்பகட்டம் இருண்டதாயிருந்தது. நான் மிகவும் பயந்தேன். ஒரு நோயாளியை வீட்டில் வைத்துப் பராமரிப்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. பணத்தேவைக்குறித்தும், எனது தாயாரின் உடல் ஆரோக்கியத்தைக் குறித்தும் நான் கவலைப்பட்டேன். 

ஒவ்வொரு நாள் காலையிலும் நான் எழுந்திருக்கும்போது, என் இருதயத்தைப்போன்றே இருள் சூழ்ந்த அந்த அனுபவத்திலிருந்து வெளிவருவதற்கு புலம்பல் 3:22 எனக்கு உதவியது: “நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே.” “நிர்மூலமாதல்” என்ற வார்த்தைக்கான எபிரெய பதம், “முற்றிலும் அழிக்கப்பட்ட” அல்லது “முடிவுக்கு வருதல்” என்று அர்த்தங்கொள்கிறது. 

ஒவ்வொரு நாளையும் நாம் கடந்துசெல்வதற்கு தேவனுடைய கிருபை நம்மை ஊக்குவிக்கிறது. நம்முடைய சோதனைகள் நம்மை மேற்கொள்வதாக தெரியலாம், ஆனால் அது நம்மை சேதப்படுத்தாது, ஏனென்றால் நம்மிடம் இருக்கும் தேவனுடைய கிருபை அதைக்காட்டிலும் மேலானது.

என்னுடைய குடும்பத்திற்கு தேவன் பல விதங்களில் தன்னுடைய உண்மைத்துவத்தை வெளிப்படுத்தியுள்ளார். என்னுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்கள், மருத்துவர்களின் நல் ஆலோசனைகள், பொருளாதார உதவிகள் ஆகியவற்றின் மூலமாய் தேவனுடைய கிருபையை நான் பார்க்க நேர்ந்தது. இவைகள் அனைத்தும், என் தந்தையை ஒரு நாள் பரலோகத்தில் சந்திப்பேன் என்று எனக்கு நினைவுபடுத்தியது. 

நீங்கள் இருளான பாதையில் பயணிக்கிறவர்கள் என்றால், உங்கள் நம்பிக்கையை இழக்கவேண்டாம். நீங்கள் சந்திக்கிற பிரச்சனைகள் உங்களை ஒருபோதும் மேற்கொள்வதில்லை. தேவனுடைய மெய்யான அன்பிற்காகவும் அவருடைய கிருபைக்காகவும் அவரைத் தொடர்ந்து நம்புவோம்.